தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இடதுசாரி அரசியல் காலாவதியாகிவிட்டதா? - டாக்டர் ஜான் பிரிட்டாஸ்

14 May 2026, 8:57 pm
இடதுசாரி அரசியல் காலாவதியாகிவிட்டதா? - டாக்டர் ஜான் பிரிட்டாஸ்

இடதுசாரி அரசியல் காலாவதியாகிவிட்டதா? - டாக்டர் ஜான் பிரிட்டாஸ்

சமீபத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டி ருந்த நொய்டா தொழிலாளர்களைச் சந்தி க்கச் சென்றிருந்தேன். அவர்களின் வேதனை யைப் புரிந்து கொள்ளவும், போராட்டத்திற்கு ஒருமைப் பாட்டைத் தெரிவிக்கவும் விரும்பினேன். அந்தச் சந்திப்பிற்குப் பிறகு என் மனதில் நின்றது தொழிலா ளர்களின் துன்பங்கள் மட்டுமல்ல; முக்கிய அரசியல் கட்சிகளின் மவுனமும் எனக்குக் கவலையளித்தது. அங்கு எந்தவொரு பா.ஜ.க தலைவரையோ, காங்கி ரஸ் தலைவரையோ பார்க்க இயலவில்லை. தொ ழில்கள் வரவேண்டும் என்பதில் முனைப்பு காட்டுப வர்களுக்கு, உழைக்கும் தொழிலாளர்கள் வெறும் புள்ளிவிவரக் கணக்காகவே தென்படுகிறார்கள். பொருளாதார வளர்ச்சியைச் சாதிக்கும் அந்தத் தொழி லாளர்கள், இத்தகைய கட்சிகளின் அரசியல் கவனம் பெறுவதற்குத் தகுதியற்றவர்களாகி விடுகின்றனர். இதுதான் இன்றைய இந்தியாவின் மிகப்பெரிய சோகம்! கொண்டாடப்படும் மிதமிஞ்சிய பொருளா தாரப் பிம்பங்களுக்கு இடையே, சிலரின் கண்ணுக்குத் தெரிய மறுக்கும் வறுமை இது.

இடதுசாரி சித்தாந்தம் அளித்த தைரியம்

தேசம் பங்குச்சந்தையின் உச்சத்தைக் கொண்டா டும்போதும், சர்வதேச மூலதனம் குவியும்போதும், பொருளாதாரத்தை வழிநடத்தும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் சொற்ப ஊதியத்தில் உயிர்வாழ்வ தும், முறைசாரா உழைப்பாளர்களாக இருப்பதும் தொடர்கிறது. நமது தலைவர்களின் பெருமித உரைகளில் ஆலைத் தொழிலாளர்களும், டெலிவரி ஊழியர்களும், கிக் (Gig) உழைப்பாளர்களும், தூய்மைப் பணியாளர்களும் மிக அபூர்வமாகவே கவனம் பெறுகின்றனர். இங்குதான் சித்தாந்தப் பிடிப்பின் முக்கியத்துவம் முன்வருகிறது.

ஒரு இடதுசாரி எனும் சித்தாந்த அடிப்படையிலான எனது அரசியல் உணர்வுதான் தொழிலாளர்களோடு என்னை நிற்க நிர்ப்பந்திக்கிறது. இது தேர்தல் கவர்ச்சிக்காக அல்ல. உழைப்பாளிகள் குறித்துக் கவலையில்லாத அரசியல் என்பது கார்ப்பரேட் நிர்வா கமே அன்றி வேறு அல்ல. பல அரசியல் கட்சிகள் இன்று தொழிலாளர்களுக்காக வெறும் உதட்டள விலான கவலையை வெளிப்படுத்திவிட்டு, கார்ப்ப ரேட்டுகளின் நலனை உரத்த குரலில் பேசுகின்றன. இடதுசாரிகள் மட்டும்தான் சுரண்டல், சமத்துவ மின்மை, உழைப்பிற்கான மதிப்பு குறித்துக் கேள்வி களை எழுப்புகின்றனர். அது அதிகாரம் படைத்த சிலருக்குச் சங்கடத்தை உருவாக்குகிறது.

இந்தச் சித்தாந்த உணர்வுதான் என்னை உத்தர கண்ட்டில் உள்ள கோட்வாருக்குச் சென்று, பெரும் பான்மை மதவாதத்திற்கு எதிராகக் குரல் கொடுத்த உடற்பயிற்சி மைய நிறுவனரைச் சந்திக்க வைத்தது. வெறுப்புக்கு எதிராகக் குரல் கொடுப்பதற்கே இன்று தைரியம் தேவைப்படுகிறது. இங்கேயும் நான் எந்த முக்கிய அரசியல் கட்சியையும் பார்க்கவில்லை. எனது பயணம் செய்தியான பிறகுதான் பல அரசியல்வாதி கள் கண் விழித்தனர். அவர்கள் இந்தப் பிரச்சனையில் கவனம் செலுத்தியதை வரவேற்கிறேன், ஆனால் இது இந்திய அரசியல் குறித்த பழைய உண்மையை வெளிப் படுத்துகிறது. பல சமயங்களில் இடதுசாரிகள் தார்மீக ரீதியாகச் செயல்பட்ட அந்த அடிச்சுவட்டில்தான் மற்ற வர்கள் அந்தப் பிரச்சனைகளை அரசியல் ரீதியாகக் கண்டுபிடிக்கின்றனர்.

