அமெ.வுடன் சில நாட்களில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!
13 Jun 2026, 11:00 pm

அமெ.வுடன் சில நாட்களில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!

டெஹ்ரான், ஜூன் 13- அமெரிக்காவுடன் ஒரு புரிந்து ணர்வு ஒப்பந்தம் (MoU) இன்னும் சில நாட்களுக்குள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக ஈரான் வெளியுற வுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.

ஈரான் அரசு ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் அராக்சி பேசு கையில், “ஈரான் மீது அமெரிக்க - இஸ்ரேல் கூட்டணி நடத்திய தாக்குத லில் ஈரான் வெற்றி பெற்றுள்ளது. ஈரான் மக்களே இந்த களத்தில் உண்மையான வெற்றியாளர்கள்” என்று கூறியுள்ளார். “இந்த முடிவு ஒரு ‘முக்கிய உத்திசார் சாதனை’.

ஈரான் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுமே அணுசக்தி உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்களைக் கொண் டிருப்பவை. ஆனால் அவர்களின் நோக்கங்களை முறியடித்து ஈரான் இந்த வெற்றியைப் பெற்றுள்ளது” என்றும் தெரிவித்துள்ளார்.

60 நாட்களில் இறுதி உடன்பாடு “இயற்கையாகவே, இத்த கைய வெற்றிக்குப் பிறகு, ஒரு உடன்படிக்கை அல்லது புரிந்து ணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது அவசியமாகிறது” என்று கூறிய அராக்சி, “இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டவுடன், இரு நாடு களும் தத்தமது நாடுகளில் இருந்த படியே டிஜிட்டல் முறையில் கையெ ழுத்திட்டு, பின்னர் அதை அதிகா ரப்பூர்வமாக அறிவிக்கும்” என் றார்.

“இந்த ஒப்பந்தம் கையெழுத் தான பிறகு, இரு நாடுகளும் போரைத் துவங்க மாட்டோம் என்று உறுதியளிக்கும். அதனைத்தொட ர்ந்து 60 நாட்களுக்குள் இறுதி உடன்பாட்டை எட்டுவதற்கான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை கள் தொடங்கும்” என்றும் கூறி னார். ஒ

ப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் இதுபற்றி கூறிய அராக்சி, “செறி வூட்டப்பட்ட யுரேனியத்தின் வீரி யத்தை உள்நாட்டிலேயே வைத்து குறைப்பதை மட்டும் தான் எங்க ளால் ஏற்றுக்கொள்ள முடியும். இதில் நாங்கள் உறுதியாக உள் ளோம்” என தெரிவித்துள்ளார்.

அதேபோல “லெபனான் உட்பட பிற நாடுகளின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதுடன் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பகுதியில் இருந்து வெளியேற வேண்டும்; ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது, ஈரானின் கடல் எல்லை யில் கப்பற் படையை நிறுத்தி அமெ ரிக்கா நடத்தி வரும் முற்றுகையை கைவிடுவது; முடக்கப்பட்டுள்ள ஈரானின் சொத்துக்களை விடு விப்பது ஆகியவையும் இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்க ளாக இருக்கும்” என அராக்சி தனது நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.