ஈரான் - அமெரிக்கா இடையே போர் நிறுத்தம் தோல்வியின் விளிம்பில் பின்வாங்கிய டொனால்டு டிரம்ப்
9 Apr 2026, 5:30 am

ஈரான் - அமெரிக்கா இடையே போர் நிறுத்தம் தோல்வியின் விளிம்பில் பின்வாங்கிய டொனால்டு டிரம்ப்

மேற்கு ஆசியாவில் கடந்த ஐந்து வாரங்களாக நீடித்து வந்த உக்ரமான போர், ஒரு தற்காலிக போர் நிறுத்தத்தை எட்டியுள்ளது. ஈரான் மீதான தனது மிரட்டல்கள் பலனளிக்காத நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஈரானின் உறுதி, சர்வதேச நாடுகளின் எதிர்ப்பு மற்றும் அமெரிக்காவின் உள்நாட்டு அரசியல் அழுத்தம் ஆகியவற்றிற்கு முன்னால் டிரம்ப் பணிந்துள்ளதையே இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன. அழிப்போம் என மிரட்டலும் தடையும் பின்வாங்கலும் என டிரம்ப் செயல்பட்டுள்ளார்.

செவ்வாய்க்கிழமை காலைக்குள், ஈரான் முழுமையாக அழிக்கப்படும் என்று டிரம்ப் கடும் மிரட்டல் விடுத்திருந்தார். 'ஹோர்மஸ் நீர்ச்சந்தியை ஈரான் உடனடியாகத் திறக்காவிட்டால், இன்று இரவு ஒரு முழு நாகரிகமே முடியும்' என்று அவர் வெளியிட்ட மிரட்டல் உலகையே உலுக்கியது.

ஒரு நாட்டின் ஜனாதிபதி, பல ஆயிரம் ஆண்டுகால வரலாறு கொண்ட ஒரு தேசத்தையே அழிப்பேன் என்று பகிரங்கமாக போர்க்குற்றங்களுக்கு அழைப்பு விடுத்தது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இருப்பினும், இந்த 'கெடு' முடிவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக, டிரம்ப் தனது தர்க்கத்தையே மாற்றிக் கொண்டு ஈரானுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக அறிவித்தார்.