பட்டா இல்லாத நிலம் வாங்குவது பாதுகாப்பானதா? நிபுணர்களின் எச்சரிக்கை
6 Mar 2026, 3:17 pm
<p><strong>பட்டா இல்லாத நிலம் வாங்குவது பாதுகாப்பானதா? நிபுணர்களின் எச்சரிக்கை</strong></p>
<p>சென்னை, மார்ச் 6- தமிழகத்தில் நிலத்தின் உரிமையை உறுதிப்படுத்தும் முதன்மை ஆவண மாக பட்டா கருதப்படுகிறது. வருவாய்த் துறையால் வழங்கப்படும் இதில் நிலத்தின் உரிமையாளர் பெயர், சர்வே எண், பரப்பளவு போன்ற துல்லியமான விவரங்கள் இடம்பெற்றிருக்கும். நீர்நிலைகள், மேய்ச்சல் புறம் போக்கு அல்லது அரசு தரிசு நிலங் களைச் சிலர் போலி ஆவணங்கள் மூலம் விற்க முயல்வார்கள். இத்தகைய நிலங்களுக்கு ஒருபோதும் பட்டா கிடைக்காது என்பதோடு, அரசு அந்த நிலத்தை மீட்கும் போது எவ்வித இழப்பீடும் இன்றி நிலத்தை இழக்க நேரிடும். வங்கிகள் நிலத்தின் உரிமையை உறுதிப்படுத்த பட்டா, சிட்டா, அடங்கல் போன்ற ஆவணங்களை அடிப்படை யாகக் கொள்கின்றன. இவை இல்லாத நிலங்களுக்கு வீட்டுக் கடன் பெறுவது இயலாத காரியம். டிடிசிபி அல்லது சிஎம்டிஏ அங்கீகாரம் மற்றும் மின்சார இணைப்பு போன்ற அடிப் படை வசதிகளுக்குப் பட்டா மிக அவசிய மான ஆவணமாகும். சில நேரங்களில் கிராம நத்தம் அல்லது புதிதாகப் பிரிக்கப்பட்ட நிலங் களுக்குப் பட்டா மாற்றம் செய்யப் படாமல் இருக்கலாம். அத்தகைய சூழலில் விற்பனைப் பத்திரம் சரியாக இருந்தாலும், அந்த நிலத்திற்குப் பின்னாளில் பட்டா பெற முடியுமா என்பதைச் சட்ட நிபுணர்கள் மூலம் உறுதிப்படுத்துவது அவசியம். எனவே, நிலம் வாங்குவதற்கு முன் வில்லங்கச் சான்றிதழ் மற்றும் பட்டா நிலையை ஆன்லைன் மூலம் சரி பார்க்கவேண்டும் என அறிவுத்தப் ்படுகிறார்கள்.</p>
