கெஷம் தீவில் அமெரிக்கா தாக்குதல் ராணுவ தளங்களை தாக்கி ஈரான் பதிலடி
6 Jun 2026, 9:17 pm

கெஷம் தீவில் அமெரிக்கா தாக்குதல் ராணுவ தளங்களை தாக்கி ஈரான் பதிலடி

டெஹ்ரான், ஜூன் 6 - ஈரானின் கெஷம் தீவில் அமெரிக்கா தாக்குதல் நடத் திய நிலையில், பஹ்ரைன், குவைத்தில் உள்ள அமெ ரிக்க ராணுவத் தலங்களைத் தாக்கி ஈரான் பதிலடி கொடுத் துள்ளது. தங்கள் அனுமதி இன்றி எந்தக் கப்பலும் ஹோர்முஸ் நீரிணையை கடக்க முடி யாது என ஈரான் அறிவித்தி ருந்தது. அனுமதி பெறாமல் செல்லும் கப்பல்களை தாக் குவோம் என ஈரானின் புரட்சிகர காவல்படை எச்ச ரித்திருந்தது.

இந்நிலையில் ஈரானை சீண்டும் வகையில் 4 கப்பல் களை தனது கடற்படை பாது காப்புடன் அமெரிக்கா அழைத்து வந்தது. அக்கப் பல்களை ஈரானின் புரட்சிகர காவல்படை தாக்கியது. இத னால் அக்கப்பல்கள் மீண்டும் திரும்பி விட்டன.

இந்த தோல் வியை தாங்கிக் கொள்ள முடி யாத அமெரிக்கா சனிக் கிழமை அதிகாலையில் ஈரா னின் கெஷம் தீவில் தாக்கு தல் நடத்தியது. இதற்கு பதிலடியாக பஹ் ரைன், குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவத்தலங் கள் மீது ஈரானும் தாக்குதல் நடத்தியுள்ளது.

போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிப்பதற்கு பேச்சு வார்த்தை நடந்து வரும் நிலையில். அந்த பேச்சு வார்த்தையை குலைக்கும் வகையில் அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.