விளையாட்டு
30 May 2026, 9:26 pm

ஐபிஎல் கோப்பை யாருக்கு? பெங்களூரு - குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

19ஆவது சீசன் ஐபிஎல் தொடர் மார்ச் 28 அன்று தொடங்கியது. சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, லக்னோ, ஹைதராபாத், ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத், தில்லி என 10 அணிகள் இந்த தொடரில் பங்கேற்றன. லீக் ஆட்டங்க ளின் முடிவில் புள்ளிபட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்த பெங்களூரு, குஜராத், ராஜஸ்தான், ஹைதராபாத் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின. மே 26இல் நடைபெற்ற பிளே ஆப் சுற்றின் ‘குவாலிபயர் 1’ ஆட்டத்தில் பெங்களூரு அணி குஜராத் அணியை புரட்டியெடுத்து, நேரடியாக இறுதிக்கு முன்னேறியது. இது பிரம்மாண்ட அதிரடி வெற்றியாகும். தொடர்ந்து மே 27ஆம் தேதி நடைபெற்ற எலிமினேட்டர் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி ஹைதராபாத் அணியை வீழ்த்தி ‘குவாலிபயர் 2’ சுற்றுக்கு முன்னேறியது. ‘குவாலிபயர் 1’ ஆட்டத்தில் தோல்வி கண்ட குஜராத் அணியும், எலிமி னேட்டர் ஆட்டத்தில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணியும் மே 29 அன்று நடைபெற்ற ‘குவாலிபயர் 2’ ஆட்டத்தில் மோதின. இந்த ஆட்டத்தில் குஜராத் அணி அபார வெற்றி பெற்று, இறுதிக்கு முன்னேறியது. இந்நிலையில், ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டம் ஞாயிறன்று நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் (2025) பெங்களூரு அணியும், முன்னாள் சாம்பியனான (2022) குஜராத் அணியும் மோதுகின்றன. குஜராத் மாநிலம் அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டம் இரவு 7:30 மணிக்கு நடைபெறுகிறது.

யாருக்கு சாதகம்?

பெங்களூரு - குஜராத் இரு அணிகளுமே சரிசம பலத்தில் உள்ளது. இதனால் யாருக்கு ஐபிஎல் கோப்பை என உறுதியாக கருத்து கூற முடியாது. ஆனால் குஜராத் அணி ‘குவாலிபயர் 1இல்’ பெங்களூரு அணியிடம் தோற்று, விடாப்படியாக கடின உழைப்புடன் ஓய்வின்றி விளையாடி இறுதிக்கு முன்னேறியுள்ளது. ஆனால் 4 நாட்கள் எந்த போட்டியிலும் விளையாடாமல் பெங்களூரு அணி இறுதிப் போட்டியில் விளையாட உள்ளது. இதனால் குஜராத் அணியிடம் பெங்களூரு அணி சற்று திணற வாய்ப்புள்ளது. எனினும் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் வலுவான அசுர பலத்தில் இருக்கும் பெங்களூரு அணி ‘குவாலிபயர் 1’ ஆட்டத்தில் போன்று அதிரடியைக் காட்டினால் குஜராத் அணிக்கும் சிக்கல் தான். இதனால் ஆட்டத்தின் நகர்வை வைத்தே ஐபிஎல் கோப்பை யாருக்கு என்பதை கணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரு - குஜராத் நேரம் : இரவு 7:30 மணி இடம் : அகமதாபாத், குஜராத் சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார் (ஓடிடி)

பரிசுத்தொகை

சாம்பியன் : ரூ. 20 கோடி (கோப்பையுடன்) இரண்டாமிடம் : ரூ.12.5 கோடி 3ஆம் இடம் (குவாலிபையர் - 2 சுற்று தோல்வி) : ரூ.7 கோடி 4ஆம் இடம் (எலிமினேட்டர் சுற்று தோல்வி) : ரூ.6.5 கோடி

தனிநபர் விருதுகள் :

ஆரஞ்சு தொப்பி (அதிக ரன்) : ரூ.10 லட்சம் ஊதா நிறத் தொப்பி (அதிக விக்கெட்டுகள்) : ரூ.10 லட்சம் மதிப்புமிக்க வீரர் : ரூ.10 லட்சம் சிறந்த வளரும் வீரர் : ரூ.10 லட்சம் சிறந்த கேட்ச் : ரூ.10 லட்சம் அதிக சிக்ஸர்கள் : ரூ.10 லட்சம்