ஈரான் மீது அமெரிக்கா முற்றுகை! ஹோர்முஸ் நீரிணைக்கு மீண்டும் கட்டுப்பாடு!
18 Apr 2026, 3:23 pm
<p>அமெரிக்காவின் முற்றுகை தொடர்வதால், ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக ஈரான் அறிவித்துள்ளது.</p><p>லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே 10 நாள்களுக்குப் போர் நிறுத்தம் அமலுக்குக் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணை வழியாக அனைத்து நாடுகளின் வர்த்தக கப்பல்களும் செல்ல நேற்று (ஏப்.17 ) அன்று ஈரான் அரசு அனுமதி அளித்தது.</p><p>இந்நிலையில், ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படையின் முற்றுகை தொடர்ந்து நடைபெறும் என டிரம்ப் மிரட்டல் விடுத்ததையடுத்து, ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது.</p>
