தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

200 ஆண்டுகளாய் உயிர்வாழும் ‘இரணிய நாடக தெருக்கூத்து’!

17 Jan 2026, 2:42 pm
200 ஆண்டுகளாய் உயிர்வாழும் ‘இரணிய நாடக தெருக்கூத்து’!
<p><strong>200 ஆண்டுகளாய் உயிர்வாழும் &lsquo;இரணிய நாடக தெருக்கூத்து&rsquo;!</strong></p> <p>நவீன மருத்துவமும் தொழில்நுட்ப மும் ஆட்கொண்ட இந்த டிஜிட்டல் யுகத்தி லும், ஒரு கிராமமே ஒன்று திரண்டு, கலையையே மருந்தாக நம்பி விடிய விடிய தெருக்கூத்து நடத்தும் அதிசயம் கோவை மேட்டுப்பாளையத்தில் ஆண்டு தோறும் இப்பொங்கல் நாளையொட்டி நடைபெறும். மேட்டுப்பாளையம் அருகே உள்ள பகத்தூர் கிராமத்தில், கடந்த இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக தங்களின் வாழ்வியலோடு கலந்த ஒரு அங்கமாக &lsquo;இரணிய நாடக தெருக்கூத்தை&rsquo; மக்கள் &nbsp;நடத்தி வருகின்றனர். பல தலைமுறைகளுக்கு முன்பு, இந்தப் பகுதியை &lsquo;கொல்லை நோய்&rsquo; &nbsp;எனப்படும் பிளேக் மற்றும் காலரா போன்ற &nbsp;கொடிய நோய்கள் தாக்கியபோது, வீடு கள் தோறும் மரண ஓலங்கள் கேட்டன. அந்த இருண்ட காலத்தில், மக்களுக்கு நம்பிக்கையையும் ஆறுதலையும் வழங் கத் தொடங்கியதுதான் இந்தத் தெருக் கூத்து. தீமையின் அடையாளமான இரணி யனை, நரசிம்மர் அழிப்பதாகக் கூறப்ப டும் இக்கதையை அரங்கேற்றிய பின் னரே, ஊரைப் பிடித்த பிணி மெல்ல விலகி &nbsp;மகிழ்ச்சி திரும்பியதாக இம்மக்கள் நம்பு கின்றனர். அந்த நம்பிக்கையையே இன்று &nbsp;தொடர்ந்து தெருக்கூத்தை நடத்தி வரு கின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் இந்த விழாவில், இரவு 8 &nbsp;மணிக்குத் தொடங்கும் ஆட்டம், மறுநாள் &nbsp;சூரிய உதயத்திற்குப் பின்புதான் நிறை வடைகிறது. கொட்டும் பனி, நடுங்கும் &nbsp;குளிர் எதனையும் பொருட்படுத்தாமல் ஊர் மக்கள் அனைவரும் வெட்டவெளி யில் அமர்ந்து இக்கலையை ரசிக்கின்ற னர். இதில் நடிக்கும் நடிகர்கள் வெளி யூர்க்காரர்கள் அல்ல; முழுக்க முழுக்க இந்த பகுதியை சேர்ந்தவர்களே. &nbsp;பிழைப்புக்காக நாட்டின் எந்த மூலை யில் இருந்தாலும், இந்த நாடக நாளில் &nbsp;பகத்தூர் மக்கள் தவறாமல் கிராமத் திற்கு திரும்புவது வியக்கத்தக்க ஒன்று. கலையும் நம்பிக்கையும் தெருக்கூத்து என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல; அது வர லாறுகளையும், நீதிகளையும் கடத்தும் ஊடகம் என்பதற்கு பகத்தூர் ஒரு சான்று. &nbsp;&ldquo;எங்கள் முன்னோர்கள் கற்றுக்கொடுத்த இந்தத் தெருக்கூத்து, எங்களுக்கு ஒரு &nbsp;கலை மட்டுமல்ல, அது எங்கள் குலத்தைக் &nbsp;காக்கும் மருந்து&rdquo; என உணர்ச்சிப் பெருக்கு டன் கூறுகின்றனர் ஊர் மக்கள். இந்த நாடகத்தின் மையக்கருத்து மூட &nbsp;நம்பிக்கையை உடையது என்றபோதி லும், &nbsp;சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை &nbsp;ஒரு பாரம்பர்யக் கலையை தங்களின் &nbsp;உயிர்மூச்சாக கருதிப் பாதுகாப்பது, அழிந்து வரும் நாட்டுப்புறக் கலைக ளுக்கு ஒரு புதிய நம்பிக்கையை அளித் துள்ளது. ஊர் கூடித் தேர் இழுப்பது போல, &nbsp;ஊர் கூடித் தெருக்கூத்து நடத்தும் இவர் களின் அசையாத நம்பிக்கை, தமிழ் மண் ணின் அடையாளத்தை அடுத்த தலை முறைக்கும் கடத்திச் செல்கிறது. எதிர்காலத்தில் நாடகத்தின் கரு மாறும், மாற்றம் மக்கள் எழுச்சியில் இருந்தே துவங்கும் என்கிற நம்பிக்கை யோடு, நாமும் கலைந்தோம். (ந.நி)</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.