தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

டொனால்டு டிரம்ப் இந்தியாவின் பிரதமரா? மோடிக்கு து. ராஜா சரமாரி கேள்வி!

5 Apr 2026, 3:36 pm
டொனால்டு டிரம்ப் இந்தியாவின் பிரதமரா? மோடிக்கு து. ராஜா சரமாரி கேள்வி!
<p><strong>டொனால்டு டிரம்ப் இந்தியாவின் பிரதமரா? மோடிக்கு து. ராஜா சரமாரி கேள்வி!</strong></p> <p>சென்னை, ஏப். 5- &ldquo;இந்தியா எந்த நாட்டிலிருந்து எரிபொருள் வாங்க வேண்டும் என்பதை அமெரிக்கா தீர்மானிக் கிறது; டொனால்டு டிரம்ப் இந்தியாவின் பிரதமர் அல்ல, அவர் சொல்வதையெல்லாம் பிரதமர் மோடி &nbsp;வாய்மூடித் தாழ்ந்து கேட்பது ஏன்?&rdquo; என இந்திய &nbsp;கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜா கடுமையாகச் சாடினார். சென்னை தியாகராய நகரில் உள்ள சிபிஐ &nbsp;தலைமை அலுவலகத்தில், மாநிலச் செயலாளர் மு. &nbsp;வீரபாண்டியனுடன் இணைந்து செய்தியாளர் களைச் சந்தித்தார் து.ராஜா. பொருளாதார வீழ்ச்சியும் வேலைவாய்ப்புப் பொய்களும் இந்திய ரூபாயின் தொடர் மதிப்பிழப்பு மற்றும் அதிகரித்து வரும் அந்நியக் கடன் குறித்துப் பிரத மர் மோடி மக்களிடம் நேர்மையாகப் பதிலளிக்கத் தயாரா என்று கேள்வி எழுப்பினார் து.ராஜா. &ldquo;ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்பு என்ற வாக்குறுதி எங்கே போனது? வேலையில்லாத் திண்டாட்டமும், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியும் தேசத்தின் &nbsp;வளர்ச்சியைப் பின்னுக்குத் தள்ளியுள்ளன. பாஜக தமிழ்நாட்டில் காலூன்றவே அதிமுகவை ஒரு கரு வியாகப் பயன்படுத்திக் கொள்கிறது. இந்தத் துரோகக் கூட்டணி தமிழகத்திற்குத் &nbsp;தேவையா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்&rdquo; என்றார். தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமான நடவடிக்கை தொடர்ந்து பேசிய மாநிலச் செயலா ளர் மு. வீரபாண்டியன், தேர்தல் ஆணையத் தின் செயல்பாடுகளைக் கடுமையாகக் கண்டித்தார். &ldquo;முதலமைச்சர் மற்றும் துணை முதல மைச்சர் ஆகியோரின் வாகனங்களை நிறுத்திச் சோதனை செய்யும் தேர்தல் ஆணையம், பிரதமர் &nbsp;மற்றும் மத்திய அமைச்சர்களின் வாகனங்களைச் சோதனையிடத் துணிவுள்ளதா? சட்டம் அனைவருக் கும் சமமாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டின் டி.ஜி.பி. உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளைத் தேர்தல் &nbsp;நேரத்தில் மாற்றியிருப்பது உள்நோக்கம் கொண்டது&rdquo; &nbsp;எனக் குற்றம் சாட்டினார். எடப்பாடியின் திசைதிருப்பும் அரசியல் கலைஞர் குறித்து எடப்பாடி பழனிசாமி தரம் &nbsp;தாழ்ந்து விமர்சிப்பது கண்டனத்திற்குரியது என்றும், இது ஆரோக்கியமான பிரச்சாரமல்ல, தோல்வி பயத்தால் செய்யப்படும் திசைதிருப்பும் அரசியல் என்றும் அவர் குறிப்பிட்டார். &ldquo;தமிழ்நாடு &nbsp;ஒன்றும் பீகாரோ, உத்தரப் பிரதேசமோ அல்ல; &nbsp;இங்கே தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்ச மான போக்கு எடுபடாது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கொள்கை ரீதியாக வலுவாக உள்ளது, எமது வெற்றி உறுதி&rdquo; &nbsp;என வீரபாண்டியன் தெரிவித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.