விளையாட்டு
28 Mar 2026, 4:13 pm

கருப்புப் பட்டை, பள்ளிப் பைகளுடன் ஈரான் கால்பந்து வீரர்கள்

வெள்ளியன்று துருக்கியின் பெலெக் நகரில் நைஜீரி யாவுக்கு எதிரான நட்பு ரீதியிலான போட்டியில் ஈரான் ஆடவர் அணி விளையாடியது. இந்தப் போட்டிக்கு முன்பு ஈரான் வீரர்கள் கைகளில் கருப்பு பட்டைகளுடனும், இளஞ்சிவப்பு மற்றும் ஊதா நிற பள்ளிப் பைகளை கைகளில் ஏந்திய படி வரிசையாக நின்றனர். ஈரானின் ‘ஷஜரே தய்யேபா’ பள்ளி மீது அமெ ரிக்கா, இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு அஞ்சலி செலுத்தவே வீரர்கள் தேசிய கீதம் பாடும் முன்பு, கருப்புப் பட்டை, பள்ளிப் பைகளுடன் நின்றனர். ஷஜரே தய்யேபா பள்ளி மீதான தாக்குதலில் குழந்தைகள், ஆசிரியர்கள் என 175க்கும் மேற் பட்டோர் உயிரிழந்தனர். ஈரான் அணி தனது அடுத்த நட்பு ரீதியிலான போட்டியில் வரும் செவ்வா யன்று (மார்ச் 31) கோஸ்டாரிகா அணியுடன் துருக்கியில் மோதவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தோனிக்கு காயம் : 2 வாரம் ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டார்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை அணியின் நட்சத்திர வீரருமான மகேந்திர சிங் தோனி காயம் காரணமாக 2 வாரம் ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிப்பு வெளி யாகியுள்ளது. காலில் தசைப்பிடிப்பு மற்றும் முழங்கால் பகுதியில் சிறு அசௌகரியம் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது என சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் கூறப்பட் டுள்ளது. தற்போதைய நிலவரப்படி தோனி லேசான பயிற்சிக ளில் ஈடுபட்டு வருவதாகவும், மருத்துவர்களின் கண்காணிப் பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. தோனிக்கு பதில் சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பர் பணியை செய்வார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

இன்றைய ஆட்டம்

கொல்கத்தா - மும்பை இடம் : வான்கடே மைதானம், மும்பை நேரம் : இரவு 7:30 மணி சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார் (ஓடிடி)

வில்வித்தை ஆசியக் கோப்பை ; இந்தியா 10 பதக்கங்களை வென்றது

தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் நடைபெற்ற வில்வித்தை ஆசியக் கோப்பை (நிலை 1) போட்டிகளில் இந்திய அணி மொத்தம் 10 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது. ஆடவர் தனிநபர் காம்பவுண்ட் பிரிவில் இந்தியாவின் உதய் கம்போஜ் தங்கப் பதக்கத்தையும், பிரத்மேஷ் ஜாவ்கர் வெள்ளிப் பதக்கத்தையும், ரஜத் சவுகான் வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர். கலப்பு இரட்டையர் காம்பவுண்ட் பிரிவில் ரஜத் சவுகான் - சிகிதா தனிபார்த்தி இணை தங்கம் வென்றது. மகளிர் தனிநபர் ரிகர்வ் பிரிவில் ரிதி போர் வெள்ளி வென்றார். ஆடவர் ரிகர்வ் அணி மற்றும் மகளிர் காம்பவுண்ட் அணி ஆகியவையும் வெள்ளிப் பதக்கங்களைக் கைப்பற்றின. மகளிர் தனிநபர் காம்பவுண்ட் பிரிவில் தேஜல் சால்வே வெண்கலம் வென்றார். மேலும், ஆடவர் காம்பவுண்ட் அணி மற்றும் மகளிர் ரிகர்வ் அணியும் தலா ஒரு வெண்கலத்தை வென்றன என்பது குறிப்பிடத்தக்கது.