நிபந்தனைகளை நிறைவேற்றினால் 2 நாளில் ஹோர்முஸ் திறப்பு! ஈரான் அறிவிப்பு
2 Nov 2026, 11:01 pm

நிபந்தனைகளை நிறைவேற்றினால் 2 நாளில் ஹோர்முஸ் திறப்பு! ஈரான் அறிவிப்பு

தோகா, நவ. 2 -அமெரிக்கா தங்களின் நிபந்தனைகளை நிறைவேற்றினால் இரண்டு நாட்களில் ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதற்கு ஈரான் உறுதியளித்துள்ளது. ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள், கத்தார் நாட்டின் மத்தியஸ்தர்கள் மூலம் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், ஆனால்

இறுதி ஒப்பந்தம் அமெரிக்காவின் பதிலைப் பொறுத்தே அமையும்என்றும் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்ற பேச்சு வார்த்தைகள் குறித்துப் பேசிய ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, அமெரிக்கா அறிவுக்கு ஏற்ற புத்திசாலித்தனமான நடைமுறையை தேர்ந்தெடுக்கிறதா அல்லது வேறு வழிகளைப் பின்பற்றுகிறதா என்பதைப்பொறுத்தே இறுதிஒப்பந்தம் அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஈரான் மீதான பொருளாதாரத் தடையை நீக்க வேண்டும்;பிராந்தியத்தில் தனது ராணுவ படைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும், முடக்கி வைக்கப்பட்டுள்ளஈரானின் சொத்துகளை விடுவிக்க வேண்டும் என்பதே ஈரான் அமெரிக்காவிடம் வைத்துள்ளநிபந்தனைகளாகும். முன்னதாக நிபந்தனைகளை நிறைவேற்றினால் 7 நாட்களில் நீரிணை திறக்கப்படும் எனஅறி வித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.