வாழ்விட மேம்பாட்டு வாரியம் வாழ்வைப் பறிக்கலாகுமா?
6 Dec 2025, 6:20 pm
<p><strong>வாழ்விட மேம்பாட்டு வாரியம் வாழ்வைப் பறிக்கலாகுமா?</strong></p>
<p>‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்’ என்கிற பொன்மொழியை நோக்கமாகக் கொண்டு 1970ஆம் ஆண்டில் அன்றைய திமுக அரசால் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் சென்னை மாநகராட்சியில் மட்டும் என நடைமுறைப்படுத்தப்பட்ட இத்திட்டம், 1984ஆம் ஆண்டிற்குப் பிறகு படிப்படியாகத் தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் பரவலாக்கப்பட்டது. தமிழ்நாட்டைச் ‘சேரி இல்லாத மாநிலமாக’ (குடிசைப்பகுதி இல்லாத மாநிலமாக) உருவாக்க வேண்டும் என்பதுதான் இத்திட்டத்தின் இறுதி இலக்காகத் தீர்மானிக்கப்பட்டுச் செயல்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் என்கிற பெயர் தற்போது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் (TNUHDB) என மாற்றப்பட்டுள்ளது. இத்துறையின் கீழ் சென்னை நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் (MUDP), தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் திட்டம் (TNUDP), தளம் மற்றும் சேவைத் திட்டம் என மூன்று வகையாகத் திட்டங்களை வாரியம் செயல்படுத்தி வருகிறது. சென்னை நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சுமார் 300 திட்டப் பகுதிகளில் 50 ஆயிரம் குடியிருப்புகளும், தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சுமார் 500 திட்டப் பகுதிகளில் சுமார் ஒரு லட்சம் குடியிருப்புகளும், தளம் மற்றும் சேவைத் திட்டத்தின் கீழ் என மொத்தம் 1,000க்கும் மேற்பட்ட திட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகின்றன. உலக வங்கி நிதியுதவித் திட்டம் சென்னை நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், உலக வங்கி நிதியுதவியுடன் 1977 - 1987 ஆண்டு களில் புதிய திட்டங்களைச் செயல்படுத்தியது. இதன்படி சென்னை நகரில் சுமார் 300 திட்டப் பகுதிக ளில், அவர்கள் குடியிருக்கும் பகுதியிலேயே மேம்பாட்டுத் திட்டம் என்கிற பெயரில் அடிமனையாக வாடகை கொள்முதல் ஒப்பந்தம் மூலம் குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளது (Allotment). அதில் 50 ஆயிரம் குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டு வாழ்ந்து வருகின்றன. வாடகை கொள்முதல் ஒப்பந்தம் முறையில் இதற்கு முன்பு கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பு களையும் இணைத்தனர். பராமரிப்புக் கட்டணம் வசூலிப்பதைக் கைவிட்டு, வாடகை கொள்முதல் ஒப்பந்த முறையில் சுலபத் தவணையாகச் செலுத்தி (Hire Purchase Schemes) கிரய பத்திரம் பெற்று வீட்டைச் சொந்தமாக்கிக் கொள்ளலாம் என்று அறிவித்தனர். திட்டத்தின் நோக்கம் சிதைக்கப்பட்ட அவலம் குறைக்கப்பட்ட பரப்பளவும் அதிக விலையும்: அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒவ்வொரு வீட்டின் அளவும் குறைக்கப்பட்டது. உதாரணமாக, கண்ணகி நகரில் 8 அடி அகலம் 12 அடி நீளம் என 96 சதுரடியில் பல ஆயிரக்கணக்கான வீடுகளைக் கட்டி ‘கனவு இல்லம்’ என வழங்கினார்கள். இதில்தான் ஒரு குடும்பம் வாழ வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தற்போது பொது பயன்பாட்டிற்கான அளவு உள்ளிட்ட 390 சதுரடி வழங்கப்படுகிறது. இந்த வீடுகளுக்கான விலை 13 லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்படுகிறது. ஒவ்வொரு பகுதியின் தன்மைக் கேற்ப விலை மாறுகிறது. தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசு மானியம் தவிர்த்து 6 முதல் 8 லட்சம் ரூபாய் வரை மாதாமாதம் பயனாளிகள் செலுத்த வேண்டும். கிரயப் பத்திரம் மறுப்பு: உலக வங்கி நிதியின் கீழ் சென்னையின் பல்வேறு பகுதிகளில் நில ஒதுக்கீட்டுத் திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ஏழை எளிய மக்கள் புறம்போக்கு இடங்களை வாங்கி குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். அத்தகைய பகுதிகளை வாரியம் கையகப்படுத்தி, ஒதுக்கீட்டுப் பகுதி என அறிவித்து அங்குள்ளவர்களுக்கு ஒதுக்கீடு (Allotment) வழங்குகிறது. அந்த இடங்களுக்குக் குறிப்பிட்டத் தொகையை நிர்ணயித்து வாடகை கொள்முதல் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணம் கட்டி கிரய பத்திரம் வழங்கப்படும் என அறிவித்தது. இத்திட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்கள் முழுத்தொகையைச் செலுத்திய