நாங்கள் போரை விரும்பவில்லை அமெரிக்காவின் முடிவில் தான் உள்ளது : மசூத் பெசெஷ்கியான்
25 Sept 2026, 8:02 pm

நாங்கள் போரை விரும்பவில்லை அமெரிக்காவின் முடிவில் தான் உள்ளது : மசூத் பெசெஷ்கியான்

டெஹ்ரான்,செப்.25-நாங்கள் போரை விரும்பவில்லை, அதேநேரத்தில் போர் நிறுத்தம் என்பது அமெரிக்கா எடுக்கும் முடிவின்அடிப்படையில் தான் உள்ளது என ஈரான்ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர் இந்தப் போரைத் தொடர நாங்கள்விரும்பவில்லை. இதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமா இல்லையா என்பதை அமெரிக்காதான் முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக செவ்வாய்க்கிழமை ஐ.நாஅவை அவையில் பேசிய டிரம்ப் தனது ஏகாதிபத்தியக் கொள்கைகளை நியாயப்படுத்தியதோடு, கியூபா மற்றும் ஈரானுக்கு எதிரான தனது மிரட்டல்களையும் வெளிப்படுத்தினார். போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை அழிப்போம் என்று மிரட்டல்விடுத்தார்.

இதனைத்தொடர்ந்து புதன்கிழமை ஐ.நா.அவையில் பேசிய ஈரான் ஜனாதிபதி பெசெஷ்கியான், “அமெரிக்க ஜனாதிபதி எங்களைப் பயங்கரவாதிகள் என சொல்லி வருகிறார்,உண்மையில் நாங்கள் தான் பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்கள் எங்களைத் தாக்கினார்கள், ஆனால் நாங்கள் அவர்களிடம் மண்டியிடவில்லை. டிரம்ப் ஒன்றை தெரிந்துகொள்ள வேண்டும். தடைகள், மற்றும் அச்சுறுத்தல்களுக்குமத்தியில் ஈரான்மக்களின் எதிர்ப்பு உணர்வு மேலும் வலுவடையும். உங்கள் அழுத்தத்திற்கு ஈரான் ஒருபோதும்பணியாது என்றுபதிலடி கொடுத்திருந்தார். மேலும் போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு நாங்கள் எப்போதும் தயாராகத்தான் உள்ளோம் எனவும் கூறி இருந்தார். இந்நிலையில் தான் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமா இல்லையா என்பதை அமெரிக்காதான் முடிவு செய்ய வேண்டும் என அறிவித்துள்ளார்.