தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆதிதிராவிடர் நலத்துறை நிலத்தில் முறைகேடாக பட்டா வழங்கல்

27 Jan 2026, 3:28 pm
ஆதிதிராவிடர் நலத்துறை நிலத்தில் முறைகேடாக பட்டா வழங்கல்
<p><strong>ஆதிதிராவிடர் நலத்துறை நிலத்தில் முறைகேடாக பட்டா வழங்கல்</strong></p> <p>சேலம், ஜன. 27- சேலம் மாவட்டம், காடையாம் பட்டி வட்டம், தாராபுரம் கிராமம் குரு மன் காடு பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறையினரால் பட்டியலின மக் களுக்காக ஒதுக்கப்பட்ட பொது நிலத் தில், மாற்று சமூகத்தினருக்கு விதி களை மீறி வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் செவ்வாயன்று வட்டாட் சியர் அலுவலகத்தில் காத்திருப்புப் &nbsp;போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 1967-ஆம் ஆண்டு குரு மன் காடு பகுதியில் வசிக்கும் பட்டி யலின மக்களுக்காக 3.85 ஏக்கர் நிலம் ஆதிதிராவிடர் நலத்துறையின ரால் ஆர்ஜிதம் செய்யப்பட்டு வழங் கப்பட்டது. இதில் 45 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்ட நிலை யில், மீதமுள்ள நிலத்தில் தற்போது 12 குடும்பங்கள் உட்பட மொத்தம் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் பொதுத் தேவை களுக்காகவும், மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி அமைப்பதற்காகவும் சுமார் மூன்று சென்ட் நிலம் ஒதுக் கப்பட்டிருந்தது. இந்த நிலத்தில் அங் கப்பன் என்பவர் தற்காலிகமாக கடை வைக்க ஓமலூர் வட்டாட்சியர் அலுவ லகத்தில் நடந்த அமைதிக் கூட்டத் தில் அனுமதி வழங்கப்பட்டது. அப் போது, அவரது காலத்திற்குப் பிறகு அந்த இடத்தை காலி செய்ய வேண் டும் என்று நிபந்தனை விதிக்கப் பட்டது. தற்போது அந்த நிபந்தனையை மீறி, அங்கப்பன் தனது மகன் ராஜா விற்கு அதே இடத்தில் சிறிய ஓட்டு &nbsp;வீடு கட்டி, மோசடியாகப் பட்டா &nbsp;பெற்று பத்திரப்பதிவு செய்துள்ள தாக கூறப்படுகிறது. பொதுப் பயன் பாட்டிற்கான நிலத்தை மாற்று சமூ கத்தைச் சேர்ந்த தனிநபர் ஆக்கிர மித்து பட்டா பெற்றிருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்ப டுத்தியுள்ளது. இந்த முறைகேடான பட்டாவை உடனடியாக ரத்து செய்ய &nbsp;வேண்டும் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி செவ்வாயன்று காடையாம்பட்டி வட் டாட்சியர் அலுவலகத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காத்தி ருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தாலுகாக்குழு உறுப்பினர் எஸ். வரதராஜன் தலைமை ஏற்றார். இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துக் கண்ணன், மாவட்டச்செயலாளர் ஏ. ராமமூர்த்தி, தாலுகா செயலாளர், கே.சேகர் மற்றும் பொதுமக்கள் திர ளானோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.