தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

24 Feb 2026, 3:55 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

சிறுமி, பாட்டி கொலை

பொள்ளாச்சி, பிப்.24- பொள்ளாச்சி கொண் டேகவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பூபதி.  இவருக்கு 17 மற்றும் 16  வயதில் இரண்டு மகள்கள்  உள்ளனர். இவர்களுடன் பூப தியின் தாய் மயிலாத்தாளும் வசித்து வந்தார். இந்நிலை யில், நெகமம் கப்பளங்கரை யைச் சேர்ந்த அபிஷேக் (24)  என்பவர் பூபதியின் 16 வயது மகளை காதலிப்பதாகக் கூறி திருமணம் செய்ய வற்புறுத்தி வந்துள்ளார். வீட்டார் மறுக்கவே, ஆத் திரமடைந்த அபிஷேக், தான்  மறைத்து வைத்திருந்த கத்தி யால் சிறுமி மற்றும் பாட்டியை குத்தி கொலை  செய்தார். இதனையடுத்து, விஷம் அருந்திய அபிஷேக், காவல் நிலையைத்தில் சர ணடைந்தார். இச்சம்பவம் பொள்ளச்சி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்ப டுத்தியுள்ளது.

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டிய விசாரணை

கோவை, பிப்.24- கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்ப டுத்திய கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன் கொடுமை வழக்கு தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தப்பட்டனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில், கோவை விமான நிலையம் பின்புறம் தனது ஆண் நண்பருடன் பேசி கொண்டு இருந்த கல்லூரி மாணவியை மூவர் வழிமறித்து கும் பல் பாலியல் வன்கொடுமை செய்தனர். மேலும், மாணவியின் ஆண் நண்பர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திவிட்டு அவர்கள் தப்பிச் சென்றனர். தமிழகம் முழுவ தும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாகத் தனிப்படை  அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை  நடத்தப்பட்டது. இதில் முக்கியக் குற்றவாளிக ளான கருப்பசாமி, காளீஸ்வரன் மற்றும்  தவசி ஆகிய மூவரையும் காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். இந்த  வழக்கு தொடர்பான விசாரணை கோவை  மகிளா நீதிமன்றத்தில் தொடர்ந்து நடை பெற்று வரும் நிலையில், இதுவரை 50-க்கும்  மேற்பட்டோரிடம் சாட்சி விசாரணை முழுமை யாக நிறைவடைந்துள்ளது. இந்தச் சூழலில், செவ்வாயன்று மதியம் இந்த வழக்கின் முக்கிய  கட்டமாக அரசு தரப்பு வாதங்கள் விரிவாக  முன்வைக்கப்பட உள்ளன. இதற்காக சிறை யில் அடைக்கப்பட்டிருந்த கருப்பசாமி, காளீஸ்வரன் மற்றும் தவசி ஆகிய மூவரும்  காவல்துறையினரின் பலத்த பாதுகாப்பு டன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட னர். அரசு தரப்பு வாதங்கள் முடிந்த பிறகு,  எதிர் தரப்பு வாதங்களும் கேட்டறியப்பட்டன.  இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்தவு டன், இந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பு வழங் கும் தேதியை விரைவில் அறிவிப்பார் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களி டையே எழுந்துள்ளது.

‘உறுப்பினர் கல்வித்திட்டம்’

உதகை, பிப்.24- நூந்தளா அருகே உள்ள கொல்லிமலை கிரா மத்தில் கூட்டுறவு சங்கத்தின் சார்பில், உறுப்பினர் கல்வித்திட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பில், நூந்தளா பகுதியில் அமைந்துள்ள ரங்கநாதர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும்  கொல்லிமலை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் ஆகியவற்றின் செயல் எல்லையில் உள்ள கொல்லிமலை கிராமத்தில் ‘உறுப்பினர் கல்வித்திட் டம்’ நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்ச் சிக்கு துணைப்பதிவாளர் அய்யனார் தலைமை வகித்தார். மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் செய லாட்சியர் கௌரிசங்கர் முன்னிலை வகித்தார். அப் போது, அய்யனார் பேசுகையில், கிராமப் பகுதிகளில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு வட்டி யில்லாக் கடன்களை விநியோகிக்கும் மிகப்பெரிய பணியினை கூட்டுறவுத்துறை செய்து வருகிறது. இக்கடனானது உறுப்பினர்களுக்கு மட்டுமே வட்டி யில்லாமல் வழங்கப்படுகிறது எனவும், உறுப்பி னர்கள் முறையாக தவணை காலத்திற்குள் கடனை திருப்பி செலுத்தும் போது அவர்களுக்கான வட்டி மானியமான 7 சதவிகிதத்தில் 3 சதவிகிதம் ஒன்றிய அரசும், 4 சதவிகிதம் மாநில அரசும் ஏற்று, அதனை கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கும், என்றார். பால் கூட்டுறவு சங்கங்களின் பல்வேறு விதமான பணிகள் குறித்து கூட்டுறவு சார்பதிவாளர் (பால்வளம்) ஆனந்த் எடுத்துரைத்தார். இந்நிகழ்வில், கொல்லிமலை ஊர்  தலைவர் வேணுகோபால், பால் கூட்டுறவு சங்க செயலாளர் சிவாயன், சங்க பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆட்சியர் அலுவலகத்தில் குரங்குகள் நடமாட்டம்

சேலம், பிப்.24- சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுற்றித்  திரியும் குரங்குகளை பிடித்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஐந்து தளங்களைக் கொண்ட சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், முதல் மற்றும் இரண்டாம்  தளங்களில் திங்களன்று மனுநாள் என்பதால் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும். குழந்தைகள் முதல்  வயதானவர்கள் வரை அதிக எண்ணிக்கையில் மனுக் களை அதிகாரிகளை சந்தித்து வழங்கி வரும் நிலை யில், ஆட்சியர் அலுவலகத்தில் குரங்குகளின் நட மாட்டம் அதிகரித்துள்ளது. முதல் மற்றும் இரண்டாம் தளங்களில் குரங்குகள் அதிகம் வருவதால் மனு கொடுக்க வரும் முதியவர்கள், குழந்தைகள் என பல ரும் அச்சமடைந்துள்ளனர். மனு அளிக்க வருபவர்க ளின் பைகளை பிடுங்குவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பலமுறை புகார்  தெரிவித்தும் குரங்குகளை பிடிக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. எனவே,  ஆட்சியர் அலுவலகத்தில் சுற்றித்திரியும் குரங்குகளை  பிடித்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய  வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

அதிகாரிகளை கண்டித்து  தம்பதி தற்கொலை முயற்சி

தருமபுரி, பிப்.24- நிலத்தை அளவீடு செய்து கொடுக்காத அதிகாரி களை கண்டித்து, தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் வயது முதிர்ந்த தம்பதி, தீக்குளிக்க முயன்றதால் பர பரப்பு ஏற்பட்டது. தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டை அடுத்த ரெட்டியூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி கிருஷ்ண மூர்த்தி (64). இவரது மனைவி பழனியம்மாள் (45). இத்தம்பதிக்கு அதே பகுதியில் சொந்தமாக சிறிதளவு நிலம் உள்ளது. இந்த நிலத்தை அதேபகுதியை சேர்ந்த  முருகன் என்பவர், அரை சென்ட் அளவிற்கு அபக ரித்து விட்டதாக கிருஷ்ணமூர்த்தி குற்றஞ்சாட்டினார். மேலும், சம்மந்தபட்ட நிலத்தை முழுமையாக அளவீடு செய்து கொடுக்க வேண்டும் என, ஆன்லைன் மூலம் பணம் செலுத்தியுள்ளார். ஆனால், நில அளவைத் துறை அதிகாரிகள் நிலத்தை அளவீடு செய்து கொடுக் காமல், காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதனிடையே, கிருஷ்ணமூர்த்தி மற்றும் முருகன் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், மன உளைச்சல் அடைந்த கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது மனைவி பழனியம்மாள் ஆகிய இருவரும், திங்களன்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்திற்கு வந்தனர். அப்போது, தாங்கள் மறைத்து வைத்திருந்த மண்ணெணையை திடீரென உடல் மீது ஊற்றிக்கொண்டு, தற்கொலைக்கு முயன்றனர். இதை யடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், இருவர் மீதும் தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். மேலும், புகார் குறித்து விசாரிக்க தருமபுரி நகர காவல்  நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இச்சம்பவத் தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

