டிரம்ப் அரசுக்கு எதிராக ஐரோப்பா, அமெரிக்க நீதிமன்றங்களில் ஈரான் வழக்கு
54 minutes before
<p><strong>டிரம்ப் அரசுக்கு எதிராக ஐரோப்பா, அமெரிக்க நீதிமன்றங்களில் ஈரான் வழக்கு</strong></p><p>டெஹ்ரான், நவ. 22-ஈரான் மீது கடந்த பிப். 28ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து நடத்திய தாக்குதல்களில் உயர் தலைவர் கோமேனி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கொல்லப்பட்டனர். மேலும், மினாப் நகரத்திலுள்ள பள்ளிக்கூடத்தின் மீதும் டிரம்ப் அரசின் உத்தரவின் பேரில் அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் 120 அப்பாவி பள்ளிக் குழந்தைகள் உள்பட 178 பேர் கொல்லப்பட்டனர்.</p><p>இந்நிலையில், போர்க்குற்றங்கள் எனக் குற்றம்சாட்டப்படும் இந்தச் சம்பவங்களுக்கு குறித்து ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நீதிமன்றங்களில் ஈரான் அரசு வழக்குத் தொடர்ந்துள்ளதாக, ஈரானின் சட்டவிவகாரத் துறை துணைத் தலைவர் மஜீத் அன்சாரி கூறியுள்ளார். இந்த வழக்குகள் அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரங்களைக் கொண்டு முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இவற்றில் சில வழக்குகள் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டுவிட்டன, மற்றவை பதிவு செய்யும் செயல்பாட்டில் இருக்கின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p>
