குமரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமி அறிமுக கூட்டம்
5 Apr 2026, 3:36 pm
<p><strong>குமரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமி அறிமுக கூட்டம்</strong></p>
<p>நாகர்கோவில், ஏப்.5- கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பத்மநாபபுரம் தொகுதி சிபிஎம் வேட்பாளர் ஆர். செல்லசுவாமி அறிமுகக் கூட்டம் தக்கலையில் உள்ள திமுக கட்சி அலுவலகத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திமுக மாவட்ட செயலாளரும் அமைச்சருமான த.மனோ தங்கராஜ் தலைமை வகித் தார். மாவட்ட துணைச் செய லாளர்கள் இராஜ், புஷ்ப லீலா ஆல்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் டேவிட் ராஜ போஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் திலீப்குமார், ஒன்றிய செய லாளர்கள் திருவட்டார் வக்கீல் ஜான்சன், தக்கலை அருளானந்த ஜார்ஜ், பத்மநாபபுரம் சுல்பிகான், பேரூர் செயலாளர்கள் சோழராஜா, செல்வகுமார் சதீஷ்,எபனேசர் ஜெபித், பெனிலா ரமேஷ் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பேசினர். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் வேட்பா ளர் ஆர் .செல்லசுவாமி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.வி.பெல்லார்மின், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆர்.லீமாறோஸ், தோ .வில்சன், மூத்த தலைவர் கே.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் உஷா பாசி, ஒன்றியச் செயலாளர் சுஜா ஜாஸ்பின் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அமைச்சர் த.மனோ தங்கராஜ் பேசுகை யில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.செல்ல சுவாமி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைக்க வேண்டும்.அதற்கு உறுதுணையாக நாம் தீவிர மாக பாடுபட வேண்டும் . மதவாத சக்திகளிடம் நமது தொகுதி போய்விடக் கூடாது என்பதனை கருத்தில் கொண்டு கட்சி தலைமை எடுத்துள்ள முடிவை வர வேற்று திறமையாக செயல்படுவோம் என்று தெரி வித்தார்.</p>
