முந்தய பக்கம்

குத்தகை உரிமம் நீட்டிப்பதில் முறைகேடு: சிபிஎம் ஆர்ப்பாட்டம்

29 Dec 2025, 6:22 pm
குத்தகை உரிமம் நீட்டிப்பதில் முறைகேடு: சிபிஎம் ஆர்ப்பாட்டம்
<p><strong>குத்தகை உரிமம் நீட்டிப்பதில் முறைகேடு: சிபிஎம் ஆர்ப்பாட்டம்</strong></p> <p>தருமபுரி, டிச. 29- பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் புதிய பஸ்நிலையத்தில் உள்ள கடை &nbsp;குத்தகை உரிமம் நீட்டிப்பதில் முறை கேட்டை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்களன்று &nbsp;ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், பாப்பாரப் பட்டி பேருந்து நிலையம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு &nbsp;வட்டார &nbsp;செயலாளர் சக்திவேல் தலைமை வகித்தார். பகுதிக்குழு உறுப்பினர் சிலம்பரசன் முன்னிலை வகித்தார். &nbsp;மாவட்டக் குழு உறுப்பினர் சின்ன சாமி கண்டன உரையாற்றினார். சிஐ டியூ மாவட்ட நிர்வாகி மனோன் மணி, பகுதி குழு உறுப்பினர்கள் ராஜாமணி, சின்ன ராஜி, லோக நாதன், கிளை செயலாளர்கள் ராஜ சேகர், முருகன், பாதிப்பின், முனியப் பன், மணிகண்டன் உள்ளிட்ட பலர் &nbsp;கலந்து கொண்டு கடை குத்தகை உரிமம் நீட்டித்து குறித்த பேரூராட்சி தீர்மானத்தைக் கைவிடக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram