தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

காவி ரவுடித்தனம் தவறான வார்த்தையா?

25 Sept 2026, 7:35 pm
காவி ரவுடித்தனம்  தவறான வார்த்தையா?

காவி ரவுடித்தனம் தவறான வார்த்தையா?

மேற்கு வங்கத்தில் ஆனந்தபஜார் பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் செய்தியாளர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு, பத்திரிகைச் சுதந்திரம் குறித்த தீவிரமான கேள்விகளை எழுப்பியுள்ளது. ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மோதல் தொடர்பாக ஆனந்தபஜார் பத்திரிகை இரண்டு பதிப்புகளில் முதல் பக்கச்செய்திகளை வெளியிட்டிருந்தது. அந்த இரண்டு பதிப்புகளிலும் வெவ்வேறு தலைப்புகள் இடம்பெற்றிருந்தன. ஒரு தலைப்பு, “கெருவாகுண்டாமி” (காவி ரவுடித்தனம்) என்று இருந்தது.மற்றொரு தலைப்பு, “பிரதிக் பங்கே கெருவா குண்டாமி” (சின்னத்தை உடைத்து காவி ரவுடித்தனம்) என்று இருந்தது. இங்கு குறிப்பிடப்படும்சின்னம், பல்கலைக்கழகத்தின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள சின்னமாகும்.

இந்த வழக்கில், கொல்கத்தா உயர்நீதிமன்றம் முக்கியமான இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது. செய்தியாளர்களுக்கு எதிராக டிசம்பர் 15 வரை நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று காவல்துறைக்குஉத்தரவிட்டுள்ளதுடன், விசாரணைக்கு அவர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்த முதல் தகவல் அறிக்கைகள் தொடர்பாகத் தங்களைக் கைது செய்வதிலிருந்து பாதுகாப்பு வழங்கக் கோரி செய்தியாளர்கள் தாக்கல்செய்த மனுவை விசாரித்தபோது இந்த உத்தரவுபிறப்பிக்கப்பட்டது. இதற்கு முன்பு, செப்டம்பர் 2ஆம் தேதி, இதே வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருந்த இரண்டு செய்தியாளர்களின் மனுக்களை அவசரமாக விசாரிக்க உயர்நீதிமன்றம்மறுத்திருந்தது. செய்தியாளர்களுக்கு எதிரானநடவடிக்கையைத் தொடர்ந்து, பத்திரிகை அமைப்புகளும் மேற்குவங்க அரசுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

ஒரு செய்தியின் தலைப்பில் பயன்படுத்தப்பட்ட சொல் தொடர்பாக நேரடியாகக் குற்றவியல்வழக்கு பதிவு செய்வது, பத்திரிகையாளர்களின் பணிச் சுதந்திரம் குறித்து இயல்பாகவே கவலையை ஏற்படுத்துகிறது. பத்திரிகைச் செய்தியில் பயன்படுத்தப்படும் சொற்கள் குறித்து ஆட்சேபனை இருந்தால், சட்டப்பூர்வமான நடைமுறைகள் உள்ளன. ஆனால், அதற்காகக் குற்றவியல்நடவடிக்கை என்ற அச்சுறுத்தல் உருவாக்கப்படும்போது, அது செய்தியாளர்களின் பணியில்அச்சத்தை ஏற்படுத்தக்கூடும்.

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டிய பொறுப்புடையவர்கள். ஊடகங்களின் செய்திகளைச் சட்டத்தின் அடிப்படையில் ஆய்வு செய்வது வேறு; செய்தியாளர்களை வழக்குகளால் அச்சுறுத்துவது வேறு. உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிராஉள்ளிட்ட மாநிலங்களில் அதிகார மட்டத்தைக்கேள்வி கேட்டால் அவர்களைச் சட்டத்தைக் கொண்டுநசுக்குவது அதிகரித்து வருவது கண்டனத்திற்குரியது.உயர்நீதிமன்றத்தின் இந்த இடைக்கால உத்தரவு, இந்த விவகாரத்தில் சட்ட நடைமுறைகளும்பத்திரிகைச் சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை மீண்டும் உரக்கச் சொல்லியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.