மதச்சார்பின்மை நான்கு சுவர்களுக்குள் விவாதிக்கும் அரசியல் அல்ல!

இடதுசாரிகளைப் பொறுத்தவரை மதச்சார் பின்மை என்பது கருத்தரங்க அரங்குகளிலோ அல்லது இலக்கிய விழாக்களிலோ நான்கு சுவர்களுக்குள் விவாதிக்கப்படும் அரசியல் அல்ல. மக்கள் கைவிடப் பட்ட போதும், அவர்களிடையே அச்சம் உண்டாக்கப் பட்ட காலத்திலும் நாங்கள் இடைவிடாது அவர்களு டன் நின்றிருக்கிறோம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தில்லி எல்லையில் விவசாயிகள் போராடியபோது, இடதுசாரிகள் அவர்களுடன் தொடக்கத்திலிருந்தே கைகோர்த்து நின்றனர். ஏனைய முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் பிறகுதான் வந்தனர்; ராகுல் காந்தி சிங்கு பகுதிக்கு வரவேயில்லை.

2020 தில்லி கலவரத்தின்போது இடதுசாரி ஊழி யர்கள் உயிர் பிழைத்தவர்களுடன் நின்றனர்; அவர்க ளது வாக்குமூலங்களை ஆவணப்படுத்தினர்; அரசு இயந்திரத்தின் கொலைபாதகப் பங்கை அம்பலப் படுத்தினர். ஆனால் மற்றவர்கள் ஏற்கெனவே வேறு செய்தியைத் தேடிச் சென்றுவிட்டனர். இதுதான் உண் மையான இடதுசாரித் தத்துவம்; அதன் பணி! வெறும் பெயரளவில் தீவிரமாக வாதிடுவது அல்ல; இடைவிடாத தொடர்ச்சியான ஒருமைப்பாட்டையும் சகோதரத்து வத்தையும் வெளிப்படுத்துவதுதான் இடதுசாரி உணர்வு!

தேநீர் கூட எதிர்பார்க்காத ஆதரவு

எனவே சில காங்கிரஸ் தலைவர்கள் இடதுசாரி கள் காலாவதியாகிவிட்டனர் எனப் பேசுவதும், சில முதலாளித்துவ கட்சிகள் இடதுசாரிகளின் இடத்தைப் நிரப்புகின்றன என கதைப்பதும் வினோதமாக உள்ளது. சசி தரூரின் திறமை, எழுத்து மற்றும் பேச்சாற் றல் அங்கீகரிக்கப்பட வேண்டியவை. ஆனால் 2009-ஆம் ஆண்டிலிருந்து அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் திருவனந்தபுரம் தொகுதி, சர்வதேசக் குடிமகனான சசிதரூரை வரவேற்பதற்கு முக்கிய காரணம் பல பத்தாண்டுகளாகச் செயல்பட்ட சமூகச் சீர்திருத்தக் கருத்துகளும் இடதுசாரி அரசியலும்தான் என்பதை அவர் உணர வேண்டும்.

கேரளாவின் அரசியல் பண்பாடு திடீரென உருவாகி விடவில்லை. சமூகச் சீர்திருத்தங்களும் கம்யூனிஸ்டு களின் செயல்பாடுகளால் தகர்க்கப்பட்ட நிலப்பிர புத்துவ படிநிலைகளும், பொதுக்கல்வி விரிவாக்க முமே ஜனநாயகச் சமூக உணர்வை உருவாக்கி யது. இடதுசாரிகள் நாடாளுமன்றத்தில் 60 உறுப்பி னர்களைப் பெற்றிருந்தபோது, எவ்வித பிரதிபலனும் இன்றி, அமைச்சகங்கள் குறித்துப் பேரம் பேசாமல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித் தோம். மலையாள பழமொழி சொல்வது போல ஒரு கருப்புத் தேநீர் கூட எதிர்பார்க்காமல் இந்த ஆதரவை ஏன் தந்தோம்? மதவாத சக்திகளைத் தடுக்க! அது தான் சித்தாந்தப் பிடிப்பு என்பது! மேலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி பெருமைப்பட்டுக் கொள்ளும் பல மக்கள் நலத்திட்டங்களுக்கும் (உதாரணமாக 100 நாள் வேலைத்திட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம்) பின்னணியில் இடதுசாரிகளின் அழுத்தம் இருந்தது.