30 டன் யூரியா, கோதுமை பறிமுதல்

ஈரோடு, பிப்.24- நம்பியூர் அருகே சட்டவிரோதமாக பதுக்கி வைக் கப்பட்டிருந்த 30 டன் யூரியா, கோதுமை பறிமுதல் செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டம், நம்பியூரை அடுத்த காமராஜ் நகர் பகுதியிலுள்ள தனியார் கிடங்கில், ஒன்றிய அரசின் மானிய விலை யூரியாவை பதுக்கி வைத்து, வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக குற்றப் புலனாய்வுத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், குற்றப் புலனாய்வுத்துறை தலைமை காவலர்கள் சக்திவேல், சரவணன் உள்ளிட்டோர், சம் பந்தப்பட்ட கிடங்கில் திங்களன்று திடீர் சோதனை மேற் கொண்டனர். அங்கு 540 மூட்டை யூரியா, 60 மூட்டை கோதுமை என மொத்தம் 30 டன் பொருட்கள் பதுக்கி  வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து நம்பியூர் வட்டார வேளாண்மைத் துறை உதவி  அலுவலர் உமா மகேஸ்வரிக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. சம்பவ இடத்திற்கு அவருடன் வந்த உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு காவல் ஆய்வாளர் ராஜ்குமார், உதவி ஆய்வாளர் மேனகா உள்ளிட் டோர், பொருட்களை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாழடைந்து வரும் அரசு மருத்துவமனை கட்டிடங்கள்!

உதகை, பிப்.24- உதகையில் பாழடைந்து வரும் மருத்துவமனை கட்டிடங்களை சீர மைத்து, வேறு துறைக்கு பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந் துள்ளது. நீலகிரி மாவட்டம், உதகை நகரில் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனை செயல்பட்டு வந்தது. கடந்த 2020 ஆம் ஆண்டு உதகையில் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனை அமைக் கப்படும் என அரசு அறிவித்ததை தொடர்ந்து, இம்மருத்துவமனை மருத் துவக்கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்ந்தது. தொடர்ந்து உதகை பிங்கர்போஸ்ட் அருகே ரூ.499 கோடி யில் அரசு மருத்துவக்கல்லூரியும், மருத் துவமனைக்கு புதிய கட்டிடங்களும் கட்டப்பட்டன. மருத்துவமனையை கடந்த ஏப்ரல் மாதம் உதகைக்கு வந்தி ருந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து பழைய  மருத்துவமனை கட்டிடத்திலிருந்து அனைத்து பிாிவுகளும் புதிய மருத்து வமனை கட்டிடத்திற்கு மாற்றப்பட்டன. குழந்தைகள் பிரிவு மட்டும் பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. மற்ற அனைத்து கட்டிடங்களும் மூடப் பட்டுள்ளன. இந்நிலையில், சுமார் 10 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட் டுள்ள நிலையில், புறநோயாளிகள் பிரிவு, சித்தா, ஆண்கள் உள்நோயாளி கள் பிரிவு உள்ளிட்டவைகள் மூடப்பட் டுள்ளன. இக்கட்டிடங்களை சுற்றிலும் புதர் மண்டி காட்சியளிக்கிறது. மேலும், கட்டிடங்களின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து காட்சியளிக்கின்றன. இத னால் சமூக விரோத செயல்கள் அரங் கேறும் இடமாக மாறி வருகின்றன. எனவே, பயன்படுத்தாமல் உள்ள இக் கட்டிடங்களை சீரமைத்து, வேறு துறை களுக்கு ஒதுக்கி பயன்படுத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கிலோ 2 ரூபாய்: முட்டைக்கோஸ் விவசாயிகள் கவலை

ஈரோடு, பிப்.24- தாளவாடியில் முட்டைக்கோஸ் கிலோ 2  ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுவ தால், விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி மலைக்கிராமங்களில் 400  ஏக்கருக்கு மேல் முட்டைக்கோஸ் சாகுபடி செய்யப்படுகிறது. தாளவாடி மற்றும் அதன் அருகேயுள்ள கர்நாடகா மாநிலத்திலும், நடப்பாண்டு அதிகளவில் முட்டைக்கோஸ் சாகுபடி செய்யப்பட்டுள்ளதால், மேட்டுப் பாளையம், திருப்பூர் உள்ளிட்ட மார்க்கெட்டு களில் வழக்கத்தைவிட இரண்டு மடங்கு வரத்து அதிகரித்துள்ளது. இதனால், தாள வாடி பகுதியில் விவசாயிகள் சாகுபடி செய்த  முட்டைக்கோஸை வாங்க வியாபாரிகள் ஆர் வம் காட்டுவதில்லை. கடந்த வாரம் கிலோ ரூ.10க்கு விற்பனையான முட்டைகோஸ், திங்களன்று ரூ.2க்கு சில மாவட்ட வியா பாரிகள் கொள்முதல் செய்துள்ளனர். இதுகு றித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், தாளவடி மட்டுமின்றி கர்நாடக மாநிலத்தி லும் வழக்கத்தைவிட அதிகளவில் முட்டைக் கோஸ் சாகுபடி செய்யப்பட்டுள்ளதால், சந் தைகளில் முட்டைக்கோஸ் வரத்து எதிர்பார்க் காத வகையில் உள்ளது. ஒரு கிலோ முட் டைக்கோஸ் உற்பத்திக்கு ரூ.8 செலவு செய் யப்படுகிறது. ஆனால், வியாபாரிகள் மிகவும் குறைந்த விலையாக ரூ.2க்கு எங்களிடம் இருந்து கொள்முதல் செய்கின்றனர். இது வேலையாட்கள் கூலிக்குகூட கட்டுபடியா காது. ஒரு ஏக்கரில் முட்டைக்கோஸ் மகசூல் கிடைக்க ரூ.90 ஆயிரம் வரை செலவு செய்த  நிலையில், தற்போது ரூ.30 ஆயிரம் மட்டுமே  கிடைப்பதால் பெரும் நஷ்டத்தை சந்தித்துள் ளோம். எனவே, எங்களுக்கு இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என் றனர்.

