கம்யூனிஸ்ட் கட்சியினரின் பிரச்சாரப் பொருட்கள் பறிமுதல் பறக்கும் படையின் பணி இதுதானா?
3 Apr 2026, 5:05 pm
<p><strong>கம்யூனிஸ்ட் கட்சியினரின் பிரச்சாரப் பொருட்கள் பறிமுதல் பறக்கும் படையின் பணி இதுதானா?</strong></p>
<p>தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் ஆணை யத்தின் பறக்கும் படையினர் பெரிய அளவிலான குற்றங்களையும் பணப் பரிமாற்றங்களையும் தடுப்பதில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, எளிய மக்களிடம் நிதி திரட்டி அர சியல் நடத்தும் இடதுசாரி இயக்கங்க ளைக் குறிவைத்து முடக்கி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் சம்பவங்கள், தேர்தல் ஆணை யத்தின் நடுநிலைத்தன்மை குறித்து ஐயத்தை ஏற்படுத்தியுள்ளன. மக்கள் நிதித் திரட்டலை முடக்கும் பறக்கும் படை நீலகிரி மாவட்டம் அருவங்காடு பகுதியில் கடந்த மார்ச் 25 அன்று காலை 10.45 மணியளவில் சோத னையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படை அலுவலர் கோ. தண்டபாணி தலைமையிலான குழுவினர், மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் வாக னத்தை மறித்து தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனை யின் போது, அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு எளிய மக்களிடம் நிதி திரட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த 24 வசூல் ரசீது புத்தகங்கள், 30 உறுப்பினர் சந்தா ரசீது புத்தகங்கள் மற்றும் கட்சியின் 310 போஸ்டர்கள், பேனர்களைப் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். கட்சியின் அன்றாடச் செயல்பாடுகளுக்கான மிகச்சிறிய அளவிலான நிதியைக் கூட “தேர்தல் நடத்தை விதிமுறை” மீறல் என்ற பெயரில் முடக்குவது ஜனநாயக விரோதச் செயலாகும். தொடரும் பாரபட்சமான நடவடிக்கைகள் இதேபோன்று ஏப்ரல் 1 அன்று மாலை 4.53 மணியளவில் வார்வில் பகுதியில் மற்றொரு அதிரடிச் சோத னையைத் தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை நடத்தியது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குச் சொந்தமான 35 மாநாட்டு வசூல் ரசீது புத்த கங்கள், 1500 நோட்டீஸ்கள் மற்றும் 84 ஸ்டிக்கர்களைப் பறக்கும் படை யினர் எவ்வித முறையான முகாந்திர முமின்றி கைப்பற்றியுள்ளனர். கார்ப்பரேட் நிறுவனங்களிடம் கோ டிக்கணக்கில் நிதி பெறும் கட்சி களை விட்டுவிட்டு, உழைக்கும் வர்க்கத்திடம் ஐம்பது, நூறு என நிதி திரட்டி நேர்மையான அரசியல் நடத்தும் தோழர்களின் பிரச்சாரப் பொருட்களைக் குறிவைப்பது கண்ட னத்திற்குரியது என வெள்ளியன்று சென்னையில் தேர்தல் ஆணை யத்திடம் நேரில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சித் தலைவர்கள் ஐ.ஆறு முக நயினார், வெ.ராஜசேகரன், ப.சுந்தரராசன் ஆகியோர் பதிவு செய்துள்ளனர். ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் பெரிய அளவிலான பணப் பட்டுவாடா மற்றும் தேர்தல் முறை கேடுகளைக் கண்டறிந்து தடுக்க வேண்டிய பறக்கும் படையினர், அதற்கு மாறாக, மக்களின் உரிமை களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இடதுசாரி இயக் கங்களின் தேர்தல் பணிகளைத் திட்டமிட்டுச் சிதைக்கும் இத்த கைய நடவடிக்கைகள், தேர்தல் களத்தில் அனைத்துக் கட்சிகளுக் கும் வழங்கப்பட வேண்டிய சமவாய்ப்பைச் சீர்குலைப்பதாக அமைந்துள்ளது. தேர்தல் ஆணையம் இத்தகைய ஒருதலைப்பட்சமான போக்கைக் கைவிட்டு, உண்மையான தேர்தல் விதிமீறல்கள் மீது கவனம் செலுத்த வேண்டும் என்பதே நடுநிலையா ளர்களின் கோரிக்கையாக உள்ளது.</p>
