குடிமனைப்பட்டா கோரிக்கை சிறப்பிதழ் வீடு என்பது தேவையா! உரிமையா!!
6 Dec 2025, 6:20 pm
<p><strong>வீடு என்பத தேவையா! உரிமையா!!</strong></p>
<p>இதுவரை அறியப்பட்ட விஞ்ஞானத்தில், பிரபஞ்சத்தில் உயிரினம் வாழும் கோளாக பூமிப் பந்து மட்டுமே விளங்கு கிறது. பல லட்சம் ஆண்டுகளின் சுழற்சியில் உயிரினம் தோன்றிப் பல்லாயிரம் ஆண்டுக ளுக்குப் பின்னரே ஆதி மனிதர் உருவானார். உயிரினங்கள் தங்களுக்கான வாழ்வி டத்தைத் தீர்மானித்துக்கொண்டன. இந்த உயிரினங்களைப் போலவே, ஆதி மனிதரும் வனங்களில் இயற்கையின் சீற்றங்களை எதிர்கொள்ளும் வகையில் தனக்கான குடியிருப்புகளைத் தகவமைத்துக்கொண்டனர். வனத்திலிருந்து சமதளத்தை நோக்கிப் பயணித்த மனிதர்கள், தனது வாழ்க்கைத் தேவையைப் பூர்த்தி செய்கிற இடங்களில் குடியிருப்புகளை உருவாக்கிக்கொண்டனர். உடைமைச் சமூகம் உருவானபோது, உழைப்பாளிகள் பணியிடங்களிலும், உடைமை யாளர்கள் தங்களின் வசதிக்கான வீடுகளையும் அமைத்துக்கொண்டனர். தொழிற்புரட்சி காலத்தில், நில உடைமை யாளர்களிடமிருந்து விடுதலை பெற்ற உழைப்பாளி மக்கள் தங்களுக்கான குடியிருப்பு களைத் தமது வருமானத்திலிருந்து உரு வாக்கிக்கொண்டனர். தொழிலாளிகளின் உழைப்பை பெருமளவில் சுரண்ட, முதலாளி கள் தமது பணியாளர்களுக்கு அருகாமையி லேயே குடியிருப்புகள் அமைத்துக் கொடுத்த னர். தொழிலாளியின் உழைப்பில் மூல தனத்தைக் குவித்த முதலாளித்துவ வர்க்கம், தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்து விரட்டி அடித்தது. பின்னர், தனக்கான விடு தலையை முன்வைத்து, அடிமை விலங்கை உடைத்த உழைப்பாளி மக்கள் உருவாக்கிய அரசாங்கம் வீடு, உணவு, வேலை ஆகிய வற்றை உரிமையாக்கியது. நவீனமயமாதலும் உரிமையைப் பறித்தலும் உழைப்பாளி மக்கள் தங்கள் வேலைத் தளத்திற்கு அருகாமையில் கிராமங்களிலும், நகரங்களிலும் குடியிருப்புகளை அமைத்துக் கொண்டனர். முதலாளித்துவம் தனது அடிப்படைக் கட்டமைப்பை நிர்மாணிப்பதற்கு இதையெல்லாம் அனுமதித்தது. 1980களில், முதலாளித்துவம் ‘ஸ்ட்ரக்சுரல் அட்ஜெஸ்ட்மென்ட்’ (Structural Adjustment) - அதாவது, கட்டமைப்பைச் சீர்திருத்துவது - என்ற பெயரில் மக்களின் உரிமைகளையெல்லாம் கேள்விக்குறியாக்கியது. இதன் தொடர்ச்சியாக, முதலாளி வர்க்கத்தால் முன்வைக்கப்பட்ட நவீன தாராளமயக் கொள்கை, உழைப்பாளி மக்களின் ஒவ்வொரு உரிமையையும் பறித்தது. தனது அதிவேகமான மூலதனக் குவிப்புக் காக, சமூகத்தை நகரமயமாதலை நோக்கி நகர்த்தியது. உழைப்புக்காக நகரங்களை நோக்கி வந்து குவிந்த மக்கள், கிடைத்த இடத்தில் குடிசை அமைத்து குடியேறினர். ஆளும் கட்சியினர், ஆதிக்க குணம் படைத்த வர்கள் ஒரு தொகையைப் பிடுங்கிக்கொண்டு குடியிருப்புகளுக்கான இடங்களை அடையா ளப்படுத்தினர். நவீன உலகத்தில் நகரத்தை வளப்படுத்த வந்த எளிய மக்கள் குடிசைகள் அமைத்து அமர்ந்தனர். எளிய மக்களின் அவலமும் சட்டச் சிக்கல்களும் இக்குடிசைகளும் ஆதிக்க சக்திகளால் தீக்கிரையாக்கப்பட்டன. இந்தக் கொடுமைக ளிலிருந்து பாதுகாக்க அரசுகள் குடிசைக ளுக்குப் பதிலாகக் கல் நார்களில் கூரைகள் அமைக்க வழிகாட்டின. குடிசை மாற்று வாரியங்கள் அமைக்கப்பட்டு, அவர்களின் குடியிருப்புகள் வரையறை செய்யப்பட்டது. இந்த நிலங்கள் கிராம நத்தம், வண்டிப் பாட்டை, மேய்ச்சல் புறம்போக்கு, ரயில்வே, பாது காப்புத் துறைக்கு சொந்தமான இடம் எனப் பல பெயர்களில் பயன்படுத்தப்படாமல் கிடந்தவை தான். நீர் வழி ஓரங்களிலும், குளக்கரைகளிலும் குடிசைகள் அமைக்கப்பட்டன. இவ்வாறு அமைக்கப்பட்ட குடிசைகள் எல்லாம் ஆட்சியாளர்கள் கொண்டு வந்த