அமெரிக்க தாக்குதலுக்கு ஈரான் பதிலடி!
28 May 2026, 9:31 pm

அமெரிக்க தாக்குதலுக்கு ஈரான் பதிலடி!

டெஹ்ரான், மே 28 - போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.

இத்தாக்குதலுக்கு பதிலடி யாக ஈரானும் அமெரிக்க ராணுவத் தளம் மற்றும் போர்க் கப்பல்களை குறிவைத்து தாக்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், ஈரானின் தெற்குப் பகுதியில் ஒரு ஏவுகணை தளம் மற்றும் சில கடற்படைக் கப்பல்கள் மீது, மே-25 அன்று போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியது.

இதையடுத்து, அமெரிக்கா பாதிப்பை சந்தித்து இருப்பதால், மீண்டும் ஒரு போர் ஏற்படுவதற்கான வாய்ப்புகள், மிகக் குறைவு.

ஆனால் ஈரானைத் தாக்குபவர்களை, ஈரானின் தெற்குப்பகுதி சுடுகாடாக மாற்றும் என்று ஈரானின் புரட்சிகர காவல்படை எச்சரிக்கை விடுத்தது.

இந்த பின்னணியிலேயே, ஈரான் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தப் பட்ட அமெரிக்க ராணுவத் தளம் ஒன்றை குறிவைத்து வியாழக்கிழமை ஈரானின் புரட்சிகர காவல்படை தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் அரசு ஊடகமான ‘ஐஆர்ஐபி’ (IRIB) செய்தி வெளியிட்டுள்ளது.

தாக்குதலுக்குள்ளான அமெரிக்கத் தளம் எங்கு அமைந்துள் ளது என்பது குறித்த விவரங்களை அந்த அறிக்கை வெளியிடவில்லை.

இருப்பினும், அமெரிக்காவின் நட்பு நாடான குவைத், வியாழக்கிழமை காலை தங்கள் நாட்டின் மீது ஏவப்பட்ட ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களுக்குத் தான் பதிலடி கொடுத்து வருவதாகத் தெரி வித்துள்ளது.