அங்கன்வாடி பணிகளுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வா?
17 Dec 2025, 4:11 pm
<p><strong>அங்கன்வாடி பணிகளுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வா?</strong></p>
<p>சேலம், டிச.17- அங்கன்வாடி பணிகளில் 30 சதவீதம் டிஎன்பிசி தேர்வாணையம் மூலம் தேர்வு செய் யப்படும் என்ற அறிவிப்பை கண்டித்து சிஐடியு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். 1993 இல் பணியில் சேர்ந்து அங்கன்வாடி பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலை இரண்டிற்கான பதிவு உயர்வானது தற்சம யம் வழங்க உள்ள சூழ்நிலையில், அங்கன் வாடி பணியாளர்களிலிருந்து 70 சதம் அங்கன் வாடி பணியாளர்களையும் மீதம் இருக்கும் 30 சதவீதம் டிஎன்பிசியில் இருந்தும் எடுப்ப தாக முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படு கிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணை யம் மூலம் 30 சதவீத பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டால் தற்போது 1993 ஆம் ஆண்டு முதல் பணியாற்றும் அங் கன்வாடி பணியாளர்களுக் கான பதவி உயர்வு பரிபோ கம் சூழ்நிலை ஏற்பட்டுள் ளது. இந்நிலையில், அங்கன் வாடி பணிகளில் 30 சதவீதம் டிஎன்பிசி தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படும் என்ற அறிவிப்பை கண்டித்து சிஐடியு தமிழ் நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத் தினர் சேலம் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்திற்குள் புத னன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். மாவட்டச் செயலா ளர் எஸ். வசந்தகுமாரி தலை மையில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில், மாவட்டத் தலை வர் உமா, மாவட்டப் பொருளாளர் செல்வராணி, மாவட்ட நிர்வாகி மேரி, தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க செயலா ளர் சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தருமபுரி தருமபுரி வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்டச் செயலா ளர் சி.கவிதா தலைமை வகித்தார். இதில் சிஐடியு மாநில துணைத்தலைவர் சி.நாகரா சன், அங்கன்வாடி ஊழியர் சங்க மாநிலச் செய லாளர் எம்.லில்லி புஷ்பம், அரசு ஊழி யர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.தெய் வானை, அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட் டப் பொருளாளர் என்.தெய்வானை உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
