பரஸ்பரம் தாக்குதல்கள் நிறுத்தம் : மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் - அமெரிக்கா முடிவு!
29 Jun 2026, 10:12 pm
<p><strong>பரஸ்பரம் தாக்குதல்கள் நிறுத்தம் : மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் - அமெரிக்கா முடிவு!</strong></p><p>டெஹ்ரான், ஜூன் 29 - தாக்குதல்களை நிறுத்தவும், பேச்சு வார்த்தைகளை மீண்டும் தொடங்க வும் ஈரானும் அமெரிக்காவும் ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவும் ஈரானும் போர் நிறுத்த த்தை நீட்டிக்கும் வகையில் புதிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டிருந்தன. அந்த ஒப்பந்தத்தை மீறி அமெரிக்க ராணுவம் ஈரானின் ரேடார் மற்றும் ஏவுகணை அமைப்பு கள் நிலை நிறுத்தப்பட்டிருந்த தீவுகளையும் துறைமுகங்களையும் தாக்கியது. இதற்கு பதிலடியாக பஹ்ரைன், குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த மோதல் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்தன. இதனால் ஈரானுக்கும் அமெரிக்கா வுக்கும் சுவிட்சர்லாந்தில் நடைபெற இருந்த தொடர் பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டது. இந்நிலையில் தான், இரு நாடுகளும் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வர உள்ளன. செவ்வாய்க்கிழமை கத்தாரில் சந்தித்து, மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக ஆக்ஸியோஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.</p>
