தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘மறக்க முடியாத அன்பு காட்டியுள்ளீர்கள்’ காஷ்மீர் மக்களுக்கு ஈரான் தூதரகம் நன்றி!

24 Mar 2026, 3:23 pm
‘மறக்க முடியாத அன்பு காட்டியுள்ளீர்கள்’  காஷ்மீர் மக்களுக்கு ஈரான் தூதரகம் நன்றி!
<p><strong>&lsquo;மறக்க முடியாத அன்பு காட்டியுள்ளீர்கள்&rsquo; &nbsp;காஷ்மீர் மக்களுக்கு ஈரான் தூதரகம் நன்றி!</strong></p> <p>புதுதில்லி, மார்ச் 24 - &nbsp;ஈரானுக்கு ஒருமைப்பாட்டை தெரி விக்கும் வகையிலும், உதவி செய்யும் வகையிலும் காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் இந்தியாவின் பிற பகுதி களில் இருந்து கிடைத்து வரும் தார்மீக ஆதரவு மற்றும் மனிதாபி மான உதவிகளுக்கு இந்தியாவுக்கான ஈரான் தூதரகம் நன்றி தெரிவித்துள்ளது. இஸ்ரேல் அமெரிக்க போரால் பாதிக்கப்பட்டுள்ள ஈரான் மக்களுக்கு உதவி செய்யும் வகையில் காஷ்மீரை &nbsp;சேர்ந்த சிறுவர், சிறுமியர் தாங்கள் &nbsp;உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணத்தை கொடுத்து உதவியுள்ளனர். &nbsp;பெண்கள் பலர் தமது பல ஆண்டு கால சேமிப்பான நகைகளையும் பணத்தையும் கொடுத்துள்ளனர். ஒரு வயதான பெண் தனது கணவரின் நினைவாக 28 ஆண்டுகளாகப் பாது காத்து வந்த தங்க நகையை, ஈரான் மக்களுக்கு ஆதரவாக நன்கொடை யாக வழங்கியுள்ளார். &nbsp;இதுதொடர்பான காணொளி களை தங்களது &lsquo;எக்ஸ்&rsquo; பக்கத்தில் பகிர்ந்து &nbsp;ஈரான் தூதரகம் நன்றி தெரிவித்துள்ளது. &nbsp;அதில், &ldquo;மனிதாபிமான ஆதரவுட னும், மனப்பூர்வமான ஒற்றுமையுட னும் ஈரான் மக்களுடன் நிற்கும் அன்பான காஷ்மீர் மக்களுக்கு நன்றியால் நிறைந்த இதயங்களுடன் எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்களின் கண்ணீரும் தூய்மை யான உணர்வுகளுமே ஈரான் மக்க ளுக்கு மிகப்பெரிய ஆறுதல். இது என்றும் மறக்கப்படாது. நன்றி காஷ்மீர், நன்றி இந்தியா!&rdquo; என ஈரான் குறிப்பிட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.