ஏழைப் பயணிகளின் பயண உரிமையைப் பறிக்கிறதா ரயில்வே?
15 Feb 2026, 3:03 pm
<p><strong>ஏழைப் பயணிகளின் பயண உரிமையைப் பறிக்கிறதா ரயில்வே?</strong></p>
<p>புதுதில்லி, பிப்.15 - இந்திய ரயில்வேயை லாபம் ஈட்டும் நோக்கில் ஏசி பெட்டிகளாக மாற்றி, சாதா ரண மக்களின் ஸ்லீப்பர் மற்றும் பொதுப் பெட்டிகளைக் குறைத்து வரும் ஒன்றிய அரசின் நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் நாடா ளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந் தம் நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்தி யுள்ளார். நாடாளுமன்றத்தில் ஆர்.சச்சிதானந் தம் எழுப்பிய கேள்விக்கு (கேள்வி எண்: 2045), ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்துள்ள பதில், சாதாரண மக்களின் ரயில் பயணச் சிரமங்களை மூடி மறைப்பதாக அமைந்துள்ளது. 78% இடங்களுக்கு 90% பயணிகள் போட்டி அமைச்சர் அளித்துள்ள புள்ளிவிவ ரங்களின்படி, இந்திய ரயில்வேயில் தற்போது மொத்தம் 82,200 பெட்டிகள் உள்ளன. இதில் ஏசி பெட்டிகள் 25,000 (சுமார் 30%), ஏசி இல்லாத பெட்டிகள் 57,200 (சுமார் 70%) ஆகும். அதேபோல் மொத்த இருக்கை வசதியில் 22% (15 லட்சம் இடங்கள்) ஏசி வகுப்பிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டின் பெரும்பான்மையான ஏழை மற்றும் நடுத்தர மக்கள் முன்பதிவில்லாத மற்றும் ஸ்லீப்பர் வகுப்பையே நம்பி யுள்ள நிலையில், வெறும் 22% ஏசி பயணி களுக்காக அதிக முக்கியத்துவம் கொடுக்கப் படுவது, ரயில்வேத் துறை ஏழைகளிட மிருந்து விலகிச் செல்வதைக் காட்டுகிறது. மேலும், ஒரு ரயிலின் 22 பெட்டிகளில் 8 பெட்டிகள் (சுமார் 36%) ஏசி பெட்டிகளாக இருக்கலாம் எனத் தற்போதைய கொள்கை மாற்றப்பட்டுள்ளதையும் அமைச்சர் குறிப் பிட்டுள்ளார். இது கடந்த காலத்தில் சாதா ரண பயணிகளுக்காக இருந்த பெட்டி களின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைத்துள்ளது. பழைய பெட்டிகளையே காட்டும் ‘பயன்பாடு’ தந்திரம் ரயில்களில் ஸ்லீப்பர் மற்றும் பொதுப் பெட்டிகள் குறைக்கப்பட்டனவா என்ற நேரடி கேள்விக்கு, கடந்த நிதியாண் டில் 1,250 பொதுப் பெட்டிகள் ‘பயன்படுத்தப் பட்டன’ (Utilised) என அமைச்சர் பதிலளித் துள்ளார். புதிய பெட்டிகள் ‘சேர்க்கப் பட்டன’ (Added) எனக் கூறாமல், ‘பயன் படுத்தப்பட்டன’ எனக் கூறுவது, பழைய பெட்டிகளையே மீண்டும் சுழற்சி முறை யில் பயன்படுத்தியதை மறைக்கும் தந்தி ரமோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. ஏற்கனவே ஓடிக்கொண்டிருக்கும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் சாதாரணப் பெட்டிகளைக் குறைத்துவிட்டு, அதற்குப் பதிலாக 54 ‘அம்ரித் பாரத்’ (Amrit Bharat) ரயில்களை அறிமுகப்படுத்தியுள்ளதாக அரசு தம்பட்டம் அடிக்கிறது. ஆனால், எதார்த்தத்தில் சாதாரண ரயில்களில் இட மில்லாததால் ஏழை பயணிகள் அதிகக் கட்டணம் செலுத்தி ஏசி பெட்டிகளில் பய ணிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப் பட்டுள்ளனர். ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. கடும் விமர்சனம் ஒன்றிய அரசின் இந்தப் பதில் குறித்து ஆர்.சச்சிதானந்தம் எம்.பி., தமது அறிக் கையில், “ரயில் பயணிகளில் 90 சத வீதத்திற்கும் அதிகமானவர்கள் சாதாரண வகுப்பையே நம்பியுள்ளனர். ஆனால், ரயில்வே நிர்வாகமோ லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு ஏசி பெட்டி களை அதிகரித்து வருகிறது. ஸ்லீப்பர் பெட்டிகள் குறைக்கப்படுவதால் ஏழை கள் ரயில் பயணத்திலிருந்து புறக்கணிக்கப் படுகிறார்களா என்ற கேள்விக்கு, ‘பயணி கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது’ என மழுப்பலாக அமைச்சர் பதில் கூறுகிறார். மக்கள் முன்பதிவில்லாத பெட்டிகளில் கழிவறை வரை அமர்ந்து நரக வேதனை யுடன் பயணிக்கும் நிலையை மூடிமறைக்க புள்ளிவிவரங்களைப் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது. ஏழைகளின் பயண உரிமையைப் பறித்து, ரயில்வேயை கார்ப்பரேட் மயமாக்கும் நடவடிக்கை களை ஒன்றிய அரசு உடனடியாகக் கை விட வேண்டும். 17,000 ஏசி இல்லாத பெட்டிகள் தயாரிக்கப்படும் என்ற வாக்குறுதி காகித அளவில் இல்லாமல், உடனடி யாகச் செயல்படுத்தப்பட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.</p>
<p> </p>
