வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி கோயாலி ஐஓசிஎல் சுத்திகரிப்பு ஆலை
20 May 2026, 9:43 pm

வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி கோயாலி ஐஓசிஎல் சுத்திகரிப்பு ஆலை ஒப்பந்தத் தொழிலாளர்களின் அதிரடி முற்றுகை

ஊழல் மேகா நிறுவனத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்த தொழிலாளர்கள்!

வேலைநிறுத்தம் 26

வதோதரா, மே 20- ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து, குஜராத் மாநிலத்தின் முதன்மை தொழில் மண்டலமான வதோதராவும் கார்ப்பரேட் சுரண்டலுக்கு எதிரான தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குரலால் அதிர்கிறது. வதோதரா அருகே கோயாலி யில் (Koyali) அமைந்துள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) குஜராத் சுத்திகரிப்பு ஆலையில், விரி வாக்கப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஒப்பந்தத் தொழிலாளர்கள் தங்களின் அடிப்படை வேலை நேர உரிமைக்காக நடத்திய அதிரடி வேலைநிறுத்தப் போராட்டம், கார்ப்பரேட் நிறுவனங்களின் அதீத லாப வேட்டையை யும் அரசியல் கூட்டுச் சூழ்ச்சிகளையும் ஒரே நேரத்தில் அம்பலப்படுத்தியுள்ளது. இத்தொடரின் 26-ஆவது பகுதியில், 2026 மார்ச் மத்தியில் நிகழ்ந்த இந்தத் தீரமிக்க போராட்டத்தின் பின்னணியை விரிவாகக் காண்போம்.

குஜராத் மாநிலம் வதோதரா அருகே கோயாலியில் 1966-ஆம் ஆண்டு தொடங்கப் பட்ட ஐஓசிஎல் குஜராத் சுத்திகரிப்பு ஆலை, இந்தியாவின் பழமையான மற்றும் மிகப்பெரிய பொதுத்துறை எண் ணெய் சுத்திகரிப்பு வளாகங்களில் ஒன்றா கும். 1970-களுக்குப் பிறகு பொதுத்துறை களில் நுழைந்த ஒப்பந்தத் தொழிலாளர் முறையும், 1980 மற்றும் 1990-களின் நவ தாராளவாதப் பொருளாதாரக் கொள்கை களும் இந்த ஆலையின் உழைப்புச் சுரண்டல் கட்டமைப்பை இன்று விஸ்வரூ பம் எடுக்க வைத்துள்ளன. நாடு முழுவதும் ஐஓசிஎல் நிறுவனத்தில் சுமார் 29,936 நிரந்தரப் பணியாளர்கள் உள்ள நிலையில், இந்த வதோதரா பிரிவில் வெறும் 1,000 முதல் 1,500 நிரந்தர ஊழியர்களே உள்ள னர். ஆனால், ஆலையின் பிரதான பணி களும், தற்போது நடைபெறும் பல்லாயிரம் கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு விரி வாக்கப் பணிகளும் முற்றிலும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் உழைப்பிலேயே நடக்கின்றன.

தேர்தல் பத்திர ஊழலும் - மேகா இன்ஜினியரிங் (MEIL) அராஜகமும்

இந்த ஆலையின் பெட்ரோகெமிக்கல் மற்றும் லூப் ஒருங்கிணைப்பு விரிவாக்க திட்டமான ‘லுபெக்’ (LuPech - J18) பணி களின் முதன்மை ஒப்பந்ததாரராக ‘மேகா இன்ஜினியரிங் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்ச ர்ஸ் லிமிடெட்’ (MEIL) நிறுவனம் செயல் பட்டு வருகிறது. வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை சோதனை களுக்குப் பிறகு, தேர்தல் பத்திரங்கள் (Electoral Bonds) மூலமாக சுமார் 966 கோடி ரூபாயும் (கூட்டு நிறுவனங்களுடன் சேர்த்து 1,186 முதல் 1,232 கோடி ரூபாய் வரை) நிதி வழங்கி, நாட்டின் இரண்டாவது பெரிய தேர்தல் பத்திரக் கொள்முதல் கார்ப்பரேட்டாக இந்த மேகா நிறுவனம் உரு வெடுத்தது. இதில் 585 கோடி ரூபாயை மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு லஞ்சமாக வாரி இறைத்ததன் விளைவாக எல் அண்ட் டி (L&T) போன்ற முன்னணி நிறுவனங்களை விதிகளுக்குப் புறம்பாகத் தகுதி நீக்கம் செய்துவிட்டு, மும்பை தானே - போரிவலி இரட்டைச் சுரங்கப் பாதை திட்டம் (14,400 கோடி ரூபாய்) மற்றும் சோஜிலா சுரங்கப் பாதை திட்டம் உள்ளிட்ட பிரம்மாண்ட அரசுத் திட்டங்கள் மேகா நிறுவனத்திற்குத் தாரைவார்க்கப்பட்டன. இத்தகைய கார்ப்பரேட்-அரசியல் கூட்டுச் சூழ்ச்சியின் நீட்சியாகவே, ஐஓசிஎல் கோயாலி ஆலையின் இந்த மாபெரும் விரிவாக்கத் திட்ட ஒப்பந்தமும் மேகா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

