காமேனியின் இறுதிச்சடங்கிற்காக 3,000 கல்லறைகளா? இந்திய ஊடகங்களுக்கு ஈரான் கடும் கண்டனம்
1 hour before
<p><strong>காமேனியின் இறுதிச்சடங்கிற்காக 3,000 கல்லறைகளா? இந்திய ஊடகங்களுக்கு ஈரான் கடும் கண்டனம்</strong></p><p>புதுதில்லி மறைந்த ஈரானின் உயர்தலை வர் அயதுல்லா அலி காமேனி யின் இறுதிச்சடங்கிற்காக டெஹ்ரானில் 3,000 கல்லறைகள் முன்கூட்டியே தயார் செய்யப்பட்டுள் ளதாக வெளியான செய்திகளை தில்லியில் உள்ள ஈரான் தூதரகம் வன்மையாக மறுத்துள்ளதுடன், அவை முற்றிலும் ஆதாரமற்றவை என்றும் விமர்சித்துள்ளது. ஜெர்மன் நாளிதழான ‘வெல்ட்’ (WELT) வெளியிட்ட செய்தியை அடிப்ப டையாகக் கொண்டு, இந்திய ஊடக மான ‘என்டிடிவி இந்தியா’ (அதா னிக்கு சொந்தமானது) இந்தி மொழி யில் செய்தி ஒன்றை வெளியிட்டிருந் தது.அதில்,”ஈரானிய செம்பிறை சங்கம் மற்றும் தேசிய பேரிடர் மேலா ண்மை அமைப்பு ஆகியவை இணை ந்து ஈரானின் முதல் துணை ஜனாதி பதி முகமது-ரெசா ஆரிப்பிற்கு ரக சியக் கடிதம் ஒன்றை அனுப்பியது. அதில், ஒரு வாரம் நடைபெறும் இந்த பிரம்மாண்ட இறுதிச்சடங்கு நிகழ்வுகளின் போது, கூட்ட நெரிசல் போன்ற மோசமான சூழல் ஏற்பட்டால் 1,500 முதல் 3,000 பேர் வரை உயிரி ழக்க வாய்ப்புள்ளது. இதனால் டெஹ்ரானில் உள்ள ‘பெஹெஷ்ட்-இ ஜஹ்ரா’ மயானத்தில் ஆயிரக்கணக்கான (3000) புதிய கல்லறைகள் தயார் நிலையில் வைக் கப்பட்டுள்ளது” என செய்தி வெளி யிடப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துள்ள ஈரான் தூதரகம், எந்தவொரு ஈரானிய அதிகாரியும் 3,000 கல்லறைகள் தயார் செய்யப் பட்டதாக அறிவிக்கவில்லை. இறு திச்சடங்கு ஊர்வலங்கள் எவ்வித அசம்பாவிதமும் இன்றி, மிக நேர்த்தி யாக நடைபெறுவதை உறுதி செய்யப் பாதுகாப்பு மற்றும் தளவாட ஏற்பாடு களுக்காகப் பல வாரங்கள் திட்டமிடப் பட்டுச் செயலாற்றப்பட்டது. பல மில்லி யன் மக்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வு எவ்வித பெரிய பாதிப்புகளும் இன்றி அமைதியாக நடந்து முடிந் துள்ளது. உண்மைக்குப் புறம்பான, ஆதாரமற்ற செய்திகளை வெளியிடு வது ஊடகங்களின் நம்பகத்தன்மை யைக் கெடுக்கும்” என்று தூதரகம் தெரிவித்துள்ளது.</p>
