தீக்கதிர் உலக செய்திகள்
18 Jun 2026, 9:28 pm

ஈரான் -அமெரிக்கா பேச்சுவார்த்தை: போப் லியோ பாராட்டு

ஈரான்-அமெரிக்கா இடையே அறிவிக்கப்பட்டுள்ள ஒப்பந்தமானது பேச்சுவார்த்தையில் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் விளைவு என்று போப் லியோ பாராட்டியுள்ளார். போர் நிறுத்த ஒப்பந் தத்திற்கு அமெரிக்கா வும் ஈரானும் ஒப்புக் கொண்ட நிலையில், இந்த பேச்சுவார்த்தை க்கு உதவியவர்களுக்கு போப் லியோ தனது நன்றியையும் தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் ஒத்துழைப்புக்கான வழிகளை ஊக்குவிப்பதன் மூலம், மேற்கு ஆசியாவில் பாதுகாப்பு மற்றும் உறுதித் தன்மையை வலுப்படுத்த பங்களிக்கும் என்று நான் நம்புகிறேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

தொடர் போர்க்குற்றங்கள் எங்கும் நிறைந்த மரணம்

காங்கோவின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி களில் ருவாண்டா ராணுவமும் அதன் ஆதரவு பெற்ற எம்.23 (M23) ஆயுதக் குழுவும் போர்க் குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றன.கனிம வளம் நிறைந்த பகுதிகளை கைப்பற் றுவதற்காக ஆயுதக் குழுக்களுக்கு இடை யே மோதல் தொடர்ந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் எங்கும் மரணம் நிறைந்துள் ளது என்று மனித உரி மைகள் கண்காணிப்பகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் எம்.23 ஆயுதக்குழுவின் பயிற்சி முகாம்களில் நடக்கும் கைதுகள், கட்டாய உழைப்பு, சித்ரவதைகளும் அந்த அறிக்கையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.