மாமேதை காரல் மார்க்சை அவதூறு செய்வதா? ஆளுநர் ரவிக்கு நாவடக்கம் தேவை!
28 Nov 2025, 2:28 pm

மாமேதை காரல் மார்க்சை அவதூறு செய்வதா? ஆளுநர் ரவிக்கு நாவடக்கம் தேவை!

பெ. சண்முகம் எச்சரிக்கை

சென்னை, நவ. 28 - ஆளுநர் ஆர்.என். ரவிக்கு நாவ டக்கம் தேவை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் எச்சரித்துள்ளார். மாமேதை காரல் மார்க்ஸ் மற்றும் மார்க்சியர்கள் மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்து வெள்ளியன்று (நவ.28) சைதாப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் பெ. சண்மு கம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளர்கள் ஆர். வேல்முருகன் (தென்சென்னை), எம். ராம கிருஷ்ணன் (வடசென்னை), மாநி லக்குழு உறுப்பினர் கே. வனஜ குமாரி, தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் க. பீம்ராவ் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதனிடையே செய்தியாளர்களி டம் பெ. சண்முகம் பேசுகையில், “தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என். ரவி பொறுப்பேற்றதிலிருந்து, வாயைத் திறந்தாலே பொய், அவதூறு, தமிழ்நாட்டிற்கு, தமிழ்நாடு அரசுக்கு எதிராக பேசு வது, அறிவியலுக்கு புறம்பாக பேசுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார். ஆளுநர் என்கிற முறையில் தமிழ்நாட்டின் நல னுக்காக ஒரு கருவேப்பிலை அள விற்கு கூட எந்தவித நன்மையும் செய்யாதவர் ஆர்.என். ரவி” என்று சாடினார். “ஆளுநர் பதவி தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்ய கிடைத்த அரிய வாய்ப்பு என்று அவர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அப்படி என்ன சேவை செய்துள் ளார் என்பதை அவர் கூற வேண்டும். பாஜக - ஆர்எஸ்எஸ் ஏவலாளியாக மட்டுமே அவர் இருக்கிறார்” என்று குறிப்பிட்ட பெ. சண்முகம், “ஆளு நர் ரவி அண்மையில் ஒரு நூல் வெளி யீட்டு விழாவில், உலக மாமேதை மார்க்சையும், மார்க்சிய தத்து வத்தையும் அவதூறு செய்யும், கொச்சைப்படுத்தும் வகையில் பேசி யுள்ளார். அவருக்கு நாவடக்கம் வேண்டும். இல்லாவிடில், சென்னை யில் ஆளுநரின் ஆணவப் போக்கை கண்டித்து தொடங்கிய இந்த போராட்டம் மாநிலம் முழுவதும் நடைபெறும்” என்று எச்சரித்தார். கம்யூனிஸ்ட் கட்சிகளை விமர்சனம் செய்து பாஜக தலை வர்கள் பேசுவது தொடர்பாக செய்தி யாளர் எழுப்பிய வினாவிற்கு பதிலளித்த பெ. சண்முகம், “பாஜக, ஆர்எஸ்எஸ் எங்கள் கொள்கை எதிரி. அவர்களுக்கு நாங்கள் தான் எதிரி. எனவே, உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். குற்றம்சாட்ட வேண்டும் என்பதற்காகவே திட்ட மிட்டு அவதூறு பரப்புகின்றனர். தமிழக அரசு மக்களுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளை எதிர்த்தும், மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் அதன் அமைப்புகள் போராடுகின்றன. ஒவ்வொரு பிரச்ச னையிலும் மார்க்சிஸ்ட் கட்சியின் அணுகுமுறை வேறானது” என்றார். மற்றொரு கேள்விக்கு பதில ளிக்கையில், “புயல் காரணமாக இலங்கையில் பெரும் அழிவு ஏற்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கானோர் மாண்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு இழப்புகளை சந்தித்துள்ளனர். அந்தப் புயல் தமிழகத்தை நோக்கி வரு கிறது. மாநில அரசு போது மான முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெக-வில் இணைந்தது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “ஏற்கெனவே அங்கு நான்குபேர் உள்ளனர். இவர் 5வது ஆள்” என்றார்.