தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

காதல் திருமணம் செய்த பெண் ஆணவப்படுகொலை?

4 Dec 2025, 3:52 pm
காதல் திருமணம் செய்த பெண் ஆணவப்படுகொலை?
<p><strong>காதல் திருமணம் செய்த பெண் ஆணவப்படுகொலை?</strong></p> <p>தருமபுரி, டிச.4- அரூர் அருகே காதல் திருமணம் &nbsp;செய்து கொண்ட பெண் ஆணவப் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறி, உடலை அவரது கணவர் வாங்க மறுத்து, உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலி யுறுத்தியுள்ளார். தருமபுரி மாவட்டம், அரூர் வட் டம், மாரியம்பட்டியைச் சேர்ந்தவர் &nbsp;சுபாஷ் (27). பட்டியலினத்தை சேர்ந்த இவர், தனியார் நிதி நிறுவ னத்தில் பணியாற்றி வருகிறார். இவ ரும், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், &nbsp;பள்ளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த வர் பிரியா (21) என்ற மாற்று சமூகத் தை சேர்ந்தவரும், பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் காதல் திரு மணம் செய்து கொண்டனர். இவர்க ளுக்கு சுபித்ரா என்ற ஒரு வயது &nbsp;பெண் குழந்தை உள்ளது. இந்நிலை யில், பிரியா தனது தாயார் வீட்டில் &nbsp;இறந்து விட்டதாக சுபாஷூக்கு தக வல் கிடைத்தது. இதற்கிடையே, பிரியாவின் உடல் தருமபுரி அரசு &nbsp;மருத்துவமனைக்கு பிரேத பரி சோதனைக்காக கொண்டு வரப் பட்டது. இதுகுறித்து தகவலறிந்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ. ஜெயா, மாவட்டச் செயலாளர் ஆர். மல்லிகா, வாலிபர் சங்க மாவட்ட &nbsp;நிர்வாகி கார்த்திகேயன் ஆகியோர், &nbsp;மருத்துவமனைக்கு சென்று நடந்த &nbsp;சம்பவம் குறித்து கேட்டறிந்து, உற வினர்களுக்கு ஆறுதல் தெரிவித்த னர். இதுகுறித்து பிரியாவின் கண வர் சுபாஷ் கூறுகையில், காதல் திரு மணம் செய்து கொண்ட நாங்கள், &nbsp;அரூரில் வாடகை வீட்டில் வசித்து &nbsp;வந்தோம். கடந்த நான்கு மாதங்க ளுக்கு முன்பு பிரியாவின் தாயார், வீட்டிற்கு அழைத்து சென்றார். மீண்டும் பிரியாவை என் வீட்டிற்கு அழைத்தபோது, சொந்த வீடு இருந்தால் தான் வருவேன் என &nbsp;பிரியா தெரிவித்தார். இதனால் எனது சொந்த ஊரான மாரியம் பட்டியில் புதிய வீடு கட்டினேன். பிறகு பிரியாவை அழைத்த போது, &nbsp;எங்கள் வீட்டில் உன்னை பிடிக்க வில்லை; அதனால் வரமுடியாது; என்னை தனி வீடு பார்த்து அழைத்து செல்ல வேண்டும், என் றார். இந்நிலையில், புதனன்று காலை பிரியாவிடம் தொலைபேசி யில் பேசினேன். ஒரு மணிநேரம் கழித்து அவர் இறந்து விட்டதாக எனக்கு தகவல் வந்தது. நான் நேரில் சென்று பார்த்தபோது, அவ ரது தாய் வீட்டில் மின்விசிறியில் தொங்கியவாறு இறந்து கிடந்தார். இவர் தூக்கிட்டு இறப்பதற்கு வாய்ப்பு இல்லை. பிரியாவின் முகம், தலை பகுதிகளில் ரத்த காயம் இருந்தது. மூக்கிலிருந்து ரத்தம் வழிந்தது. திட்டமிட்டு ஆண வக்கொலை செய்துள்ளனர். கொலை என வழக்குப்பதிந்தால் மட்டும் பிரேதத்தை பெறுவோம், என்றார்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.