தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஈரானின் மறைந்த மதத் தலைவர் கமேனியின் இறுதிச்சடங்கு பிரதமர் மோடிக்கு மசூத் பெசெஷ்கியன் அழைப்பு

24 Jun 2026, 8:58 pm
ஈரானின் மறைந்த  மதத் தலைவர் கமேனியின் இறுதிச்சடங்கு பிரதமர் மோடிக்கு மசூத்  பெசெஷ்கியன் அழைப்பு

ஈரானின் மறைந்த மதத் தலைவர் கமேனியின் இறுதிச்சடங்கு பிரதமர் மோடிக்கு மசூத் பெசெஷ்கியன் அழைப்பு

ஈரான் நாட்டின் மறைந்த மதத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் அரசுமுறை இறு திச்சடங்கு மற்றும் அடக்கச் சடங்கு களில் கலந்துகொள்ளுமாறு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் அழைப்பு விடுத்துள்ளார்.

புதுதில்லியில் உள்ள ஈரான் தூதர கம் மூலமாக, இதற்கான அதிகாரப்பூர்வ அழைப்புக் கடிதம் இந்திய வெளியு றவு அமைச்சகத்திடம் (MEA) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

2026 பிப்ரவரி 28 அன்று ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து வான்வழித் தாக்குதல் நடத்த, 86 வயதான அயதுல்லா அலி கமேனியை படுகொலை செய்தன. அதன் பிறகு ஈரானில் தொடர்ந்து நிலவிய போர் மற்றும் பதற்றமான பாதுகாப்புச் சூழல் காரணமாக, கமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் 100 நாட்களுக்கும் மேலாக ஒத்திவைக்கப்பட்டிருந்தன.

தற்போது ஈரான் மற்றும் அமெ ரிக்கா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மறைந்த மதத் தலைவரின் இறுதிச்சடங்கை உரிய அரசுமுறை மரியாதையுடன் நடத்த ஈரான் அரசு தீவிர ஏற்பாடுகளைச் செய்து வருகிறது

ஈரான் அரசின் திட்டத்தின்படி, கமேனி யின் அரசுமுறை இறுதிச்சடங்கு நிகழ்வு கள் வரும் ஜூலை 4 முதல் ஜூலை 9 வரை நடைபெறவுள்ளன. இதற்கிடையே, இந்த இறுதிச்சடங்கு நிகழ்வில்பிரதமர் மோடி நேரில் கலந்துகொள்வாரா என்பது குறித்து இந்திய அரசு தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப் படவில்லை.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.