இருளர் இன மக்களின் செங்கல் தொழிலகத்தை மீண்டும் திறக்கக் கோரிக்கை
12 May 2026, 1:55 am

இருளர் இன மக்களின் செங்கல் தொழிலகத்தை மீண்டும் திறக்கக் கோரிக்கை

திருவள்ளூர், மே 11- கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட பழங்குடி இருளர் இன மக்களுக்காகத் துவங்கப்பட்டு, தற்போது முடங்கிக் கிடக்கும் செங்கல் தொழி லகத்தை மீண்டும் செயல்படுத்தக் கோரி தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சிய ரிடம் மனு அளித்தனர்.

கடம்பத்தூர் ஒன்றியம் பிஞ்சிவாக்கம் ஊராட்சியில், கடந்த 2023-ஆம் ஆண்டு மீட்கப்பட்ட 28 இருளர் குடும்பங்களின் மறு வாழ்விற்காக ரூ.9.90 லட்சம் மதிப்பீட்டில் செங்கல் தொழிலகம் அமைக்கப்பட்டது.

இதில் உற்பத்தி செய்யப்பட்ட 50 ஆயிரம் செங்கற்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், அதில் உழைத்த மக்களுக்கு உரிய லாபப் பங்கு வழங்கப்படவில்லை என்றும், நிதி கையாடலில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.

மேலும், செங்கல் தொழிலகத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் விதிகளுக்கு மாறாக நெற்களம் அமைக்கப்பட்டுள்ளதால் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக மலை வாழ் மக்கள் சங்க நிர்வாகிகள் ஆர்.தமிழ்அரசு, பி.அற்புதம், எம்.சின்ராசு ஆகி யோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொழிலகம் முடங்கி யுள்ளதால், வாழ்வாதாரம் இழந்த இருளர் குடும்பங்கள் மீண்டும் பிழைப்புத் தேடி வெளியூர்களுக்குச் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, உரிய விசாரணை நடத்தி, தொழிலகத்தை மீண்டும் துவக்கி அவர்களின் மறுவாழ்வை உறுதி செய்ய வேண்டும் என அம்மக்கள் வலியுறுத்தி யுள்ளனர்.