தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வெள்ளியங்கிரி மலையில் காலணி அணியத் தடையா?

3 Mar 2026, 3:38 pm
வெள்ளியங்கிரி மலையில்  காலணி அணியத் தடையா?

வெள்ளியங்கிரி மலையில்  காலணி அணியத் தடையா?

மலையேற்ற வீரர்கள் கடும் எதிர்ப்பு கோயம்புத்தூர், மார்ச். 3- கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ளது வெள்ளியங்கிரி மலை. இது வெறும் ஆன்மீகத் தலம்  மட்டுமல்ல, இயற்கையை நேசிப்ப வர்களுக்கும், சாகச விரும்பி களுக்கும் ஒரு சொர்க்கமாகும். இந்நிலையில், வெள்ளியங்கிரி மலை ஏறும் பக்தர்களுக்கும், மலையேற்ற வீரர்களுக்கும் இடையே  கடந்த சில நாட்களாக ‘காலணி அணி யத் தடை’ என்ற செய்தி பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளியங்கிரி அடிவாரத்தில் உள்ள பூண்டி கோவில் வளா கத்தில் காலணி அணியக் கூடாது என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளி யிடப்பட்டது. ஆனால், அங்கு பாது காப்பு மற்றும் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த தன்னார்வலர்கள், இந்த அறிவிப்பைத் தவறாகப் புரிந்து கொண்டனர் என செய்திகள் வெளி யாகியுள்ளன. அவர்கள் மலை ஏறும் பாதையிலும் காலணி அணியக் கூடாது எனப் பலகைகளை வைத்த தோடு, மலை ஏற வந்தவர்களைக் காலணிகளைக் கழற்றி வைத்து விட்டுச் செல்லுமாறு வற்புறுத்தினர். மலையேற்ற வீரர்களின் கவலை கோவிலுக்குச் செல்லும் ஒரு சில பக்தர்கள் மட்டும் செருப்பு உள்ளிட்ட காலணிகளை அணிவதில்லை. ஆனால் மலையேற்ற வீரர்கள் காலணி  அணிந்து மலையேறுவது வழக்கம். இதனால் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுதொடர்பாக நீலகிரியைச் சேர்ந்த கிருஷ் பிருந்தாவன் மற்றும் தொண்டா முத்தூரைச் சேர்ந்த விஸ்வநாதன் போன்ற மலையேற்ற வீரர்கள் கூறுகையில், “ஏழு மலைகளைக் கொண்ட வெள்ளியங்கிரி மலைப் பாதை மிகவும் சவாலானது. பாறை களும், முட்களும் நிறைந்த இந்தப் பாதையில் வெறும் காலில் நடப்பது காயங்களை உண்டாக்கும். காப்புக் காடு பகுதி என்பதால் அட்டைகள், விஷப் பூச்சிகள் மற்றும் பாம்புகளின் நடமாட்டம் இருக்கும். கடந்த 2025ஆம் ஆண்டில் மட்டும் 9 பேர்  உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இத்த கைய சூழலில் காலணிகள் இன்றி மலை ஏறுவது தற்கொலைக்குச் சமம்” என அவர்கள் கூறினர். அதிகாரப்பூர்வ விளக்கம் நிலைமை மோசமாவதைக் கண்ட இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் வனத்து றையினர் இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளனர்.  அதில் காலணி அணிவதற்கான தடை என்பது அடிவாரத்தில் உள்ள பூண்டி கோவில் மற்றும் அதன் சுற்றுப்புற 100 மீட்டர் தூரத்திற்கு மட்டுமே. கோவிலின் புனிதத்தைக் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மலை ஏறுபவர்கள் தங்களது காலணி களைக் கையில் எடுத்துச்சென்று, கோவில் வளாகத்தைத் தாண்டி யதும், மலைப்பாதை தொடங்கும் இடத்தில் அணிந்துகொள்ளலாம். மலை ஏறுவதற்கு எந்தத்தடை யும் விதிக்கப்படவில்லை” என அதில் கூறப்பட்டுள்ளது.

மலையேறும் நபர்கள் கவனத்திற்கு...

வெள்ளியங்கிரிக்கு உடல் ரீதியாகத் தகுதியுள்ளவர்கள் மட்டுமே மலை ஏற அறிவுறுத்தப்படுகிறார்கள். அடிவாரத்தில் இருந்து ஏழாவது மலையின் உச்சி வரை செல்வதற்கு சுமார் 5.5 கி.மீ. முதல் 6 கி.மீ. வரை மலையேற வேண்டும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 6,000 அடி (1,832 மீட்டர்) உயரத்தில் உள்ளது. செங்குத்தான குன்றுகளிலும் நடக்க  வேண்டியிருக்கும். முழுமையாக ஏறி இறங்க சராசரியாக 8 முதல் 12 மணி நேரம் வரை ஆகும் (உங்கள் உடல் தகுதியைப் பொறுத்து  இது மாறுபடும்). இது மிகவும் கடினமான மலையேற்றம் என்பதால் இதயம் தொடர்பான நோய்கள் அல்லது மூச்சுத்திணறல் உள்ளவர்கள் செல்வதைத் தவிர்க்க வேண்டும். காலணிக்குத் தடை இல்லையென்றாலும், பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் கவர்கள் கொண்டு செல்லக் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. சிக்கினால் வனத்துறை கடும் நடவடிக்கை எடுக்கும்.  வெயிலின் தாக்கத்தைத் தவிர்க்க, பெரும்பாலானோர் நள்ளிரவிலோ அல்லது அதிகாலையிலோ மலையேறத் தொடங்குவார்கள். அதனால் டார்ச், கைத்தடி (அடிவாரத்தில் கிடைக்கும்), தண்ணீர் பாட்டில் மற்றும் எலுமிச்சை பழம்/குளுக்கோஸ் கொண்டு செல்வது நல்லது. பிப்ரவரி முதல் மே மாதம் வரையிலான சீசன் காலத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.