முந்தய பக்கம்

ஈரான் அணுசக்தி செறிவூட்டல் மையமான மீது தாக்குதல்!

21 Mar 2026, 1:04 pm
ஈரான் அணுசக்தி செறிவூட்டல் மையமான மீது தாக்குதல்!
<p>ஈரானின் முக்கிய யுரேனியம் செறிவூட்டல் மையமான &#39;நடான்ஸ்&#39; (Natanz) மீது அமெரிக்க, இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன.&nbsp;<br /> அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஒரு &quot;குற்றவியல் தாக்குதலை&quot; நடத்தியுள்ளதாக ஈரானின் அணுசக்தி அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இத்தாக்குதலால் எந்தவித அணுக்கதிர்வீச்சும் ஏற்படவில்லை என்றும், எனவே அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்றும் ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்தாக்குதல் எவ்வாறு நடைபெற்றது அல்லது எவ்வகையான குண்டுகள் பயன்படுத்தப்பட்டன என்பது குறித்த விவரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.<br /> ஈரானின் மையப்பகுதியில் அமைந்துள்ள &#39;நடான்ஸ்&#39;, அந்நாட்டின் முக்கிய அணுமின் நிலையங்களில் ஒன்றாகும். ஜூன் 2025-இல் ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே நடைபெற்ற 12 நாள் போரின்போது, ​​நடான்ஸ் அணுசக்தி நிலையத்தை இஸ்ரேல் ராணுவத்தால் குறிவைக்கப்பட்டது. இந்த நிலையில், இன்ரு &#39;நடான்ஸ்&#39; மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலே அங்கு நிகழ்ந்த முதல் பெரிய அளவிலான தாக்குதலாகும். இத்தாக்குதலுக்குப் பின்னணியில் அமெரிக்காவே இருப்பதாக, அமெரிக்கத் தரப்புகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.<br /> &nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram