தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அதிகாரத்தின் வாசலில் இருளர் இன மக்கள் அறப்போராட்டம்: கோரிக்கைகளை வென்றெடுத்த மலைவாழ் மக்கள் சங்கம்!

9 Jul 2026, 10:47 pm
அதிகாரத்தின் வாசலில் இருளர் இன மக்கள் அறப்போராட்டம்:  கோரிக்கைகளை வென்றெடுத்த  மலைவாழ் மக்கள் சங்கம்!
<p><strong>அதிகாரத்தின் வாசலில் இருளர் இன மக்கள் அறப்போராட்டம்: கோரிக்கைகளை வென்றெடுத்த மலைவாழ் மக்கள் சங்கம்!</strong></p><p>திருவள்ளூர், ஜூலை 9 – திருவள்ளூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு, வியாழ னன்று (ஜூலை 9) நிகழ்ந்த தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்கத் தின் காத்திருப்புப் போராட்டம், ஒடுக்கப்பட்ட மக்களின் நீண்டகால உரிமைக் கோரிக்கைகளை வென்றெடுத்த ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக அமைந்தது. பல ஆண்டுகளாக அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு, அதிகார வர்க்கத்தின் கவனத்திற்கு வராத தங்களின் அவல நிலையை மாற்ற, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இருளர் இன மக்கள் தங்கள் குடும்பங்களுடன் திரண்டு வந்து நடத்திய இந்தப் போராட்டம் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது. ஆர்.கே.பேட்டை, திருத்தணி, திரு வள்ளூர், ஊத்துக்கோட்டை, பொன் னேரி, பூந்தமல்லி, ஆவடி என மாவட்டத்தின் பல்வேறு வட்டங் களில் வசிக்கும் பழங்குடி மக்கள், தங்களுக்குக் குடிமனைப் பட்டாக் கள் வழங்கப்பட வேண்டும் என்றும், தங்களின் குடியிருப்புகளுக்கு முறையான சாலை வசதி, குடிநீர், மின்சாரம் மற்றும் ரேசன் கடை கள் போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். மேலும், தொகுப்பு வீடுகள் கட்டித் தருதல், வீடுகளைப் புதுப்பித்தல், நிலங்களை முறை யாக அளவீடு செய்தல், சாதிச் சான்றிதழ்கள் வழங்குதல் மற்றும் மயானப் பாதைகளைச் சீரமைத் தல் போன்ற கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர். காலை 10 மணி முதலே சங்கத் தின் கொடிகளுடன் ஆட்சியர் அலு வலகத்திற்கு வந்து சேர்ந்த மக்கள், தங்கள் கோரிக்கைகள் நிறை வேறும் வரை கலைந்து செல்லப் போவதில்லை என்பதில் உறுதி யாக இருந்தனர். காவல்துறையின் ஆரம்பகட்ட தயக்கங்களையும் மீறி, ஜனநாயக ரீதியில் அறப் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இந்தப் போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்த மாவட்ட ஆட்சியர் ச.கவிதா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளை அழைத்து, போராட்டக் குழுவின ருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையில், பழங்குடியின மக்களின் நியாய மான கோரிக்கைகளை ஆய்வு செய்து, அவற்றை ஒரு மாத காலத் திற்குள் அரசு விதிகளுக்கு உட்பட்டு நிறைவேற்றுவதாக மாவட்ட ஆட்சியர் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தார். போராட்டத்தின் வெற்றியாக, உடனடியாக இரண்டு கிராமங்களுக்குக் குடிமனை பட்டாக்கள் வழங்கப்பட்டன. இந்தப் போராட்டத்திற்கு தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழ் அரசு தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு, மாநில பொருளாளர் ஏ.வி.சண்மு கம், மாநில துணைச் செயலாளர் டி.செஞ்சியம்மாள் உள்ளிட்டோ ரும், மாவட்ட நிர்வாகிகள் என்.வஜ்ஜிரவேல், எம்.சின்னராசு, பி.அற்புதம், எம்.தமிழ்அரசி, எஸ். தேவி, வி.அந்தோணி உள்ளிட்டோ ரும் கலந்துகொண்டு போராட் டத்தை வழிநடத்தினர். மேலும், சிபிஎம் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், மூத்த தோழர்கள் ப.சுந்தரராசன், கே.செல்வராஜ், சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் கே.ராஜேந்திரன், ஏ.ஜி.கண்ணன் மற்றும் எஸ்.கலையரசன் ஆகி யோர் போராட்டத்தை வாழ்த்திப் பேசினர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள், குடும்பம் குடும்பமாகத் திரண்டு வந்து கலந்து கொண்ட இந்தப் போராட்டம், ஒற்று மையின் வலிமையை உலகிற்குப் பறைசாற்றியது. மாலை 4 மணியள வில், தங்களின் உரிமைகள் அங்கீ கரிக்கப்பட்ட திருப்தியோடும், அடுத்தகட்டப் போராட்டத்திற்கான நம்பிக்கையோடும் மக்கள் போராட்டத்தைக் கலைத்துச் சென்ற னர். இந்த வெற்றி, அதிகார வர்க்கத் திடம் மண்டியிடாமல், உரிமைக் காகக் குரல் கொடுப்பதே மாற்றத் திற்கான வழி என்பதை மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தியது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.