தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விளையாடு

17 Jun 2026, 9:00 pm
விளையாடு

உலகக்கோப்பை கால்பந்து 2026

அமெரிக்காவில் நடைபெறும் உலகக்கோப்பையில் நாங்கள் ஒடுக்கப்படுகிறோம்

ஈரான் அணி வேதனை

போர் பதற்றம், விசா மறுப்பு, பாதுகாப்பு தொடர் பான சர்ச்சைகளுக்கு இடையே அமெரிக்காவில் (ஈரான் அணியின் ஆட்டங்கள் முழுவதும் அங்கு தான் நடைபெறுவதால்) உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஈரான் அணி விளையாடி வருகிறது.

குரூப் ‘ஜி’ பிரிவில் இடம்பெற்று ள்ள ஈரான் அணி தனது தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராக 2–2 என்ற கணக்கில் டிரா செய்தது. இதன்பிறகு ஈரான் அணியின் தலைமை பயிற்சியாளர் அமீர் காலேனோய், கேப்டன் மெஹ்தி தாரெமி ஆகியோர் தங்களுக்கு (ஈரானுக்கு) இழைக்கப் படும் அநீதிகள் குறித்து சர்வதேச கால்பந்து சம்மேளனம், அமெரிக்க அரசு மீது கடுமையான குற்றச்சாட்டு களை முன்வைத்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், “தங்கள் நாட்டின் தங்கு மிடம், பயண ஏற்பாடுகளில் திட்ட மிட்டு ஏற்படுத்தப்படும் தடைகளால், இந்த உலகக்கோப்பைத் தொடரி லேயே தங்களது அணிதான் மிகவும் ஒடுக்கப்பட்ட அணியாக ஈரான் மாறி யுள்ளது. பாதுகாப்பு, விசா சிக்கல்கள் காரணமாக அமெரிக்காவில் தங்களது பயிற்சி முகாமை அமைக்க முடியாமல், எல்லையைக் கடந்து மெக்சிகோவின் டிஜுவானா நகரில் தங்கியுள்ளோம். அங்கிருந்து போட்டி நடக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு வருவதற்கு மட்டுமே விசா கெடுபிடிகளால் 5 மணி நேரம் வீண டிக்கப்படுகிறது.

குறிப்பாக விசா மறுப்பால் ஈரான் கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் மெஹ்தி தாஜ், முக்கிய மேலாளர்கள், ஊடக அதிகாரிகள் என 11 பேர் அமெரிக்காவிற்குள் நுழைய முடியா மல் மெக்சிகோவிலேயே தவித்து வரு கின்றனர். மிக முக்கியமாக நியூசி லாந்துக்கு எதிரான போட்டி முடிந்த அடுத்த கணமே ஈரான் அணியை உடனடியாக அமெரிக்காவை விட்டு வெளியேறி மீண்டும் மெக்சிகோ விற்கே திரும்பும்படி உத்தரவிடப் பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸில் தங்கி மறுநாள் மதியம் புறப்படத் தங்க ளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணம் என்னவென்றே தெரிய வில்லை. யாரோ பின்னணியில் இருந்து தங்களை முடக்கச் சதி செய்கின்றனர்.

போட்டிக்குப் பின் ஈரான் அணியின ரை நேரில் சென்று சந்தித்த சர்வதேச கால்பந்து சம்மேளன தலைவர் ஜியானி இன்பான்டினோ நாங்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் புரிந்து கொள்வதாகவும், உலகமே உற்று நோக்கும் இந்தத் தொடரில் அவர்கள் மனவலிமையோடு வரலாற்றைப் படைக்க வேண்டும் என்றும் வீரர்க ளைத் தேற்றி மட்டுமே சென்றுள்ளார்” என்று அவர்கள் கூறினர்.

உஸ்பெகிஸ்தான்-கொலம்பியா (குரூப் கே) நேரம் : காலை 7.30 மணி இடம் : மெக்சிகோ சிட்டி

சுவிட்சர்லாந்து - போஸ்னியா (குரூப் பி) நேரம் : நள்ளிரவு 12:30 மணி இடம் : லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்கா

தென் ஆப்பிரிக்கா - செக்குடியரசு (குரூப் ஏ) நேரம் : இரவு 9:30 மணி இடம் : அட்லாண்டா, அமெரிக்கா

கனடா - கத்தார் (குரூப் பி) நேரம் : அதிகாலை 3:30 மணி இடம் : வான்கூவர், கனடா

சேனல் : ஜீ 5 (ஓடிடி), யுனைட்8 (தொலைக்காட்சி)

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.