தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அமெரிக்காவின் எஃப்-35 விமானத்தை தாக்கிய ஈரான்

20 Mar 2026, 2:55 pm
அமெரிக்காவின் எஃப்-35 விமானத்தை தாக்கிய ஈரான்
<p><strong>அமெரிக்காவின் எஃப்-35 விமானத்தை தாக்கிய ஈரான்</strong></p> <p>டெஹ்ரான், மார்ச் 20 - அமெரிக்க ராணுவ வரலாற்றில் இதுவரை யாரும் சாதிக்காத ஒன்றை ஈரான் சாதித்துள்ளது. உலகின் மிகவும் நவீனமான போர் விமானமாகக் கருதப்படும் எஃப்-35 லைட்னிங் II விமானத்தை ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) ஏவுகணை மூலம் தாக்கியுள்ளது. &nbsp;அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் இதை &ldquo;வான்வெளி ஆதிக்கத்தின் முதுகெலும்பு&rdquo; என்று கருதுகின்றன. நடந்தது என்ன? இரவு 2:50 மணி அளவில் ஈரான் வான்வெளி யில் பரந்த அமெரிக்க ராணுவத்தின் &nbsp;எஃப்-35 விமானத்தை ஈரான் தாக்கியதாகவும் &ldquo;விமானம் கடுமையாக சேதமடைந்துள்ளது, அது கீழே விழுந்திருக்கும் சாத்தியம் அதிகம்&rdquo; என்றும் அறிவித்தது. &nbsp;இச்சூழலில் அமெரிக்க ராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் கேப்டன் டிம் ஹாக்கின்ஸ், &nbsp;எஃப்-35 விமானம் அவசரமாக மேற்கு ஆசியா வில் தரையிறக்கப்பட்டது எனவும் விமானி பாது காப்பாக இருக்கிறார் என்றும் கூறியுள்ளார். அந்த &nbsp;விமானம் முழுமையாக அழியவில்லை என்றாலும், &nbsp;அந்த விமானம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது என்பது உறுதியாகியுள்ளது. எஃப்-35 முக்கியம் என்ன? உலகின் மிகப்பெரிய ஆயுத உற்பத்தி நிறுவன மான லாக்கீட் மார்ட்டின் நிறுவனம் தான் இந்த எஃப்-35 லைட்னிங் II என்ற &nbsp;ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை உருவாக்கியது. &nbsp;இந்த ஒரு விமானத்தின் விலை ரூ.800 கோடிக்கும் (100 மில்லியன் டாலருக்கும்) அதிகம். &nbsp;இந்த விமானம் சாதாரண ரேடாரில் தெரியாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. &nbsp;ரேடார் அலைகளை உறிஞ்சும் சிறப்பு பொருள் மற்றும் தனித்துவமான வடிவமைப்பு காரணமாக சக்தி வாய்ந்த ரேடாரில் சிக்காது. அதிக வான்வெளி கண்காணிப்பு அமைப்புகள் இருந்தால் கூட &nbsp;அதனால் கண்டறிய முடியாத வகையில் பயணித்து &nbsp;தாக்கும் திறன் இதற்கு உண்டு. எதிரி ரேடாரை இயங்காமல் செய்யும் மின்னணு &nbsp;திறனும் உண்டு. இதுவரை உருவாக்கப்பட்டதிலேயே &nbsp;மிகவும் விலையுயர்ந்த மிகச்சிறப்பான போர் விமானம் இது தான் என அமெரிக்காவும் அதன் அடிபொடிகளும் கூவி வரும் நிலையில்தான் ஈரான் அந்த விமானத்தை வீழ்த்தியுள்ளது. &nbsp;இந்தத் தாக்குதல் அமெரிக்க ராணுவம், அதன் ராணுவ கூட்டாளிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இது விமானத்தின் மீதான தாக்குதலாக மட்டும் அல்ல மேற்கத்திய நாடுகளின் போர் திறன் மீதான நேரடி தாக்குதல். இத்தாக்குதலுக்கு பின்னால் சீனா, ரஷ்யாவின் தொழில்நுட்ப உதவிகள் இருக்கலாம் என &nbsp;ராணுவ வல்லுனர்கள் கூறுகிறார்கள்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.