சட்டங்களால், ‘இந்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்துகிறேன்’ என்ற பெயரில் நீதிமன்றங்களால் கேள்விக்குறியாக்கப்படுகின்றன. சந்தையின் பிடியில் உழைப்பாளி வீடு, ஒரு உரிமை என்பது மறுக்கப்பட்டு, தேவை என்ற நிலைக்குத் தள்ளிவிடப்பட்டுள்ளது. தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டியது சம்பந்தப்பட்ட குடிமக்களின் கடமையாக முன் வைக்கப்படுகிறது. இந்தக் குடியிருப்புத் தேவை களைப் பூர்த்தி செய்வதற்கு ரியல் எஸ்டேட் காரர்களிடமும், அடுக்குமாடிக் குடியிருப்பு களைக் கட்டி விற்பனை செய்யும் நிறுவனங்க ளின் பின்னாலும் ஓட வேண்டிய அவல நிலைமை உள்ளது. நிறுவனங்களால் சந்தையில் (Market-ல்) நிர்ணயிக்கப்படும் பணத்தைக் கொடுத்து வாங்க முடியாமல், குடியிருக்கும் குடிசையி லேயே வாழ்க்கையைத் தள்ள வேண்டிய அவலத்தில் சென்னை வாழ் மக்கள் உள்ளனர். சென்னையிலும் அதனைச் சுற்றியும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டப்பட்ட அடுக்கு மாடிக் குடியிருப்புகள் விற்கப்படாமல் கிடக்கின் றன. “எங்களிடம் பணம் இருந்தால் நாங்கள் வாங்கவா மாட்டோம்?” என மக்கள் தெரி விக்கின்றனர். வாழ்க்கைப் பாட்டுக்கு அன்றாடம் உழைத்துப் பிழைக்கும் மக்கள், இந்த வீடு களை வாங்க வசதியற்றுத் திணறிக் கொண்டுள் ளனர். ஆயினும், அரசுகள் இந்த ரியல் எஸ்டேட் காரர்களுக்கு நீர் வழிகளையும், நீர்நிலைக ளையும், அரசு நிலங்களையும் வாரி வழங்கு கின்றன. ஆனால் மக்களுக்குப் பட்டா வழங்க மறுக்கின்றனர். ஆட்சியாளர்களின் பொறுப்பும் ஜனநாயகக் கடமையும் பல பத்து ஆண்டுகளாகக் குடியிருக்கும் மக்களுக்கு வாக்குரிமை, ரேஷன் கார்டு, மின்சாரம், குடிநீர், கழிவு நீர் இணைப்பு போன்ற வை எல்லாம் வழங்கப்பட்டு வந்தாலும், குடி யிருப்பை மட்டும் சொந்தமாக வழங்க ஆட்சி யாளர்கள் மறுத்துவருகின்றனர். பயன்பாடற்று இருந்த நிலங்களை மேம் படுத்தி குடியிருப்புகள் அமைத்து, சென்னை யின் வளமைக்கு, நாட்டின் வளர்ச்சிக்கு நாள்தோறும் உழைத்துச் சிறு தொகையை ஊதியமாகப் பெற்று குடும்பத்தோடு வாழ்ந்து வரும் தமிழ் மக்களைக் கௌரவமாக நடத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. மக்களாட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, அவர்களின் தேவையை உணர்ந்து அதற்கு ஏற்பச் சட்டங்களை நிறைவேற்றி தன் மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதே ஜனநாயகம். இந்த ஜனநாயகத்தை நிலை நிறுத்த வேண்டியது அரசுப் பொறுப்பில் உள்ள அனைவரின் கடமையாகும். எனவே, சென்னையில் பல ஆண்டுகளாகக் குடியிருந்து வரும் நம் மக்களுக்கு அவர்கள் குடியிருக்கும் இடத்தை சொந்தமாக்குவதற்குத் தேவையான சட்ட ரீதியான மாற்றங்களைச் செய்வதன் மூலம் மட்டுமே இதனைப் பூர்த்தி செய்ய முடியும். பெரும் முதலாளிகளுக்காக வளைகிற சட்டம் தன் மக்களுக்காக, எளிய மக்களுக்காக மாற்றப்படுவதால் மேன்மை அடையும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வலியுறுத்தல் எனவே, தமிழ்நாடு அரசாங்கம் கீழ்க்கண்ட கோரிக்கைகளைப் பரிசீலித்து, தேவையான சட்ட ரீதியான மாற்றங்களை - நில வகை மாற்றங்க ளை உறுதி செய்து, குடியிருக்கும் மக்கள் அனைவருக்கும் அவர்கள் குடியிருப்புகளைச் சொந்தமாக்க முயற்சி எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது: H நில வகை மாற்றம்: மக்கள் குடியிருக்கும் நிலங்களை வகை மாற்றம் செய்து பட்டா வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். H ஒன்றிய அரசு நிலங்கள்: ஒன்றிய அரசின் ரயில்வே, பாதுகாப்புத் துறை இடங்களை தமிழ்நாடு