தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விளையாட்டு

12 May 2026, 10:34 pm
விளையாட்டு

சென்னை - 42.7%

19ஆவது சீசன் ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி யுள்ளது. இதனால் பிளே-ஆப் சுற்றுக் கான கிளைமேக்ஸ் பரபரப்பு தொடங்கியுள்ளது. 2022இல் ஐபிஎல் 10 அணிகள் கொண்ட தொடராக மாறியதிலிருந்து, பிளே-ஆப் தகுதிக்கு பொதுவாக 16 புள்ளிகள் தேவைப்படுகின்றன. அதன்படி நடப்பாண்டு சீசனில் குஜராத், பெங்களூரு, ஹைதராபாத் (முதல் 3 இடங்களில் உள்ள அணிகள்) ஆகிய அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற 80% வாய்ப்பு உள்ளது. மற்ற அணிகளை கணிப்பதில் சிக்கல் உள்ளது. திங்களன்று தில்லி அணியிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பஞ்சாப் (4ஆவது இடம்) 11 போட்டி களில் 13 புள்ளிகளுடன் உள்ளது. சென்னை, ராஜஸ்தான் (தலா 12 புள்ளிகள், 11 போட்டிகள்) முறையே ஐந்து மற்றும் ஆறாவது இடங்களில் உள்ளன. அடுத்த இடங்களில் உள்ள தில்லி (12 போட்டிகளில் 10 புள்ளி கள்), கொல்கத்தா (10 போட்டிகளில் 9 புள்ளிகள்) அணிகளுக்கும் இன்னும் பிளே ஆப் வாய்ப்பு உள்ளது. இதனால் வெற்றி கணிப்புகள், முன்னோட்டம் மூலமாக அணிகளின் பிளே ஆப் தொடர்பான வாய்ப்பு களின் கணிப்புகள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன. அணிகளும், பிளே ஆப் வாய்ப்பு சதவீதமும்... குஜராத், பெங்களூரு, ஹைதராபாத் - 80% பஞ்சாப் - 62.5% சென்னை - 42.7% ராஜஸ்தான்- 41.8% கொல்கத்தா - 11.6% தில்லி - 1.2% கடைசி இடங்களில் உள்ள மும்பை, லக்னோ தொடரிலிருந்து வெளியேறிவிட்டன. (குறிப்பு : இந்த பிளே ஆப் வாய்ப்பு சதவீதங்கள் ஆட்டம் மழையால் பாதிக்கப்படாமல், ஒவ்வொரு அணிக்கும் வெற்றிநடை இருந்தால் மட்டுமே சாதகமாக இருக்கும். இல்லையென்றால் சிக்கல் தான்)

தாய்மார்களுக்கு மறுவாய்ப்பு அளிக்காமல் இந்தியா தடுக்கிறது

சாக்சி மாலிக் குற்றச்சாட்டு

தாய்மையான பின்பு ஓய்வி லிருந்து மீண்டும் களத்தி ற்குத் திரும்ப இந்திய மல்யுத்த நட்சத்தி ரம் வினேஷ் போகத் பல்வேறு முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால் பாஜக தலைவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய மல்யுத்த சம்மேளனம் புதிய விதிகளை உருவாக்கி வினேஷ் போகத்திற்கு தடை மூலம் தொடர்ந்து நெருக்கடி அளித்து வருகிறது. இந்நிலையில், வினேஷ் போகத்திற்கு ஆதரவாக ஒலிம்பிக் பதக்க மங்கை சாக்சி மாலிக் குரல் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக தனது முகநூலில் அவர் கூறுகையில், “வினேஷ் இப்போது ஒரு அரசியல் கட்சியின் எம்எல்ஏ என்பதால் அவரிடம் நான் கருத்து சொல்ல வேண்டுமா என்று கடந்த இரண்டு மூன்று நாட்களாக யோசித்துக் கொண்டிருந்தேன். எனக்கு எந்த அரசியல் கட்சியுடனும் தொடர் பில்லை. ஆனால், ஒரு பெண் விளை யாட்டு வீரர் தாயான பிறகும் நாட்டிற்கா கப் பதக்கங்களை வெல்லவும், விளையாட்டைத் தொடரவும் பல நாடுகள் விதிகளில் தளர்வுகளை வழங்கியிருப்பதற்கு என்னால் பல உதா ரணங்களைக் கூற முடியும். ஆனால், நமது மல்யுத்த கூட்டமைப்பு வினேஷ் மீண்டும் களத்திற்குத் திரும்புவதைத் தடுக்க புதிய விதிகளைக் கொண்டு வந்துள்ளது. பிரதமர் மோடி, விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மற்றும் மல்யுத்த கூட்டமைப்பு ஆகியோரிடம் நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால், வினேஷுக்குத் தகுதிச் சோதனையை நடத்துங்கள். அவரும் நாட்டிற்காகப் பதக்கங்களை வென்று, ஒரு தாயான பிறகும் பதக்கங்கள் வெல்ல முடியும் என்பதற்குப் பெண்களுக்கு ஒரு உதாரணமாகத் திகழட்டும்” என்று அவர் மேலும் கூறினார்.

ஐபிஎல் : இன்றைய ஆட்டம்

பெங்களூரு - கொல்கத்தா

இடம் : ராய்ப்பூர், சத்தீஸ்கர் / நேரம் : இரவு 7:30 மணி

சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார் (ஓடிடி)

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.