தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தொடர் தாக்குதல் நடத்தும் திறன் உள்ளது; பின்வாங்க மாட்டோம் அமெரிக்காவுக்கு ஈரான் சவால்

8 Mar 2026, 3:42 pm
தொடர் தாக்குதல் நடத்தும்  திறன் உள்ளது; பின்வாங்க மாட்டோம் அமெரிக்காவுக்கு ஈரான் சவால்
<p><strong>தொடர் தாக்குதல் நடத்தும் &nbsp;திறன் உள்ளது; பின்வாங்க மாட்டோம் அமெரிக்காவுக்கு ஈரான் சவால்</strong></p> <p>சனியன்று இரவு ஈரான் தலை நகர் டெஹ்ரானில் உள்ள ஷாஹ்ரா னில் உள்ள எண்ணெய் கிடங்கு மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் அந்த எண்ணெய் கிடங்கு தீப்பிடித்தது. அதேபோல டெஹ்ரானின் கோஹாக்கில் உள்ள எண்ணெய் கிடங்கு மற்றும் மேற்கு டெஹ்ரானின் கராஜில் உள்ள எண்ணெய் &nbsp;கிடங்கு ஆகியவை மீதும் தாக்குதல் நடத் &nbsp;தப்பட்டன. இதில் அந்த எண்ணெய் கிடங்குகள் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிகின்றன. அதே போல் அல்போர்ஸ் மாகாணத்தில் உள்ள எண்ணெய் கிடங்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட் டது. எண்ணெய் கிடங்குகள் மீதான &nbsp;தாக்குதலில் 4 ஊழியர்கள் பலியா னார்கள். இந்த தாக்குதலுக்குப் பின் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் &nbsp;அராக்சி கூறுகையில்,&rdquo;கடல் நீரை குடி நீராக்கும் ஆலை மீது அமெரிக்கா தாக்கு தல் நடத்தியதன் மூலம் ஒரு அப்பட்டமான, &nbsp;அவநம்பிக் கையான குற்றத்தை செய்து &nbsp;உள்ளது. இந்த தாக்குதலால் 30 கிரா மங்களில் குடிநீர் விநியோகம் பாதிக்கப் பட்டு உள்ளது. ஈரானின் உள்கட்டமைப்புகளை தாக்குவது என்பது கடுமையான விளைவு களை ஏற்படுத்தும். இந்த முன் உதா ரணத்தை அமெரிக்கா தான் செய்துள்ளது. &nbsp;நாங்கள் அல்ல&rdquo; என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கிடையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக குறைந்தது 6 மாதங்களுக்குத் தீவிரமான போரைத் நடத்தும் திறன் ஈரானுக்கு உள்ளது. பின்வாங்க மாட்டோம் என அந்நாட்டின் புரட்சிகர பாதுகாப்புப் படை தெரி வித்துள்ளது. ஞாயிறன்று ஈரான் மீது வலு வான தாக்குதல் நடத்துவோம் என அமெ ரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கையை தொடர்ந்து ஈரான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.