அரசு பெற்று மக்களுக்குப் பட்டா வழங்க வேண்டும். H தனியார் நிலங்கள்: சென்னையில் பல பகுதிகளில் தனியார் நிலங்களில், தோட்ட நிலங்களில் வாழ்கின்ற மக்களுக்குத் தனி யாரிடமிருந்து அந்த இடங்களைப் பெற்று அரசு பட்டா வழங்குவதற்கான உரிய ஏற்பாடு களைச் செய்ய வேண்டும். Hநீர்நிலை மறுவரையறை: இப்போது பயன்பாட்டில் உள்ள நீர்நிலைகள் மற்றும் நீர் வழிகளை வரையறுத்து, மக்கள் பயன் பாட்டில் உள்ள பிற இடங்களை நில வகை மாற்றம் செய்து மக்களுக்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். H இலவச மனைப் பட்டா: பட்டாக்களின் அளவீடுகளில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்கி, மக்கள் குடியிருக்கும் ஒட்டுமொத்தப் பகுதிக்கும் இலவசமாக மனைப் பட்டா வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். இலவச பட்டா வழங்குவதற்கான வருமான வரையறைகளைக் கைவிட வேண்டும். H இணையதளப் பதிவேற்றம்: பட்டாக்கள் அரசின் ஆவணங்களில் கணினி மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டால் மட்டும்தான் உறுதி செய்யப்படுகிறது. எனவே, கணி னியில் பதிவேற்றி பட்டாக்களை முறையாக வழங்குவதை உத்தரவாதம் செய்ய வேண்டும். H கிரயப் பத்திரம் வழங்குதல்: வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற்ற மக்களுக்கு கிரயப் பத்திரம் வழங்குவதற்குத் தடைகளை அகற்றி “சேல் டீடு” (விற்பனை ஆவணம்) வழங்க வேண்டும். Hநிரந்தர குடியிருப்பவர்களுக்குப் பெயர் மாற்றம்: ஒதுக்கீடு இடத்தில் தற்போது நிரந்தரமாகக் குடியிருக்கிறவர்களுக்கே கிரயப் பத்திரம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். H வட்டி தள்ளுபடி: 80-ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்ட உலக வங்கி உள்ளிட்ட சிறு கடன்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வட்டி மற்றும் தண்ட வட்டியை முழுமையாக நீக்கி, அசலைப் பெற்றுக்கொண்டு கிரயப் பத்திரம் வழங்கிட வேண்டும். H கோவில் நிலங்களுக்குத் தீர்வு: 50, 60 ஆண்டுகளுக்கு மேலாகக் கோவில் நிலங்களில் அடிமனைகளை வாடகைக்கு எடுத்து வீடுகள் கட்டி வாழ்ந்து வரும் மக்க ளுக்கு, 2000 ஆம் ஆண்டுக்கு முந்தைய வழி காட்டு கட்டணத்தைப் பெற்றுக்கொண்டு குடி யிருப்புகளைச் சொந்தமாக்கித் தர வேண்டும். கேரள முன்மாதிரி: வீடு என்பது உரிமை மேற்கண்ட கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றித் தர முன்வர வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொந்தமான குடியிருப்பு இருப்பதை உறுதி செய்ய அரசு முன்வர வேண்டும். கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சி தலைமை யிலான இடது ஜனநாயக முன்னணி அரசு ‘அனைவருக்கும் சொந்த வீட்டு மனை’ என்ற இலக்கோடு தனது பயணத்தை முன்னெடுத்து வருகிறது. அதில் பெரும் வெற்றியும் பெற்றுள்ளனர். கேரள மக்கள் தங்கள் வாழ் விடத்தில், சொந்த இடத்தில் நிம்மதியான வாழ்க் கையை வாழ்வது உத்தரவாதம் செய்யப்படு கிறது. தமிழக அரசும் கேரளாவைப் போல நாட்டிற்கு முன்னுதாரணமாக விளங்கும் வகை யில், மக்கள் அனைவருக்கும் “வீடு என்பது உரிமை” என்ற அடிப்படையில் நிறைவேற்ற முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. எனவே, தமிழ்நாடு அரசும், முதலமைச்சர் அவர்களும் மக்களின் குடியுரிமையில் பெரும் முன்னேற்றத்தை உருவாக்க, நில வகை மாற்றங்களைச் சட்ட ரீதியாக நிறைவேற்றி மக்களின் வாழ்விடங்களை உறுதி செய்ய வேண்டும். அதுவே தமிழ்நாட்டு மக்களின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உறுதி அளிக்கும்.</p>