கேரள ‘மாடல்’ அனுபவமும் சமூக ஒற்றுமையும்

‘கேரள மாடல்’ அல்லது அமர்த்தியாசென் குறிப்பிட்ட ‘கேரள அனுபவம்’ என்பது இத்தகைய அரசி யல் முன்னுரிமைகள் காரணமாகவே உருவானது. இதனை உலகமெங்குமுள்ள பொருளாதார நிபு ணர்கள் ஆய்வு செய்தனர். குறிப்பிடத்தக்க தொழில் வளம் இல்லை என்றாலும் கல்வி, சுகாதாரம், சமூக நலம் ஆகியவற்றில் சிறந்த சாதனைகளை உருவாக்கி னோம். பல பணக்கார மாநிலங்களே திணறிய தீவிர வறுமை அகற்றல் என்பதை கேரளத்தில் சாதித்துக் காட்டினோம். இடதுசாரி பாரம்பரியம் இல்லாத ஏதாவது ஒரு மாநிலம் இதனைச் சாதிக்க இயலுமா? கேரளாவில் காங்கிரஸ் கூட இடதுசாரி அரசியலின் அம்சங்களை அமலாக்க வேண்டியுள்ளது, இல்லா விடில் காங்கிரஸ் காலாவதியாகிவிடும்

மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் ஆட்சியில் இருந்த 34 ஆண்டுகளில் சமூக ஒற்றுமை நிலவியது. அங்கு இடதுசாரிகளின் செல்வாக்கு குறைந்தபோது மத வேற்றுமைகள் தலைதூக்கின. இந்தியாவின் மற்ற பகுதிகளில் அரசு இயந்திரமே கலாச்சார ஒற்றைத் தன்மையைத் திணிப்பதும், உணவுப் பழக்கம் காரண மாகக் கும்பல் படுகொலைகள் செய்வதும் நடக்கிறது. ஆனால் கேரளாவில் இடதுசாரி அரசியலின் செல் வாக்குதான் உணவு மற்றும் அடையாளத்துக்காக எவரும் கேள்வி கேட்கப்படக்கூடாது எனும் எதிர்ப்பை யும் சூழலையும் உருவாக்கியது.

வேர்களிடம் ஆழமாகச் செல்வோம்!

இடதுசாரிகள் ஒவ்வொரு முறை தேர்தலிலும் பின்னடைவைச் சந்திக்கும்போது, சித்தாந்தமே இறந்துவிட்டது எனப் பிரச்சாரம் செய்யப்படுகிறது. திமுக அல்லது திரிணாமுல் காங்கிரஸ் தோல்விய டைந்தால் அதனை ஒரு சுழற்சி எனச் சொல்லும் ஆய்வாளர்கள், இடதுசாரிகள் தோற்கும்போது மட்டும் ஒரு உலகக் கண்ணோட்டமே அஸ்தமனமாகிவிட்டது என கூப்பாடு போடுகின்றனர். இது அறிவுதளத்தில் ஒரு நாணயமற்ற செயல்.

அசமத்துவம் செங்குத்தாக உயர்ந்துள்ள சூழலில், இடதுசாரி அரசியல் உருவானதற்கான தேவைகள் இன்னும் உயிரோடும் வலுவாகவும் உள்ளன. மதவாத பாசிசத்திற்கு எதிராகவும் பொருளாதாரச் சுரண்டலுக்கு எதிராகவும் ஒரே சமயத்தில் இடது சாரிகள், எதிர்ப்பின் இலக்கணத்தை வலுவாகக் கைக்கொள்கிறோம். எங்களிடம் ஊடகம், நிதி, மேலாளர்கள் (Media/Money/Managers) இல்லை. கார்ப்பரேட்டுகள் எங்களை விரும்புவதில்லை. ஆனால் எங்களது அரசியலின் வேர் என்பது, உதா சீனப்படுத்தப்படுகிற; ஓரம் கட்டப்படுகிற மக்க ளுக்கான நீதியிலும் தன்மானத்திலும் ஆழமாகப் பதிந்துள்ளது.

‘அன்பே சிவம்’ திரைப்படத்தில் வருவது போல, தாஜ்மஹால் இடிக்கப்பட்டாலும் காதல் மறைந்து விடாது. அது இடதுசாரிகளுக்கும் பொருந்தும். தேர்தல் பின்னடைவுகள், சுரண்டலுக்கு எதிராகப் போராடுவ தன் தேவையை அழித்துவிடாது. இந்தியா எவரைக் காண மறுக்கிறதோ, அவர்களுக்காக நாங்கள் தொ டர்ந்து குரல் கொடுப்போம். தேர்தலில் நாங்கள் பின்ன டைவைச் சந்தித்ததால் முதலாளித்துவப் பிரிவினரைச் சேர்ந்த வேறு சிலர் இடதுசாரிகள் போலச் செயல்பட லாம் என்பது கானல் நீரைத் துரத்துவது போன்றது. அதனை வாயால் சொல்லிக்கொள்ளலாம், ஆனால் நடைமுறைப்படுத்துவது கடினம். (இந்தியன் எக்ஸ்பிரஸ்) தமிழில் சுருக்கம் : அ.அன்வர் உசேன்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.