சாலை வசதி ஏற்படுத்தித்தர வலியுறுத்தல்

தருமபுரி, பிப்.24- புதுப்பட்டி கிராமத்திற்கு சாலை வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட் டம், மஞ்ச நாயக்கனஹள்ளி ஊராட்சிக்குட் பட்ட புதுப்பட்டி கிராமத்தில் 50க்கும் மேற் பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்திற்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. மேலும், குறுகிய சாலையாகவும் உள்ளது. தாங்களே  சாலையை விரிவாக்கும் பணியை செய்ய லாம் என்று முடிவெடுத்த கிராம மக்கள், பணி  மேற்கொள்ளும் பொழுது அரசு புறம்போக்கு நிலம் தனி நபர் வசம் உள்ளது தெரியவந் தது. எனவே, அந்த நிலத்தை மீட்டு, புதுப் பட்டி கிராமத்திற்கு சென்று வர சாலை வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வகை 1 நீரிழிவு நோய்  சிகிச்சை மையம் திறப்பு

திருப்பூர், பிப்.24 - திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தமிழ் நாடு தேசிய சுகாதார இயக்கம் மற்றும் கோயம்புத்தூரை தலைமையிடமாகக் கொண்ட இதயங்கள் அறக்கட்டளை இணைந்து, திருப்பூர் மாவட்டம் முழுவதும் 200 குழந்தைக ளுக்கான வகை-1 நீரிழிவு சிறப்புத்திட்டம் செவ்வாயன்று தொடங்கப்பட்டது.  இவ்வகை நிரிழிவு சிறப்புத்திட்டத்தின் கீழ் உயர்தா இன்சு லின் பென்-பில் கார்ட்ரிட்ஜ்கள், வலியற்ற 4 மிமீ ஊசிகள், குளு கோமீட்டர் மற்றும் மாதத்திற்கு 100 குளுக்கோஸ் ஸ்ட்ரிப்கள்,  இன்சுலின் பம்ப் சிகிச்சை (ஊசி இல்லா 24 மணி நேர இன்சுலின்  வழங்கல்), 24/7 அவசர உதவி ஹெல்ப்லைன் சேவை வழங் கப்படுகின்றன. இந்த மையத்தில் தவிர்க்கக்கூடிய கண் பார்வை இழப்பை  கண்டறிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய ரெட்டினல் கேமரா, ஒரே சொட்டு இரத்தத்தில் 3-5 நிமி டங்களில் சிறுநீரக செயல்பாடு. HbA1c. ஹீமோகுளோபின் மற் றும் தைராய்டு பரிசோதனை செய்யும் கருவிகள், குளுக் கோஸ் சென்சார்கள், முழுநேர சிறப்பு நீரிழிவு ஆலோசகர்  கண்காணிப்பு உள்ளிட்ட மேம்பட்ட வசதிகள் திருப்பூர் மருத் துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த வகை 1 நீரிழிவு மையம், மாவட்டம் முழுவதும் உள்ள  பொருளாதார ரீதியாக பின்தங்கிய குழந்தைகள் மற்றும் அவர் களின் குடும்பங்களுக்கு பெரும் வரமாகும். ஒவ்வொரு குழந்தைக்கும் மாதத்திற்கு சராசரியாக ரூ.5,000 முதல் ரூ.6,000 வரை செலவாகும் இந்தத் திட்டம்,  சிறந்த மேற்கத்திய நாடுகளுக்கு இணையான சிகிச்சையை வழங்குகிறது. இதன் மூலம் அவசர அனுமதிகள், சிறுநீரக செயலிழப்பு,  கண் பார்வை இழப்பு மற்றும் உயிரிழப்பு போன்றவற்றில் குறிப்பிடத்தக்க அளவில் குறைவு ஏற்படும். இந்த முயற்சி  மூலம் வகை 1 நீரிழிவால் பாதிக்கப்பட்ட எந்த ஒரு ஏழை குழந் தையும் சிறந்த சிகிச்சை இல்லாததால் துன்பப்பட வேண்டிய  நிலை ஏற்படாது. அவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை நடத்துவதற்கு இந்தத் திட்டம் உறுதுணையாக இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மாற்றுத்திறனாளிகள் சேவை மையங்கள்  நான்கு இடங்களில் திறப்பு திருப்பூர், பிப்.24 - திருப்பூர் மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தில்  மாற்றுத் திறனாளிகள் ஒரே இடத்தில் அனைத்து சேவைகளை யும் பெறும் ஓரிட சேவை மையங்கள் நான்கு இடங்களில் திறக் கப்பட்டுள்ளன. கரடிவாவி அரசு மருத்துவமனை, நம்பியாம் பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கணியூர் அரசு  ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் குடிமங்கலம் அரசு மருத்து வமனை. ஆகிய நான்கு இடங்களில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில்  அமைக்கப்பட்டுள்ள இந்த ஓரிட சேவை மையங்களை திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில்  இருந்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார்.  மேலும் தாராபுரம் வட்டம், பொன்னாபுரம் ஆரம்ப சுகாதார  நிலையத்தில் ரூ.39 லட்சம் மதிப்பீட்டில் ஆலோசனை மற்றும்  சந்திப்பு அறை கட்டடம் கட்டும் பணியினை துவக்கி வைத்து,   முதலமைச்சர் விளையாட்டு வீரர்களுக்கான மருத்துவ செலவுடன் கூடிய தனி நபர் விபத்து காப்பீட்டு திட்ட அட்டை  ரூ.5 லட்சம் மதிப்பீட்டில்  70 விளையாட்டு வீரர்களுக்கு வழங் கினார்.

