தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இடுவாயில் இலவச மனை பட்டா வழங்கியதில் முறைகேடு: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

20 Feb 2026, 2:39 pm
இடுவாயில்  இலவச மனை பட்டா வழங்கியதில்  முறைகேடு: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
<p><strong>இடுவாயில் &nbsp;இலவச மனை பட்டா வழங்கியதில் &nbsp;முறைகேடு: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்</strong></p> <p>திருப்பூர், பிப்.20 - இடுவாய் ஊராட்சியில் பல ஆயிரக்க ணக்கான ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு &nbsp;முறைகேடாக இலவச வீட்டு மனை பட்டா, &nbsp;வெளியூரில் வசிப்போருக்கு கொடுக்கப்பட் டுள்ளதாக குற்றம் சாட்டி, இதுகுறித்து ஆய்வு &nbsp;செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் &nbsp;என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் இந் தியா கூட்டணி கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப் பூர் தெற்கு ஒன்றியச் செயலாளரும், முன்னாள் &nbsp;ஊராட்சி மன்ற தலைவருமான கே.கணே சன், கொமதேக மாவட்ட துணைச் செயலா ளர் ஆர்.பொன்னுசாமி, மக்கள் நீதி மையம் &nbsp;பல்லடம் நகரச் செயலாளர் ஏ.பழனிச்சாமி, மதிமுக பொதுக்குழு உறுப்பினர் இளங்கோ, &nbsp;ஒன்றியச் செயலாளர் சிவக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடுவாய் செயலாளர் கே. பழனிச்சாமி, திமுக கிளைச் செயலாளர் சக்தி வேல், மார்க்சிஸ்ட் கட்சி பாரதிபுரம் செயலா ளர் ஏ.கே.ராமமூர்த்தி ஆகியோர் கையெ ழுத்துட்டு மாவட்ட ஆட்சியரிடம் வியாழ னன்று மனு கொடுத்தனர். இதில், திருப்பூர் ஒன்றியம் இடுவாய் ஊராட்சியில் க.ச.எண்: 176/1பி இல் அமைந் துள்ள வள்ளுவர் நகர் பகுதியில் 15 வருடங்க ளுக்கு மேலாக வீடு கட்டி குடியிருந்து வரும் &nbsp;30க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு இலவச &nbsp;வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டது. அவற்றோடு சேர்த்து புதிதாக காலியாக &nbsp;உள்ள இடங்களில் 20க்கும் மேற்பட்டவர்க ளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப் பட்டுள்ளது. அந்த &nbsp;பயனாளிகளை தேர்வு செய்வதில் &nbsp;எந்தவிதமான வெளிப்படைத் தன்மையும் இல்லாமல் ஆதி திராவிடர் நலத்துறை (தனி) &nbsp;தாசில்தார் மூலம் இலவச வீட்டுமனை பட்டா &nbsp;வழங்கப்பட்டுள்ளது. வழக்கமாக இலவச வீட்டுமனை பட்டா வழங்கும்போது, பயனா ளிகளின் விபரம் குறித்து சம்பந்தப்பட்ட இடம் அமைந்துள்ள கிராம நிர்வாக அலுவலகத் திலோ, பொது இடங்களிலோ அவர்களு டைய பெயர் பட்டியலை விளம்பர பலகை யில் ஒட்டி வைத்து ஆட்சேபனை இருந்தால் பொதுமக்கள் தெரிவிக்கும் நடைமுறை எது வும் இதில் கடைப்பிடிக்கப்படவில்லை. பய னாளிகள் தேர்வு குறித்து எவ்விதமான அறி விப்பும் வெளிப்படையாக செய்யப்ப டவில்லை. பல்லாண்டு காலமாக அந்தப் பகுதியிலே &nbsp;குடியிருந்து வரக்கூடிய 200க்கும் மேற்பட்ட சாதாரண ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட மக்கள் &nbsp;இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் குறை தீர்ப்பு நாளி லும், நேரிலும் பலமுறை விண்ணப்பம் கொடுத்து காத்திருக்கின்றனர். அவர்க ளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கா மல் வெளியூரில் இருக்கக்கூடிய, ஊராட் சிக்கு சம்பந்தம் இல்லாத கோவை மற்றும் &nbsp;திருப்பூர் பகுதிகளில் வசித்து வரும் நபர்க ளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங் கப்பட்டுள்ளன. ஏற்கனவே வீடு கட்டி குடியிருந்து வந்த &nbsp;முப்பதுக்கு மேற்பட்டவர்களுக்கு பட்டா &nbsp;வழங்கியதிலும் பணம் கேட்டு துன்புறுத்துவ தாகவும், வெளியூரில் வசிக்கும் நபர்களுக்கு &nbsp;பட்டா வழங்கப்பட்டதில் ஆதி திராவிடர் நலத் துறை வட்டாட்சியர் அலுவலகத்தில் சிலர் &nbsp;ஏஜெண்டுகளாக செயல்பட்டு, அவர்கள் மூலம் பெருமளவில் பணம் கொடுக்கப்பட்டு இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். ஆகவே முறைகேடாக வழங்கப்பட் டுள்ள இந்த பட்டாக்கள் குறித்து வருவாய் &nbsp;கோட்டாட்சியர் மூலம் பயனாளிகள் அனைவ ரையும் தனியே அழைத்து விசாரணை செய்து, அரசு இலவசமாக வழங்கக்கூடிய வீட்டுமனை பட்டாக்களுக்கு, அரசின் நன்ம திப்பை கெடுக்கக்கூடிய வகையில் பணம் பெற்றோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க &nbsp;வேண்டும். இடுவாய்க்கு சம்பந்தமில்லாமல் வெளியூரில் வசிக்கக் கூடியவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்ய வேண்டும், இவற்றிற்கு துணை நின்ற ஆதிதி ராவிடர் நலத்துறை வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க &nbsp;வேண்டும் என கேட்டுக்கொண்டனர். &nbsp; இம்மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் இப்பிரச்சனை குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை &nbsp;எடுக்க &nbsp;பரிந்துரை செய்திருப்பதாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் தெரி வித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.