ரேசன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடா?: குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மறுப்பு
9 Nov 2025, 2:37 pm
<p><strong>ரேசன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடா?: குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மறுப்பு</strong></p>
<p>சென்னை, நவ.9 - ரேசன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு தொடர்பான எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பதிலளித்து உள்ளார். அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக் கையில், எடப்பாடி பழனிசாமி 12,573 கடைகளில் கோதுமை இல்லை என்று கூறியிருப்பதாகக் குறிப்பிட்டு உள்ளார். ஒன்றிய அரசிடம் தமிழ்நாட் டிற்கு அதிக அளவில் கோதுமை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கேட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். ஜனவரி 2024 முதல் செப்டம்பர் 2024 வரை மாதம் 8,576 மெட்ரிக் டன் மட்டுமே ஒன்றிய அரசால் வழங் கப்பட்டு வந்ததாகவும், தற்போது மார்ச் 2025 முதல் கோதுமை ஒதுக் கீடு பழைய அளவிற்கே குறைக்கப் பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். நவம்பர் 2025 மாதத்திற்கு 8,722 மெட்ரிக் டன் கோதுமை மாவட்டங் களுக்கு நுகர்வின் அடிப்படையில் உப ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். கடந்த மூன்று மாதங்களில் கோதுமை யின் நுகர்வு சதவீதம் சராசரியாக 92 சதவீதம் என பதிவாகியுள்ளதாக வும், நவம்பர் 8 வரை 63 சதவீதம், அதா வது 5,386 மெட்ரிக் டன் கோதுமை நியாய விலைக் கடைகளுக்கு நகர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறி னார். நவம்பர் 15-க்குள் 100 சதவீத கோதுமையும் நியாய விலைக் கடை களுக்கு நகர்வு செய்யப்பட்டு வழக்கம் போல் பொதுமக்களுக்கு தங்குதடை யின்றி வழங்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். உண்மை நிலையைப் புரிந்து கொள்ளாமல் எடப்பாடி பழனிசாமி எல்லாவற்றிலும் அரசியல் செய்ய வேண்டாம் என்று அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.</p>
