தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வெப்ப அலை மண்டலமாக மாறுகிறது தமிழ்நாடு?

20 Feb 2026, 2:39 pm
வெப்ப அலை மண்டலமாக மாறுகிறது தமிழ்நாடு?

வெப்ப அலை மண்டலமாக மாறுகிறது தமிழ்நாடு?

சென்னை, பிப். 20- சென்னையில் பிப்., 17, 18 ஆகிய தேதிகளில் “தமிழ்நாடு கால நிலை உச்சிமாநாடு 4.0” நடை பெற்றது. இந்த மாநாட்டில் “தமிழ கத்தின் நகர்ப்புற வெப்பத் தீவு மதிப்பீடு மற்றும் நகர்ப்புற குளிர்ச்சிக் கான முக்கியமான அணுகுமுறை வழிகாட்டுதல்கள்” என்ற தலைப்பில் அறிக்கை ஒன்று வெளியானது. அந்த அறிக்கையில், சென்னை, கோவை, திருநெல்வேலி மற்றும் திருச்சி ஆகிய நகரங்களுக்கான ‘வெப்ப அபாயக் குறியீடு’ அறிமுகப் படுத்தப்பட்டது. அதே போல தற் போதைய ஆய்வின்படி, புவி வெப்ப மடைதல் மற்றும் நகரமயமாக்கல் இதே வேகத்தில் தொடர்ந்தால், 2050ஆம் ஆண்டிற்குள் தமிழக மக்கள் ஆண்டுக்கு 200 முதல் 250 நாட்கள் வரை உடல்நலத்திற்கு ஒவ்வாத “வெப்ப அசௌகரியத்தை” எதிர்கொள்ள நேரிடும் என எச்ச ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதா வது, வருடத்தில் சுமார் 70% நாட்கள் கடும் வெப்பத்திலேயே கழியும் நிலை ஏற்படும்.

சென்னை மோசம்

தமிழ்நாட்டில் சென்னை மாநகரம் மற்ற நகரங்களை விட வேகமாக வெப்பமடைந்து வருகிறது. கடந்த 20 ஆண்டுகளில் (2000 முதல் 2020 வரை) சென்னையின் நில மேற்பரப்பு வெப்பநிலை 4.2 டிகிரி செல்ஸியஸ் அதிகரித்துள்ளது. இதற்கு கட்டி டங்களின் அடர்த்தியே காரணம் ஆகும். சென்னையில்  81% நிலப்பரப்பு கட்டிடங்களால் சூழப்பட்டுள்ளது. காடுகள் அல்லது பசுமைப் போர்வை வெறும் 2% மட்டுமே உள்ளது. இது வெப்பத்தை வெளியேற்ற முடியா மல் நகரத்திற்குள்ளேயே தக்க வைத்துக் கொள்கிறது.  அதே போல சென்னையின் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி, கோவையின் வெள்ளலூர், திருச்சி யின் அரியமங்கலம் ஆகிய குப்பைக் கிடங்குகளைச் சுற்றியுள்ள பகுதி களில் தாவரங்கள் இல்லாததாலும், குப்பையிலிருந்து வெளியேறும் வாயுக்களாலும் வரும் காலங்களில் வெப்பம் மிக அதிகமாக வெளிப் படும்.  மேலும் சென்னையின் அம்பத் தூர் மற்றும் கோவையின் ரத்தினபுரி போன்ற தொழில் மண்டலங்கள் அதிக  வெப்பத்தை உமிழ்கின்றன. சென்னை யின் நொச்சிக்குப்பம், அயோத்திக் குப்பம் போன்ற கடலோரக் குடிசைப் பகுதிகளில் பசுமைப் போர்வை மிகக் குறைவாக இருப்பதால், அங்குள்ள மக்கள் கடும் வெப்ப அழுத்தத்திற்கு உள்ளாகும் சூழல் ஏற்படும். வெப்ப அலைகளை மாநிலத்தின் பிரத்யேகப் பேரிடராக அறிவித்த முதல் இந்திய மாநிலம் தமிழ்நாடு என்ற நிலையில், வெப்ப அலையைத் தடுக்க தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. நகரங்களைக் குளிர்விப்பதற்கான திட்டங்களை வகுக்கப் பிரத்யேக வெப்பத் தடுப்பு மையம் அமைக்கப்பட்ட உள்ளது. கட்டிடங்களின் மேற்கூரைகளில் வெப்பத்தைத் தடுக்கும் பூச்சுகளைப் பூசுதல், அதிக மரங்களை நடுதல் மற்றும் நீர்நிலைகளைப் பாதுகாத்தல் போன்ற வழிகாட்டுதல்களையும் அரசு வெளியிட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.