பிறகும் கிரய பத்திரமும், பட்டாவும் கிடைக்காமல் அவதியுறுகின்றனர். வறுமையின் கொடுமையும் சட்டச் சிக்கல்களும் பெயர் மாற்றம் சிக்கல்: இத்திட்டத்தில் இட ஒதுக்கீடு பெற்றவர்கள், முழுத்தொகையை அல்லது பகுதித் தொகையைச் செலுத்திய பிறகு, வறுமை உள்ளிட்ட காரணங்களால் அந்த இடத்தை விற்கின்றனர். குறைந்த விலையில் கிடைப்பதால் எளிய மக்கள் கடனைப் பெற்று அத்த கைய இடங்களை வாங்குகின்றனர். நிலுவைத் தொகை இருப்பின் அதனைத் தொடர்ந்து செலுத்து கின்றனர். ஆனால், வாங்கப்பட்ட இடம் தற்போது உள்ளவருக்கு உரியது என்பதற்கான எந்த ஆவணமும் இல்லை. அதாவது, பெயர் மாற்றம் செய்து கிரைய பத்திரம், பட்டா பெற முடியாமல் அவதியுறுகின்றனர். மேலும், ஒதுக்கீட்டுதாரர் இறந்துவிட்டால், வாரிசுதாரர் பெயர் மாற்றி கிரய பத்திரம் பெற முடியாமல் அவதியுறுகின்றனர். அரசு கொடுத்த இடத்தை அரசே இடித்த விந்தை H கோவிந்தசாமி நகர்: மயிலாப்பூர் பகுதி, கோவிந்தசாமி நகர் பகுதி 1972ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் வாடகை கொள்முதல் ஒப்பந்தத்தின் மூலம் இடமாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், 2022ஆம் ஆண்டு நீர்ப்பிடிப்பு என நீதிமன்றம் உத்தரவிட்டதால், சுமார் 450 குடியிருப்புகளை அரசு வலுக்கட்டாயமாக இடித்துத் தரைமட்டமாக்கியது. இதைத் தடுப்பதற்கான போராட்டத்தில் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்தார். H அரும்பாக்கம்: இதேபோன்று அரும்பாக்கம் நடுவாங்கரை பிள்ளையார் கோவில் தெரு குடியிருப்புகள், கூவம் நதி மறுபுனரமைப்புத் திட்டம் என்கிற பெயரில் 64 வீடுகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. Hஅனகாபுத்தூர்: அனகாபுத்தூர் அடையாற்றின் கரையோரம் இருந்த குடியிருப்புகள் அடையாறு புனரமைப்புத் திட்டம் என்கிற பெயரில் இடித்துத் தள்ளப்பட்டது. H குரோம்பேட்டை: குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலை விரிவாக்கத்தின்போது அங்கிருந்த குடியிருப்புகளுக்கு, குடிசை மாற்று வாரியத்தால் சேலையூர் பாரத் நகர், அம்பேத்கர் நகர் பகுதிகளில் மறுகுடியமர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு விற்பனை பத்திரத்தை மறுத்து வருகின்றனர். H மதுரவாயல்: மதுரவாயல் தாம்பரம் புறவழிச்சாலை அமைப்பதற்காக அனகாபுத்தூர் கரிகாலன் நகரில் வாழ்ந்த மக்களைப் பொழிச்சலூர் தாங்கல் பகுதியில் மாவட்ட ஆட்சியர் மறு குடியமர்வு செய்தார். இவர்களுக்குப் பட்டா வழங்க அரசு மறுத்து வருகிறது. H ராமாபுரம்: ராமாபுரம் சாலை விரிவாக்கத்திற்காக அகற்றப்பட்ட குடும்பங்களை, அருகாமை யில் உள்ள திருமலை நகரில் அரசு மறுகுடியமர்வு செய்தது. பல்லாண்டுகளாகப் பட்டா வழங்காமல், நீர்ப்பிடிப்புப் பகுதி என நீதிமன்றம் அறிவித்ததும் குடியிருப்புகளை அகற்ற வருவது நியாயமா? கோரிக்கை மற்றும் போராட்டம் வாடகை கொள்முதல் ஒப்பந்தத்தின் அடிப்படை நோக்கமே, ஏழை எளிய மக்களை அவர்கள் குடியிருக்கும் பகுதியிலேயே நிலத்தை உரிமையாக்கி, வாழ்வை மேம்படுத்துவதுதான். அதற்காகத்தான் இந்த வாரியமே உருவாக்கப்பட்டது. வாடகை கொள்முதல் ஒப்பந்தத்தின் படி முழுப் பணம் செலுத்திப் பல்லாண்டுகளாகியும் கிரய பத்திரம், பெயர் மாற்றம், ஒதுக்கீடு மாற்றம் பெறமுடியாத நிலையில், எப்படி அவர்களது சிரிப்பில் இறைவனைக் காண முடியும்? எனவே, தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியமும் இணைந்து உடன டியாகச் சிறப்பு அரசாணை வெளியிட வேண்டும். H வாடகை கொள்முதல் ஒப்பந்தத்தின் மூலம் ஒதுக்கீடு பெற்று தவணை முறையில் முழுப் பணம் செலுத்தியவர்களுக்கு உடனடியாக கிரைய பத்திரம் வழங்கி பட்டா தர வேண்டும். H ஒதுக்கீடுதாரர் இறந்த பிறகு, வாடகை கொள்முதல் ஒப்பந்தம் மூலம் பணம் கட்டியிருந்தாலும், வாரிசுதாரர்களுக்கு பெயர் மாற்றம் செய்து கிரைய பத்திரம், பட்டா வழங்க வேண்டும்! H வறுமையின் காரணமாக ஒதுக்கீடுதாரர் விற்ற நிலத்தை வாங்கியவர்களுக்கு பெயர் மாற்றம் செய்து, கிரைய பத்திரம் பட்டா வழங்க வேண்டும்! இதனை வலியுறுத்தி டிசம்பர் 16 அன்று சென்னையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பேரணி யாக அணிதிரள்கின்றனர். நிலம் எங்களின் அடிப்படைக் உரிமை, ஒருபோதும் அதை விட்டுத்தர முடியாது என்பதை வலியுறுத்தி நடைபெறும் இந்த போராட்டத்தின் நிறைவாக முதலமைச்சரைச் சந்தித்து மனு கொடுக்க உள்ளனர்.</p>
