சிறப்பு வாக்காளர் திருத்தத்தில் குளறுபடிகள்: வாக்காளர்களுக்குப் பேரதிர்ச்சி!
14 Dec 2025, 3:45 pm
<p><strong>சிறப்பு வாக்காளர் திருத்தத்தில் குளறுபடிகள்: வாக்காளர்களுக்குப் பேரதிர்ச்சி!'</strong></p>
<p>திண்டுக்கல், டிச. 14 – தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் 4ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 14 ஆம் தேதி வரை நடந்த சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தப் பணியில் நிலவும் குளறுபடிகள் வாக்காளர்களுக்குப் பேரதிர்ச்சியைத் தரக் காத்திருப்பதாகக் கூறப்படுகிறது. பி.எல்.ஓ.க்கள்: பயிற்சி இல்லை, பணிச்சுமை அதிகம் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர் களைக் கொண்டு பி.எல்.ஓ.க்கள் (பூத் லெவல் ஆபீஸர்கள்) நியமிக்கப்பட்டனர். ஆனால், தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியபடி, பி.எல்.ஓ.க்கள் வீடு வீடாகச் சென்று வாக்கா ளர்களின் கணக்கீட்டுப் படிவங்களைப் பெற்று, சரிபார்க்கும் பணி முறையாக நடக்கவில்லை. போதிய பி.எல்.ஓ.க்கள் இல்லாததால், கால அவகாசமும் கிடைக்கவில்லை. வாக்காளர் களே நேரடியாக பி.எல்.ஓ.க்களைத் தேடிச் சென்று படிவங்களைப் பூர்த்தி செய்து கொடுத்துள்ளனர். தேர்தல் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிப்பது போல, பி.எல்.ஓ.க்களுக்கு முறை யான பயிற்சி வழங்கப்படவில்லை. அவசரகதி யில் களத்திற்கு அனுப்பப்பட்டனர். பல தாலுகா அலுவலகங்களில், பி.எல்.ஓ.க்களே இரவு 11 மணி வரையிலும் வேலை செய்து, தாங்கள் பெற்ற படிவங்களை ஆன்லைன் ‘ஆப்’புகளில் பதிவேற்றம் செய்ய நிர்பந்திக்கப்பட்டனர். களத்தில், வருவாய்த்துறை அதிகாரிகளின் கடு மையான வார்த்தைகளுக்கும் ஆளாகினர். ஐ. பெரியசாமி குற்றச்சாட்டு திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி யில் கிட்டத்தட்ட 25 ஆயிரம் வாக்குகள் நீக்கப் பட்டுவிட்டதாக அமைச்சர் ஐ. பெரியசாமி குற்றம் சாட்டினார். வீடுகளில் ஆள் இல்லாத வர்களை இடமாறுதல் எனக் குறிப்பிட்டு வாக்கு களை நீக்க வட்டாட்சியர் உத்தரவிட்டதாகவும், இது ஒன்றிய அரசின் ஒத்துழைப்போடு நடந்தது என்றும் அவர் தெரிவித்தார். இந்த எஸ்.ஐ.ஆர். (Special Revision) குளறுபடிகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மறுநாள் மாவட்ட ஆட்சியர் பி.எல்.ஓ.க்களை அழைத்து கூட்டம் நடத்திய போதும், பதிவேற்றம் குறித்த தெளிவான புரிதல் அதிகாரிகளிடமும் இல்லை என்பதே உண்மை. பதிவேற்றப் பிரச்சனை பி.எல்.ஓ.க்கள் பூர்த்தி செய்து ஆன்லைனில் பதிவேற்றம் செய்த படிவங்களை வட்டாட்சி யர் அலுவலகங்கள் இதுவரை பெற்றுக் கொள்ளவில்லை. அனைத்து படிவங்களும் இன்னமும் பி.எல்.ஓ.க்களிடமே உள்ளன. இத னால், ஒரு வாக்காளர் கொடுத்த படிவம் முறை யாகப் பதிவேற்றம் செய்யப்பட்டதா என்பதில் உறுதியற்ற நிலை நீடிக்கிறது. அதுமட்டுமின்றி, வாக்காளரின் பழைய இருப்பிட விவரங்கள் (சட்டமன்ற எண், பாகம் எண்), பெற்றோர் ஆதார் எண் போன்ற கூடுதல் தகவல்களையும் பி.எல்.ஓ.க்கள் சேகரிக்க வேண்டியிருந்தது. திருமணமான பெண்கள், இடம் மாறிச் சென்றவர்கள் ஆகியோரின் வாக்குகளை உறுதிப்படுத்துவதில் பெரும் சிர மங்கள் உள்ளன. மேலும், இந்தத் திருத்த காலத்தில் புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதோ, இடமாறுதல் செய்வதோ சாத்தியமில்லை. இரட்டை வாக்குரிமை ஒரு மாயை? இந்தத் தீவிரத் திருத்தம் மூலமாக, பல ஆண்டுகளாக இறந்துபோனவர்கள் நீக்கப்படு வதாக ஒன்றிய தேர்தல் ஆணையம் ஒரு பிம்பத்தைக் காட்டுகிறது. திருமணமான பெண்கள் வேறு ஊருக்குச் சென்று புதிதாக வாக்காளர் பட்டியலில் இணைந்திருக்கும் போது, பழைய வாக்கை நீக்காமல் இருந்திருந் தால், அவர்களை இரட்டை வாக்காளர்கள் என்று கூறுவது தவறு என சமூக ஆர்வ லர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பாஜக, அதிமுக போன்ற கட்சிகள் இதை இரட்டை வாக்குரிமை என்று ஆதரிக் கின்றன. இதன் விளைவாக, பீகாரை விட தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளது. வெளி மாநிலத்தவர்களுக்கும் (குறிப்பாக சென்னை, கோவை போன்ற பெரு நகரங்களில் உள்ள வடமாநில தொழிலாளர்கள்) வாக்கு ரிமை அளிக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் வெளி மாநிலத்தவர்களின் வாக்குகள் கூடுதலாகச் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. ஆப்பில் குழப்பம் பி.எல்.ஓ.க்களுக்கு வழங்கப்பட்ட ஆப்பில் ஆதார் எண், ஓட்டு ஐ.டி. எண் உள்ளிட்ட விவரங்கள் மாறியிருப்பது பி.எல்.ஓ.க்களி டையே குழப்பத்தை ஏற்படுத்தியது. இத னால், ஒரே நாளில் வேறு ஒரு ஆப்பைக் கொடுத்து மீண்டும் பதிவேற்றம் செய்யச் சொல்லி பி.எல்.ஓ.க்களுக்கு இரட்டை வேலை கொடுக்கப்பட்டுள்ளது. உள்ளடி வேலை ஏதோ நடக்கிறது என்பது மட்டும் பி.எல்.ஓ.க்களுக்குத் தெரிகிறது. இதன் முழுப் பரிமாணமும் டிசம்பர் 19ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப் படும்போதுதான் பூகம்பமாக வெடிக்கும்.</p>
