கணினி பட்டா வழங்க மறுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
28 May 2026, 11:24 pm
<p><strong>கணினி பட்டா வழங்க மறுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை</strong></p><p>திருவள்ளூர், மே 28- களாம்பாக்கத்தில் வசிக்கும் இருளர் இன மக்களுக்கு கணினி பட்டாக்களை வழங்க மறுக்கும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர். தமிழரசு வலியுறுத்தியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்த களாம்பாக்கத்தில் 20 பழங்குடி இனக் குடும்பங்களுக்கு கடந்த 1999-ஆம் ஆண்டு இலவச குடிமனை பட்டா வழங்கப்பட்டு, அரசு தொகுப்பு வீடுக ளும் கட்டித் தரப்பட்டன. அங்கு அவர்கள் கடந்த 27 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் நிலையிலும், அவர்களுக்கு இதுவரை கணினி பட்டா வழங்கப்படவில்லை. பலமுறை மனு அளித்தும் திருத்தணி கோட்டாட்சியர் மற்றும் வரு வாய் அதிகாரிகள் இதற்குச் செவிசாய்க்க வில்லை. இந்தச் சூழ்நிலையில், “பட்டா வழங்க பொதுமக்களுக்கு ஆட்சே பனை இருந்தால் தெரிவிக்கலாம்” என அதிகாரிகள் பொது விளம்பரம் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கோரிக்கையை முன்வைத்து, வரும் ஜூன் 1-ஆம் தேதி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாகப் போராட்டம் நடத்த மலைவாழ் மக்கள் சங்கம் திட்டமிட்டுள்ளது. எனவே, தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் இதில் தலையிட்டு, இருளர் இன மக்களுக்குக் கணினி பட்டா வழங்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காலதாமதம் செய்யும் அதிகாரிகளைப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p>
