எஸ்ஐஆர் பணிகளில் குளறுபடி: திமுக கவுன்சிலர் மனு
29 Dec 2025, 6:22 pm
<p><strong>எஸ்ஐஆர் பணிகளில் குளறுபடி: திமுக கவுன்சிலர் மனு</strong></p>
<p>கோவை, டிச.29- கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகேயுள்ள தென்கரை பேரூராட்சி மூன்றாவது வார்டு திமுக கவுன்சிலர் திவ்யா துரைசாமி, கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார். அதில், “சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் அவசரகதியில் மேற்கொள்ளப்பட்டதால், பல குளறுபடிகள் நடந்துள்ளன. வரைவு வாக்காளர் பட்டி யலில் தென்கரை பேரூராட்சியில் உள்ள வார்டு எண் 2 சென்ன னூர் வாக்காளர் பட்டியலில் தவறுதலாக வெவ்வேறு வார்டுகளை சேர்ந்த 162 வாக்காளர்கள் சேர்க்கப் பட்டுள்ளனர். இதேபோல வார்டு எண் 12 இல் வெவ்வேறு வார்டுகளை சேர்ந்த 66 பேர் தவறுதலாக சேர்க்கப்பட்டுள் ளனர். இது தொடர்பாக சிறப்பு முகாமில் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்த போது, எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடி களை சரி செய்து, அந்தந்த வார்டு வாக்காளர்களை அந்தந்த வார்டுகளில் சேர்க்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.</p>
<p> </p>
