சிதம்பரம் ராமசாமி மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு! இந்திய மாணவர் சங்கம் போராட்டம்
7 Jan 2026, 4:05 pm
<p><strong>சிதம்பரம் ராமசாமி மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு! இந்திய மாணவர் சங்கம் போராட்டம்</strong></p>
<p>சிதம்பரம், ஜன.7- சிதம்பரம் நகரத்தில் அரசு உதவி பெறும் பழமை வாய்ந்த ராமசாமி மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இந்தப் பள்ளியில் மேல்நிலை வேதியியல் ஆசிரியர் காளிதாஸ் கடந்த 9 ஆண்டுகளாக தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பள்ளியில் வேதியியல் மற்றும் இயற்பியல் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளதால் நிரந்தர ஆசிரியர்களை நியமித்துக் கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனையொட்டி புதிய ஆசிரியர்களை நிய மிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி நிர்வாகம் செய்துள்ளது. இதில் ஏற்கெனவே பணி யாற்றிய ஆசிரியரை தவிர்த்து வெளியில் இருந்து இயற்பியல் மற்றும் வேதியியல் பாட பிரிவுக்கு ஆசிரியரை நிய மித்துள்ளனர். இதனை அறிந்த மாணவர்கள் ஆசி ரியர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளது என்றும், ஆசிரியரை மாற்றக் கூடாது என்றும் இந்திய மாணவர் சங்கத்தின் தலை வர் நந்தினி தலைமையில் மாணவர் சங்க நிர்வாகிக ளுடன் பள்ளி வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொட ர்ந்து காவல்துறையினர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு வருகை தந்து போரா ட்டத்தில் ஈடுபட்டவர்களி டம் அமைதி பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். இது குறித்து மாண வர்கள் கூறுகையில், ஆசி ரியர் காளிதாஸ் மாண வர்களிடத்தில் நன்கு பழகக் கூடியவர். பாடம் மட்டும் எடுக்காமல் மாணவர்களை நல்வழிப்படுத்தும் பல நல்லொழுக்கத்தை கற்றுத் தந்துள்ளார் எனவே இவரையே நிரந்தர ஆசி ரியராக நியமிக்க வேண்டும் என கூறுகின்றனர்.</p>