8 மணி நேர வேலைக்காக வெடித்த ‘யெல்லோ ஹெல்மெட்’ கிளர்ச்சி

டிகளை லஞ்சமாகக் கொட்டிய மேகா நிறுவனம், தங்களின் திட்டப் பணிகளில் இரவு பகலாக உழைக்கும் ஒப்பந்தத் தொழி லாளர்களின் உழைப்பை மிகக் கொடூர மாக உறிஞ்சத் தொடங்கியது. இந்நிலை யில் தான், மார்ச் 13, 2026 அன்று, கோயாலி ஆலையின் பிரதான விரிவாக்கப் பிரிவு களான இண்ட்மேக்ஸ் ஆர்எஃப்சிசி (RFCC), புரோபிலீன் மீட்புப் பிரிவு (PRU) மற்றும் பாலிபுரோபிலீன் பிரிவு (PPU) ஆகிய வற்றில் பணியாற்றி வந்த ஆயிரக்கணக் கான மேகா ஒப்பந்தத் தொழிலாளர்கள் தங் களின் பணிகளை அதிரடியாக முடக்கி, ஆலை வாயில்களில் திரண்டு மாபெரும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்களைத் தினசரி 12 மணி நேரம் வரை கட்டாயப்படுத்தி வேலை வாங்கிக் கொண்டு, எவ்வித கூடுதல் நேர இரட்டிப்பு ஊதியமுமின்றி உழைப்பைச் சுரண்டுவதற்கு எதிராகவே இப்போராட்டம் வெடித்தது. சட்டம் அறிவித்துள்ள “8 மணி நேர வேலை” என்ற அடிப்படை உரிமை யை நிலைநாட்டக் கோரி, தொழிலாளர்கள் தங்களின் பாதுகாப்புத் தொப்பிகளை (Yellow Helmet) ஏந்தி சமூக ஊடகங் களில் வெளியிட்ட போராட்ட வீடியோக்கள் கார்ப்பரேட் நிறுவனத்தின் போலிப் பாது காப்புப் பெருமைகளைத் தரைமட்டமாக்கின.

போலிப் பாதுகாப்பு பெருமிதமும் - மறைக்கப்படும் மரணங்களும்

ஆலையில் எவ்வித விபத்துகளும் இன்றி கோடிக்கணக்கான “பாதுகாப்பான மனித நேரங்களை” (Safe Man-Hours) எட்டியுள்ளதாக மேகா நிறுவனம் விளம்பரப் பலகைகளைத் தொங்கவிட்டுள்ள போதி லும், அதன் உண்மையான முகம் ரத்தக் கறை படிந்தது என்பதை தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன. ஜம்மு-காஷ்மீரின் சோனாமார்க் சுரங்கப் பாதையில் மேகா நிறுவனத்தின் அலட்சியத்தால் பலியான பாலகிருஷ்ணா, சந்தீப் சிங் ஆகிய தொழி லாளர்களின் மரணமும், கேரளா என்எச்-66 நெடுஞ்சாலைப் பணியில் மண் சரிந்து பலியான 18 வயது இளம் தொழிலாளி மொதாலெப் மிர், மனோஜ் திக்கா ஆகியோரின் மரணங்களும், உத்தரகண்ட் ரிஷிகேஷ் இரயில்வே திட்ட சுரங்க இடிபாடு களில் நிகழ்ந்த மரணங்களும் மேகா கார்ப்ப ரேட்டின் லாப வெறிக்கு உழைப்பாளர்கள் பலியாவதை உலகிற்கு நிரூபித்துள்ளன.

கார்ப்பரேட் ஊடகங்கள் பொதுத்துறை ஆலைத் தொழிலாளர்களின் இந்த மாபெரும் போராட்டங்களை இருட்டடிப்பு செய்த போதிலும், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகக் கட்டமைப்புகள் வழியாகத் தன்னிச்சை யாக ஒன்றிணைந்து, இந்தியாவின் மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு வளாகத்தை முடக்கிய கோயாலி ஆலை தொழிலாளர்களின் இந்தப் போர்க்குணம், தங்களின் பல்லாயிரம் கோடி ஊழல் பணத்தின் பலத்தால் தொழிலாளர்களை அடிமைகளாக நடத்தத் துடிக்கும் மேகா கார்ப்பரேட் நிறுவனத்திற்கும், அதன் பின்னணியில் இருக்கும் ஆளும் வர்க்கத்திற்கும் தொழிலாளர் வர்க்கம் விடுத்துள்ள இடிமுழக்க எச்சரிக்கையாகும்.

லெப்ட் வியூஸ்