முந்தய பக்கம்

நள்ளிரவு ‘தரிசனம்’ செய்த சரத்குமாரின் கதி இதுதானா?

22 Mar 2026, 4:19 pm
நள்ளிரவு ‘தரிசனம்’ செய்த சரத்குமாரின் கதி இதுதானா?
<p><strong>நள்ளிரவு &lsquo;தரிசனம்&rsquo; செய்த சரத்குமாரின் கதி இதுதானா?</strong></p> <p>அந்த நள்ளிரவு மேஜிக் என்னாச்சு? கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்த லுக்கு முன்பாக, திடீரென ஒரு நள்ளிரவில் தோன்றிய எண்ணத்தால் பாஜகவில் இணைந்ததாக சரத்குமார் கூறியிருந் தார். &ldquo;பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்துவேன்&rdquo; என்று வீரவசனம் பேசிவிட்டு, தனது மனைவி யைத் தேர்தல் &nbsp;களத்தில் இறக்கிப் பார்த்தார். ஆனால், அங்கேயும் &lsquo;வாஷ் அவுட்&rsquo; ஆகி, இப்போது இரண்டு ஆண்டுகளாகியும் தில்லியி லிருந்து எந்த &lsquo;பதவிப் பார்வையும்&rsquo; அவர் பக்கம் திரும்பவில்லை. காத்திருந்து காய்ந்து போன &lsquo;சுப்ரீம் ஸ்டார்&rsquo; மாநிலங்களவை (Rajya Sabha) சீட் அல்லது கட்சிக்குள் முக்கியப் பொறுப்பு &nbsp;கிடைக்கும் என்று எதிர்பார்த்து &lsquo;வெயிட்டிங் லிஸ்டில்&rsquo; இருந்த சரத்குமாருக்கு, இந்த &nbsp;2026 சட்டமன்றத் தேர்தலிலும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. &ldquo;கட்சியைக் கலைத்த பாவத்திற்கு, கறிவேப்பிலை யாகக் கூட மதிக்கவில்லையே&rdquo; என்பதுதான் அவரது ஆதரவாளர்களின் தற்போதைய குமுறல். தன்னைப் புறக்கணிக்கும் பாஜக தலைமையால் அப்செட்டான சரத்குமார், ஞாயிற்றுக் கிழமை தியாகராய நகரில் தனது ஆதர வாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். &nbsp; பின்னர், தனது பொறுமைக்கும் எல்லை உண்டு என்றும், யாருக்கும் தான் பயப்படுவதில்லை என்றும் கூறி யுள்ளார். &nbsp;கட்சியின் முன்னோடிகள் பாஜக மாநிலத் தலைவரிடம் கோரிக்கை மனு அளிக்க வேண்டும் என்றும், அது நிறை வேற்றப்படாவிட்டால் அடுத்த நடவடிக்கை குறித்து முடிவெடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். &ldquo;நள்ளிரவில் எடுத்த முடிவு இப்போது நடுத்தெருவில் வந்து நிற்கிறது&rdquo; என்று எதிர்க்கட்சியினர் கிண்டலடிக்கின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram