கிராமப்புற ஏழை மக்களின் அடிமடியை அறுப்பதா? ஒன்றிய அரசை கண்டித்து விதொச ஆர்ப்பாட்டம்
25 Feb 2026, 3:22 pm
<p><strong>கிராமப்புற ஏழை மக்களின் அடிமடியை அறுப்பதா? ஒன்றிய அரசை கண்டித்து விதொச ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>தருமபுரி, பிப்.25- கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என வலி யுறுத்தி விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இடதுசாரி கட்சிகளின் முயற்சி யால், 2005 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டம், கடந்த 20 ஆண்டுகளாக செயல்படுத்தப் பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் மக்கள் பயன்பெற்று வந்த சூழலில், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித்திட்டம் எனும் சட்டப்பூர்வ உரிமையை ஒன்றிய அரசு தற்போது ரத்து செய்துவிட் டது. தற்போது அரசின் விருப்பத் திட்டமாக ‘விபிஜி ராம் ஜி’ என்று மாற்றம் செய்து, திட்டத்தை ஒழித்து கட்ட முயற்சிக்கிறது. மேலும், திட்டத்திற்கான நிதியை ஒன்றிய அரசு 60 சதம் மாநில அரசு 40 சதம் என்று மாநில அரசுகளின் மீது நிதிச் சுமையை ஏற்றியுள் ளது. எனவே, ஒன்றிய அரசு புதிய சட்டமசோதாவான விபி ஜி ராம் ஜி திட்டத்தை திரும்பப்பெற வேண் டும். 2026 – 27 ஆம் ஆண்டிற்கு ஊரக வேலைத்திட்டத்திற்கு குறைந்தபட் சம் ரூ.3 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இத்திட்டத்தின் கீழ், ஆண்டிற்கு 200 நாட்கள் வேலையும், ரூ.700 தினக்கூலியும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கத்தினர் புதனன்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் வீ.ரவி தலைமை வகித்தார். இதில் சங்கத் தின் மாநிலச் செயலாளர் எம். முத்து, மாநிலக்குழு உறுப்பினர் கள் ஈ.கே.முருகன், கே.கோவிந்த சாமி, மாவட்ட துணைத்தலைவர் கள் சி.ராஜா, பி.கிருஷ்ணவேணி, மாவட்ட நிர்வாகிகள் பி.வீரப்பன், எம்.தங்கராஜ், கே.ராமன், விவே கானந்தன், வி.ஜெயகாந்தன், எம். கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷிடம் கோரிக்கை மனுவை சங்கத்தின் தலைவர்கள் வழங்கினர். கோவை கோவை டாடாபாத் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் தி.ரவிச்சந்தி ரன் தலைமை வகித்தார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.துரைசாமி, பொருளாளர் கே.மகாலிங்கம், துணைத்தலைவர் செல்வராஜ் ஆகியோர் கோரிக்கைகளை விளக் கிப் பேசினர். இதில் விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி. ஆர்.பழனிச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே. எஸ்.கனகராஜ், என்.ஆறுச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். நாமக்கல் நாமக்கல் ஆட்சியர் அலுவல கம் முன்பு, விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் செல்வராஜ் தலைமையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதில் விவ சாயிகள் சங்க மாநில துணைத் தலைவரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான பி.டில்லிபாபு, மாவட்டத் தலைவர் சி.துரைசாமி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகிகள் நடேசன், குரு சாமி, ஆர்.கோவிந்தராஜ், குப் பண்ணன், ரேவதி, உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகிகள் சித்ரா, பெரியம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
