சென்னை விரைவு செய்திகள்
5 Mar 2026, 3:59 pm

பொதுத்தேர்வுப் பணி ஒதுக்கீட்டில் முறைகேடு

'ராணிப்பேட்டை, மார்ச் 5– ராணிப்பேட்டை மாவட்டக் கல்வி அலுவலகத்தில் (இடைநிலை), 2026 மார்ச்/ஏப்ரல் மாத பொதுத்தேர்வுப் பணிகளுக்கான ஆணை வழங்கியதில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. பள்ளி துணை ஆய்வாளர் செந்தில் குமார், விதிகளை மீறி தன்னிச்சையாகச் செயல்பட்டு, தனக்கென ஒரு குழுவை அமைத்துத் தேர்வு மையக் கண்காணிப்பாளர்கள் மற்றும் துறை அலுவலர்களை நியமிப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, குறிப்பிட்ட ஆசிரியர்களுக்குப் பணி ஒதுக்கீடு செய்ய ரூ. 3ஆயிரம் முதல் ரூ. 5ஆயிரம் வரை வசூலிக்கப்படுவதாகவும், மூத்த ஆசிரியர்களைக் கட்டாயப்படுத்தித் தனியார் பள்ளிகளுக்குப் பணிக்கு அனுப்புவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. மேலும், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தித் தனது மனைவிக்கு மட்டும் வீட்டின் அருகிலேயே தேர்வுப் பணி ஒதுக்கீடு செய்து கொள்வதாகவும், குலுக்கல் முறையைச் சரியாகப் பின்பற்றவில்லை என்றும் நேர்மையான ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த முறைகேடுகள் குறித்துத் தமிழக அரசு மற்றும் தேர்வுத்துறை இயக்ககம் விரிவான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

டிராக்டர் மோதி பெண் பலி

மதுராந்தகம், மார்ச் 5- செங்கல்பட்டு மாவட்டம், சூனாம்பேடு அடுத்த இல்லிடு கிரா மத்தைச் சேர்ந்த பார்வதி(46). இவர் மீது டிராக்டர் மோதியதாக கூறப்படுகிறது. இதில், பலத்தகாயமடைந்த அப்பெண் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து, டிராக்டர் ஓட்டுநரை கைது செய்து காவல்துறையினர் விசா ரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

ஆவடியில் 463 கிலோ கஞ்சா எரித்து அழிப்பு

அம்பத்தூர், மார்ச் 5- ஆவடியில் 49 வழக்கு களில் பறிமுதல் செய்யப் பட்ட 463 கிலோ எடையுள்ள கஞ்சாவை காவல் துறை யினர் வியாழனன்று எரிந்து அழித்தனர். ஆவடியில் 49 கஞ்சா வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுவரை 2024ஆம் ஆண்டு 112 வழக்குகளில் கைப்பற்றப் பட்ட 399 கிலோ எடையுள்ள கஞ்சா, 2025ஆம் ஆண்டு 581 வழக்குகளில் கைப் பற்றப்பட்ட 2,945 கிலோ எடையுள்ள கஞ்சா வும், 2026ஆம் ஆண்டு ரூ. 2.31 கோடி மதிப்பிலான 463 கிலோ எடையுள்ள கஞ்சா வும் எரித்து அழிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.