தெரு நாய்களால் கால்நடைகளை இழந்த விவசாயிகளுக்கு இரண்டாவது கட்ட நிவாரணம் ரூ.50.74 லட்சம் ஒதுக்கீடு

திருப்பூர், பிப்.24 – திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் தெரு  நாய்கள் கடித்து உயிரிழந்த கால்நடைக ளுக்கு உரிய நிவாரணத் தொகை விவசாயிக ளுக்கு வழங்குவதற்காக இரண்டாவது கட்ட மாக ரூ.50 லட்சத்து 74 ஆயிரத்து 100 தமிழக  அரசு ஒதுக்கியுள்ளது. திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் தெரு நாய்கள் கடித்து விவசாயிகளின் வளர்ப்பு ஆடுகள், கன்றுகுட்டிகள், கோழிகள் உள் ளிட்ட வளர்ப்பு கால்நடைகள் உயிரிழந்து வந்தன. நாளுக்கு நாள் தெருநாய்கள் கால்ந டைகளைக் கடித்துக் கொல்வது அதிகரித்து  வந்த நிலையில், விவசாயிகள் இப்பிரச்ச னைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், வளர்ப்பு கால்நடைகள் உயிரிழந்ததற்கு உரிய நிவா ரணம் வழங்கவும் கோரிக்கை வைத்தனர். பல்வேறு கட்ட தொடர் போராட்டங் களை முன்னெடுத்த நிலையில், அரசு தெரு நாய்களால் உயிரிழந்த கால்நடைகளுக்கு நிவாரணம் அறிவித்தது. எனினும் சில மாதங் களுக்கு மட்டுமே இந்த தொகை ஒதுக்கீடு  செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட் டது. அதேசமயம் கால்நடைகளை இழந்த விவசாயிகள் பலருக்கும் நிவாரணம் கிடைக் காமல் இருந்தது. அத்துடன் தெரு நாய்கள்  கடித்து விவசாயிகளின் வளர்ப்பு கால்நடை கள் உயிரிழப்பு சம்பவங்களும் தொடர்ந்து வருகின்றன. இதையடுத்து விவசாயிகள் கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க வலியு றுத்தி வந்தனர். இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் தெருநாய்களால் உயிரிழந்த 1389 கால்நடை களுக்கு, அவற்றை இழந்த விவசாயிகள் 358  பேருக்கு நிவாரணத் தொகையாக ரூ.38 லட் சத்து 32 ஆயிரத்து 200 ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஈரோடு மாவட்டத்தில் 564 கால்ந டைகளை இழந்த 88 விவசாயிகளுக்கு நிவா ரணத் தொகை ரூ12 லட்சத்து 41 ஆயிரத்து 900  ஒதுக்கப்பட்டுள்ளது.  இந்த விபரத்தை மாநில செய்தி மற்றும்  தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.